بسم الله الرحمن الرحيم
Tuesday 20th February 2018 | 04 ஜமாதுல் ஆஹிர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இஃப்தார் காலிப்ளவர் கிரிஸ்பீஸ் !அச்சிடுகமின்-அஞ்சல்
10 ஆகஸ்ட் 2012 மாலை 10:42

 பொரித்து எடுத்ததும் காலியாகிவிடும் இந்த கலக்கலான காலிப்ளவர் கிரிஸ்பீஸ்!

தேவையானவை

காலிப்ளவர் – சிறியது ஒன்று

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

சிக்கன் 65 மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்

மசாலா தூள் – சிறிது

கடலை மாவு – 1 கப்

அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

சோடா உப்பு – இரண்டு பின்ச்

மல்லி கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க

cauliflower-crispies

செய்முறை விளக்கம்

  • காலிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்தெடுத்து வைக்கவும்.
  • கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து பூக்களை போட்டு அரை வேக்காடு வெந்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாயகன்ற பவுளில் காலிப்ளவரை எடுத்துக்கொண்டு அதில் சிக்கன் 65 மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, மசாலா தூள், மல்லி கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு மணிநேரமாவது ஊறவிடவும்.
  • அப்படி ஊறவிட்டால் தான் பச்சை வாடை இல்லாமல் மசாலா நன்றாக பூக்களில் ஓட்டும்.
  • இப்போது கடலை மாவு, அரிசிமாவு, சோடா உப்பு , தேவைகேற்ப உப்பு தேவைக்கு சிறிதளவு தண்ணீரும் சேர்த்து பிசைந்து எண்ணையில் சிவக்க பொரித்தெடுக்கவும்.
  • சுவையான மொறுமொறுப்பான காலிப்ளவர் கிர்ஸ்பீஸ் ரெடி !

பொரித்து எடுத்ததும் சுடச்சுட இந்த காலிப்ளவர் கிரிஸ்பீசை சாப்பிட்டால் இருக்கும் இடம் தெரியாமால் காலியாகிவிடும்.

குறிப்பு: தண்ணீர் நிறைய சேர்த்தால் நீர்த்துவிடும். அளவாக சேர்ந்தார்போல கலவை இருக்கவேண்டும். அப்போதுதான் மொறுமொறுப்பாக வரும்.

வழங்கியவர் : உம்மு ரஹீஃபா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரம் செய்ய வருபவர்கள்; வெளியூர்களில் இருந்து நகருக்கு புதிதாக குடிவருபவர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை
பிப். 08 இன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
CCTV கேமராக்கள் நிறுவ அலட்சியம் காட்டும் காயல்பட்டினம் நகராட்சிக்கு கெடு விதிக்கவும்: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை!*
கடையக்குடி, கற்புடையார்பள்ளி வட்டம் என்ற அதிகாரப்பூர்வ பெயர்களை பயன்படுத்துக_: மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை மற்றும் ஊடகத்துறையினரிடம் நடப்பது என்ன? குழுமம் வேண்டுகோள்!*
பேருந்து கட்டணங்கள்: மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com