بسم الله الرحمن الرحيم
Sunday 22nd July 2018 | 09 துல்கஃதா 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பாச்சுலர் சமையல் - சிக்கன் நூடுல்ஸ்அச்சிடுகமின்-அஞ்சல்
04 ஜூன் 2011 மாலை 10:17

தேவையான பொருள்கள்.

சிக்கன் (எலும்பு இல்லாத நெஞ்சுப் பகுதி ) - 5 துண்டுகள்

பீன்ஸ் - 15

காரெட் - 3

முட்டை கோஸ் - கொஞ்சம்

பெரிய வெங்காயம் – 2

குடை மிளகாய் - 1 - என்னது.. இல்லையா..பரவாஇல்லை

முட்டை - 1 இல்லையா..பரவாஇல்லை

அஜினமோட்டோ - கொஞ்சம் - இல்லையா..பரவாஇல்லை

சோயா சாஸ் - கொஞ்சம் - இல்லையா..பரவாஇல்லை

சில்லி சாஸ் - கொஞ்சம் - இல்லையா..பரவாஇல்லை

நூடுல்ஸ் - 1 பாக்கெட்(300 கிராம்) இதுவும் இல்லையா...கிழிஞ்சுது கிருஷ்ணகிரி...யப்பா போயி வாங்கிக்கிட்டு வாங்கப்பா..நூடுல்ஸ் இல்லாமல் சிக்கன் நூடுல்ஸ் செய்யவா.

மிளகு தூள் - கொஞ்சம்,

இஞ்சிப்பூண்டு விழுது - கொஞ்சம்

உப்பு - கொஞ்சம்

எண்ணெய் - கொஞ்சம்..

முதலில் கோழி துண்டுக்களை உப்பு போட்டு நன்கு வேக வையுங்க. சிலருக்கு இந்த பச்சை வாடை பிடிக்காது.ஆகவே கொஞ்சம் மிளகு தூள், கொஞ்சம் இஞ்சிப்பூண்டு விழுது போடுங்க.

வெந்தவுடன் தண்ணீரை வடியவிட்டு (இந்த தண்ணீர் தேவை..கீழே ஊத்தி விடாதீர்கள்), ஆறியவுடன், சிறு சிறு துண்டாக உதிர்த்துக்கொள்ளுங்க.

கை சுட்டுட்டா...சுட்டுட்டா...அதான் நல்ல படித்து பார்க்கணும்..'ஆறியவுடன்' என்று எழுதி உள்ளேன் அல்லவா..அவசரம்..

அப்புறம் எல்லாக் காய்கறிகளையும் உங்கள் ரசனைக்கு ஏற்ப வெட்டி வதக்கி வைத்துக்கொள்ளுங்க. வதக்கும் போது கொஞ்சம் மிளகு தூள், உப்பு, இஞ்சிப்பூண்டு விழுது போடனும்.என்ன முழிக்கிறீங்க.. இருங்க.. இருங்க..

பொறிப்பானை- அதான் ப்ரைபான் அடுப்பில் வைத்து, மிதமான நெருப்பில்,கொஞ்சம் எண்ணெய் விட்டு, அதில் முதலில் வெங்காயம் போட்டு சிறிது வெந்ததும், பீன்ஸை போட்டு வதக்கவும், அது கால்வாசி வெந்ததும், காரட்டை போட்டு அது கால் வாசி வெந்ததும், முட்டைக்கோசை போட்டு வேகவைக்கவும்.

இத்துடன் உப்பு, மிளகு தூள் போடவும்.முட்டைக்கோஸ் முக்கால் பதம் வெந்ததும் இஞ்சிப்பூண்டு விழுது போட்டு வதக்கனும். இப்படி விவரமாகவா சொல்லனும்.. அப்படி தானே..

இனி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதி வந்ததும் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, நூடுல்சை கொஞ்சம் நொறுக்கி போடவும். நன்கு (90%)வெந்ததும் ஒரு அரிப்பில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி வைத்துக்கொள்ளுங்க.

நவ், அதான் இப்போது நூடுல்ஸ், வெந்த காய்கறி, பிய்த்து வைத்து இருந்த கோழி போட்டு நன்கு கிளறி, கொஞ்சம் காரத்திற்கு ஏற்ப்ப மிளகு தூள் தூவி, இருந்தால் கொஞ்சம் மல்லி இலை தூவி, அடுப்பில் தம்மில் வையுங்கோ.

இது டிரை ஆக இருந்தால் கோழி வேக வைத்த தண்ணீர் உள்ளதே அதை அதில் தெளித்து கொள்ளலாம். ஒரு ஆவி வந்தவுடன் பரிமாறுங்கள் (பயம் வேண்டாம் இந்த 'ஆவி' வேறு, ஒன்றும் செய்யாது)

நன்றாக உள்ளதா. என்னது..புரியலே...சப்தமாக சொல்லுங்க..

நன்றாக தான் உள்ளது..ஆனா.. ஹோட்டலில் சாப்பிட்ட மாதிரி இல்லையா...

எப்படி இருக்கும், அதான் பல சாமான்கள் இல்லையே..இல்லையே என்று சொன்னீர்களே..

அந்த ருசி தேவை என்றால், கொஞ்சம் அஜினமோட்டோ, சோயா சாஸ், குடை மிளகாய், மற்றும் முட்டையை பொரித்து தூள் பண்ணி சேர்த்தால் அந்த சுவை வந்து விடும்.

சிக்கனுக்கு பதிலாக மட்டன், இறால், டின் மீன் போன்ற வைகளைக் கொண்டு வித. வித..மா.. ருசி ருசி யா. சமையுங்க.

அப்புறம்..உங்களுக்கு ஒரு புதிர்.. இந்த பதிவில் எத்தனை தடவை நான் "கொஞ்சம்" என்ற வார்த்தையை உபயோகித்து உள்ளேன். கரெக்ட்.. சரி.. என்னது பரிசா?.. KAYALNEWS.COM உடைய ADMINISTRATOR தருவார்.

சாளை S.I.ஜியாவுதீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com