காய்கறி பிரட் கட்லட்!அச்சிடுக
06 ஜூன் 2011 மாலை 01:19

பிரட்டுனாலே காச்சல்காரன் சாப்பிடுறது ,உடம்பு சரி இல்லாதவன் சாப்பிடுறது அப்படின்னு இருந்த காலம் எல்லாம் மலை ஏறி போச்சுங்க . எங்கள மாதிரி வெளி நாட்டுல இருக்குற பாச்சிலருக்கு பிரட்டு தாங்க கலையில மெயின் பசியாரம் ( அதுதாங்க டிபன்) .காலையில ஏழு மணிக்கு முளிச்சமா ,குளிச்சமா, ரோஸ்ட் பண்ணின இரண்டு பிரட்ட கையில எடுத்துட்டு கிளம்பிட்டே இருப்போம் . ஆனால் ஊருக்கு வந்த செண்டு அடிச்சுட்டு கலையில பசியாரதுக்கு கறி அடைய கொண்டா ,வட்டிலப்பத்த கொண்டா, இடி அப்பத்த கொண்டா அப்படின்னு கேக்குறது எல்லாம் வேற விஷயம் .

சரி இப்பம் நம்ம மேட்டருக்கு வருவோம் . ஒரு பாக்கட் பிரட் இருந்தாலே போதும்ங்க நம்ம பல வகையான பண்டம் செய்து

அசத்தலாம். இப்பம் கட்லட் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம் . முதல என்னென்ன பொருள் எல்லாம் தேவைன்னு பார்ப்போம் .

பிரட் துண்டு - 10

கேரட் - 2

உருளை கிழங்கு - 2

குடமிளகாய் - 1

கொத்தமல்லி - கொஞ்சக்கானு

பச்சைமிளகாய் -1

எண்ணை - தேயிலை கரண்டில காவாசி ( 1/4)

நெய் - 6 தேயிலை கரண்டி ( எங்க வீட்டுல ஒரு ஸ்பூன் தான் இருக்கு அப்படின்னு காமெடி பண்ணாம 6 கரண்டி நெய்ய எடுத்து வைங்க)

உப்பு - தேவையான அளவு

முதல உருளை கிழங்க நல்ல வேக வச்சு , அதோட தோல உரிச்சி நல்ல பிணைஞ்சு ( மசிச்சு ) வச்சுகோங்க, அப்புறம் பிரட்ட நல்ல பொடிச்சு வச்சுட்டு அந்த கையோட கொடமிளகாவையும் பொடிசா நறுக்கி வச்சுகோங்க , அப்புறம் கேரட்ட மட்டும் ஏன் பாக்கி வச்சு இருக்கீங்க அதையும் கொஞ்சம் துருவி வச்சுகோங்க. இனி அந்த வானவில்லா எடுங்க ( அய்யய்யோ அந்த வார்த்தை வர மாட்டிருக்கே நம்ம தமிழில கொஞ்சம் வீக்கு அப்பம் இங்க்லீஸ்ல எப்படின்னு கேட்காதீங்க...)

அதுதாங்க பொறிக்கன்சட்டிய எடுங்கன்னு சொல்ல வந்தேன். கேரட்டையும் கொடமிளகாவையும் லேஸா எண்ணையில வதக்கவும் அப்புறம் அதோடு மசிச்சு வச்ச உருளை கிழங்கு ,பிரட் தூள் , நறுக்கிய கொத்தமல்லி ,நறுக்கிய பச்சை மிளகாய்,தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து..

( உப்பில்லாத பண்டம் குப்பையிலே அப்படின்னு சொல்லுவாங்க அதுனால தேவையான அளவுக்கு சேருங்க அதிகமா சேர்த்த அப்புறம் உப்புள்ள பண்டமும் குப்பைக்கு போய்டும் ) ஒரு கிண்டு கிண்டி அப்படி கொஞ்ச நேரம் சிம்ல வைங்க . அப்புறம் கொஞ்சம் ஆருனதும் அதை நல்ல பிணைஞ்சு சின்ன சின்னதா கட்லட் வடிவத்துல தட்டிகோங்க அப்புறம் தோசை கல்லுல கொஞ்சம் நெய்ய விட்டு சுட்டு எடுத்த சுவையான கட்லெட் ரெடி .

கஞ்சிக்கும் ,தேயிலைக்கும் இது சூப்பர் காம்பினேஷன்.

இன்ஷா அல்லாஹ் நெக்ஸ்ட் மீண்டும் புதிய ரெஸ்பியுடன் மீட் பண்ணுறேன்

அன்பு சகோதரன்

முத்துவாப்பா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh