ரமழான் ஸ்பெஷல் லேயர் புட்டிங்அச்சிடுக
07 ஆகஸ்ட் 2012 மாலை 09:09

 இஃப்தார் நேரங்களில் இந்த புட்டிங் செய்து சாப்பிடுவது வயிற்றிக்கும், வாய்க்கும், கண்களுக்கும் குளிரூட்டும். ஒன்ஸ் மோர் கேட்டு கேட்டு குட்டீஸ்கள் சாப்பிடக்கூடிய சத்தான உணவு இந்த லேயர் புட்டிங்.

ifthar_snaps_018_KN

தேவையான பொருட்கள்

ஸ்வீட் பிரட் – ஓரம் நீக்கியது

பால் – ¼ லிட்டர்

கஸ்டர்ட் பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்

சீனி – தேவைக்கு

ஆப்பிள், திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், ஆரஞ்சுசுளைகள் - சிறிதாக நறுக்கியது ஒரு கிண்ணம் நிறைய

ஹலால் ஜெல்லி பாக்கட் - (ஏதாவது ஒரு பிலேவர் )

மிக்ஸ்ட் நட்ஸ் – சிறிதளவு

ஐஸ்கிரீம் / விப்ட் கிரீம் – தேவைக்கு

வேஃபர் பிஸ்கட் – அலங்கரிக்க ( விருப்பமிருந்தால் )

செய்முறை

 • முதலில் தண்ணீரில் கஸ்டர்ட் பவுடரை கட்டிபடாமல் கரைத்து வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி கொதிக்கும்போது கஸ்டர்ட் கலவையை ஊற்றி சீனியும் சேர்த்து காய்ச்சி இறக்கி நன்றாக ஆறவிடவும்.
 • பழங்களை எல்லாம் சிறிய துண்டங்களாக நறுக்கி தயாராக வைக்கவும். ஜெல்லி பாக்கில் உள்ள குறிப்பின்படி காய்ச்சி நன்றாக செட் ஆக விடவும். மிக்ஸ்ட் நட்ஸ் கொரகொரபாக்கி வைக்கவும்.
 • லேயர் அடுக்கும் முறை:
 • ஒரு கண்ணாடி கப் அல்லது பவுள் எடுத்துக்கொள்ளவும்.
 • முதலில் கப் அடியின் அளவிற்கு ஏற்ப ப்ரெட்டை வெட்டி உள்ளே வைக்கவும்.
 • செட் ஆகி இருக்கும் ஜெல்லியை வெட்டி பிரட் மேல் வைக்கவும்.
 • கஸ்டர்ட் கலவை ஜெல்லி மேல் இரண்டு மூன்று ஸ்பூன் சேர்த்து சமப்படுத்தவும்.
 • பழக்கலவையை கஸ்டர்டு மேலே சிறிது போடவும்.
 • உயரமான கப்பாக இருந்தால் இதே ஸ்டெப்பை மீண்டும் பிரட் இல் இருந்து ஆரம்பித்து மேற்கூறியபடி செய்யவும்.
 • இப்படி விருப்பம் போல எத்தனை அடுக்கு வேண்டுமானாலும் வைக்கலாம். கடைசியாக பரிமாறும் நேரத்தில் மீதி ஜெல்லி இருந்தால் மேலே போட்டு ஐஸ்கிரீம் அல்லது விப்டு கிரீம் போட்டு அதன் மேல் மிக்ஸ்டு நட்ஸ் தூவவும்.
 • வேஃபர் பிஸ்கட் சொருகி, திராட்சை அல்லது செர்ரிப்பழம் வைத்து அலங்கரித்து குளிர்ச்சியாக சில்லென்று பரிமாறவும்.
 • இதே அடுக்கு முறையை தேவைக்கேற்ப கப் இறுதி வரைக்கும் செய்யலாம். சாப்பிடும் போது கீழிருந்து மேலாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ifthar_snaps_079_KN

குறிப்பு:

கஸ்டர்ட் கலவை ஓரளவு திக்காக இருப்பது நல்லது.

ஜெல்லி டார்க் கலராக அதாவது ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ, ஆரஞ்சு, போன்றவைகளாக

இருந்தால் பார்க்க கலர்புல்லாக இருக்கும்.

வழங்கியவர் : உம்மு ரஹீ ஃபா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh