மூவர்ண சாண்ட்விச்அச்சிடுக
26 ஜனவரி 2012 மாலை 08:12

 மூன்று வண்ணத்தில் ஒரு சாண்ட்விச் !குடியரசு தின ஸ்பெஷல் !

தேவையான பொருட்கள்

மூன்று ஸ்லைஸ் பிரட் துண்டுகள்

மல்லி புதினா இலைகள் – தலா ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் – 1

எண்ணெய் – சிறிது

உப்பு – தேவைக்கு சிறிது

காரட் துருவியது – 1

தக்காளி கெட்சப் – சிறிதளவு

பெப்பர் தூள், உப்பு – சிறிது

sandwich

செய்முறை விளக்கம்

முதலில் இலைகளை ஆய்ந்து கழுவி, சிறிது எண்ணையில் பச்சை மிளகாயுடன் வதக்கவும். உப்பு சேர்க்கவும். பிறகு நல்ல மைபோல் சட்னியாக

அரைத்து வைத்துக்கொள்ளவும்.

துருவிய காரட், தக்காளி கெட்சப், பெப்பர் தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைத்துக்கொள்ளவும்.

பிரட்டின் ஓரங்களை நீக்கி விட்டு, முதலில் ஒரு ஸ்லைசை தட்டில் வைக்கவும், அதன் மேல் பச்சை சட்னியை பரப்பினார் போல தடவவும்.

பிறகு, இன்னொரு பிரட் ஸ்லைஸ் வைத்து மூடவும், அதன் மேல் காரட் கலவையை பரப்பவும். மூன்றாவது பிரட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.

விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும். விரைவாக செய்யக்கூடிய சுலபமான சத்துள்ள உணவு. காலை மாலை நேர சிற்றுண்டியாகவும், குழந்தைகளின் பள்ளிக்கூட லஞ்சுக்கும் கொடுத்தனுப்பலாம்.

வழங்கியவர்: உம்மு ரஹீஃபா


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh