بسم الله الرحمن الرحيم
Sunday 19th May 2013 | 09 ரஜப் 1434AH
வானிலை : 27°C
ஃபஜ்ர் : 4:43 amஉதயம் : 5:58 amலுஹர் : 12:14 pm
அஸர் : 3:37 pmமஃரிப் : 6:31 pmஇஷா : 7:46 pm
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மாம்பழ ஃபிர்னிஅச்சிடுகமின்-அஞ்சல்
15 மே 2012 காலை 08:49

மாம்பழம் என்றாலே எல்லாருக்கும் பிடித்த ஒரு பழம். ஒரு ஸ்வீட் வடிவில் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? வாங்க செய்யலாம் எளிமையான மாம்பழ ஃபிர்னி !

mango_phirni_

தேவையானவை

பால் - 1/2 லிட்டர்

முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 5 to 6

சீனி - தேவைக்கு

குங்குமப்பூ- சிறிது

ஏலக்காய் - 3 தட்டியது

ரவை - 3 டேபிள் ஸ்பூன்

மாம்பழ கூழ் - 1 கப்

மாம்பழம் - சிறிதாக நறுக்கியது

நட்ஸ் - அலங்கரிக்க

செய்முறை விளக்கம்

  • பாலை நன்றாக காய்ச்சவும். ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
  • முந்திரி நீங்கலாக மற்ற நட்ஸ்களை வெந்நீரில் போட்டு தோல் நீக்கி நல்ல மைபோல் விழுதாக அரைத்தெடுத்து பாலில் சேர்த்து மேலும் கொஞ்ச நிமிடங்கள் காய்ச்சவும்.
  • சுவைகேர்ப்ப சீனி சேர்க்கவும்.
  • இன்னொரு பேனில் சிறிது நெய்விட்டு ரவையை லேசாக வறுத்தெடுக்கவும்.
  • இப்பொழுது பால் கலவையில் இந்த வறுத்த ரவையை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.
  • பாலும் ரவையும் சேர்ந்து ஓரளவு திக்காக வரும் நேரத்தில் அடுப்பை அனைத்துவிடவும்.
  • இப்பொழுது பால் கலவையை ஆற விடவும்.
  • வெதுவெதுப்பான தன்மையில் இருக்கும்போது மாம்பழ கூழ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • கடைசியாக நறுக்கிய மாம்பழ துண்டங்கள் மற்றும் நட்ஸ் பரப்பி அலங்கரிக்கவும்.
  • இப்போது மாம்பழ ஃபிர்னி ரெடி! விருப்பபட்டால் குளிரூட்டி சாப்பிடலாம்.

குறிப்பு:

மாம்பழ கூழ் ஹோம்மேட் அல்லது ரெடிமேட் பயன்படுத்தலாம். நட்ஸ் வகை ஏதாவது ஒன்று இருந்தாலும் பயன்படுத்தலாம். குங்குமப்பூ இருந்தால் சேர்க்கலாம். கட்டாயமில்லை. ஃபிர்னி மிகவும் இறுக்கமாகவோ இலக்கமாகவோ இருக்கக்கூடாது. மாம்பழம் சேர்க்காமல் சாதாரண ஃபிர்னியாகவும் செய்யலாம்.

வழங்கியவர்: உம்மு ரஹீஃபா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சமீபத்திய வாசகர் கருத்துக்கள்


சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com