بسم الله الرحمن الرحيم
Sunday 22nd July 2018 | 09 துல்கஃதா 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பாஞ்ச் பழரசம்அச்சிடுகமின்-அஞ்சல்
19 மே 2011 மாலை 09:55

பத்தே நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய பருகிட சுவைமிக்க பஸ்டாண்டு பழரசம்.

தேவையானவை

  • அன்னாசிப்பழம் - 4 ஸ்லைஸ்
  • அப்பிள் பழம் - பாதி
  • வாழைப்பழம் - 3 நன்றாக பழுத்தது
  • மாம்பழம் - 1 சிறியது
  • திராட்சைப்பழம் (கருப்பு or பச்சை) - 10
  • சீனி - தேவைக்கு
  • அன்னாசி எசன்ஸ் - ஒரு துளி ( optional)
  • ஆரஞ்சு கலர் - ஒரு துளி / சிட்டிகை (optional)
  • தண்ணீர் -- ஒரு கப்

palarasam

செய்முறை

  • முதலில் மேலே கூறி இருக்கும் பழங்களின் (திராட்சை தவிர ) தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய பழங்கள், சீனி, எசன்ஸ், மற்றும் கலர் சேர்க்கவும்.
  • ஒரு அடிகனமான டம்ளரின் அடிப்பாகத்தின் உதவியால் பழங்களை தட்டி கொரகொராப்பக மசித்துகொள்ளவும். வாயில் பழங்கள் தட்டுபடுமாறு பார்த்துக்கொள்ளவும்.
  • இப்போது தண்ணீர் மற்றும் நறுக்கிய திராட்சயை சேர்த்து குளிர வைத்து ஜில்லுனு பரிமாறவும்.

குறிப்பு : இதற்க்கு அன்னாசி மிக முக்கியம். இதை மிக்ஸ்யில் போட்டு மசிக்ககூடாது. அதன் சுவையே மாறிவிடும். அதே நேரம் ரொம்ப நீர்க்கவுமோ அல்லது கெட்டியாகவுமோ இருக்ககூடாது.

பெரும்பாலும் பஸ்டாண்டுகளில் விற்பனையாகும் இந்த ஐந்துக்கனி பழரசத்தை வீட்டிலேயே சுத்தமான முறையில் எளிமையாக செய்யலாம். இந்த பாஞ்ச் பழரசம் நோன்பு காலத்திற்கும் வெயில் காலத்திற்கும் ஏற்ற சத்துள்ள பானம். குழந்தைகள் கண்டிப்பாக ஒன்ஸ்மோர் கேட்டு குடிப்பார்கள்.

வழங்கியவர்: முஃப்லிஹா தவ்ஃபீக் (USA)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com