بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பூரியும் சன்னாவும்அச்சிடுகமின்-அஞ்சல்
12 செப்டம்பர் 2011 காலை 03:22

 சிற்றுண்டிக்கு ஹோட்டல் போகும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் விரும்பி ஆர்டர் பண்ணுவது பூரி மசாலா தான். பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாதான் பரிமாறப்படும். இங்கு நான் சற்று மாற்றமாக கொண்டைக்கடலை மசாலாவோடு பூரி செய்ய எளிமையான முறையை தரவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்.

தேவையானவை

பூரி செய்ய

மைதா மாவு - 2 கப்

கோதுமை மாவு - 1/4 கப்

ரவை - 1 டேபிள் ஸ்பூன்

தயிர் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

தண்ணீர் - தேவைக்கு

மசாலா செய்ய

கொண்டைக்கடலை - 2 கப்

வெங்காயம் - 1 பெரியது

தக்காளி - 1 பெரியது (அரைத்தது)

பட்டை, ஏலம் - சிறிது

நச்சீரகம், பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மசாலா தூள் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

மல்லி இலை - சிறிது

உப்பு - தேவைக்கு

பூரி செய்முறை

பூரி செய்ய கொடுக்கபட்ட அளவில் அனைத்தையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு எண்ணெய்யையும் தண்ணீரையும் தேவையான அளவு இடையிடையே சேர்த்து பிசைந்து காற்று புகாமல் மூடி போட்டு ஒரு மணி நேரம் வைக்கவும்.

மாவை சிறு உருண்டைகளாக எடுத்து மைதா மாவில் தொட்டுகொண்டு சிறிய வட்டங்களாக மீடியமான தடிமனில் இட்டு சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மசாலா செய்முறை

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து பின் மறுநாள் பிரஷர் குக்கரில் கடலையை போட்டு சிறிது உப்பும் தேவைக்கு தண்ணீரும் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,ஏலம், நச்சீரகம்,பெருஞ்சீரகம் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு பொரிய விடவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்.

இப்போது அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்க்கவும். தேவைக்கு உப்பும், மசாலா தூளும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.

கடைசியாக வெந்த கொண்டைக்கடலையை சேர்த்து தேவைக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக மசாலாவோடு சேர்ந்து வரும் வரை கொதிக்கவிட்டு மல்லி இலை தூவி பரிமாறவும்.

இப்போது புஷ் புஷ் என்ற பூரியும் அதற்க்கு இணையான சன்னா மசாலாவும் தயார்!

poori-chenna

குறிப்பு

மசாலாவில் விருப்பமிருந்தால் தேங்காய் அரைத்து சேர்க்கலாம்.

சாப்பிட சில நிமிடம் முன்பு பூரியை பொரித்தால்தான் நன்கு உப்பலாகவும் சாப்பிட மிருதுவாகவும் இருக்கும். பூரிக்கு வட்டமாக தேய்க்கும் போது ரொம்ப மெல்லியதாகவோ தடியாகவோ இடக்கூடாது. மீடியமாக இருந்தால்தான் பூரி உப்பும்.

புரதம், மாவுசத்து மற்றும் நார் சத்து நிறைந்த இந்த கொண்டைக்கடலை எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. இது போன்ற கடலை வகைகளை சிறு பருவத்திலேயே சாப்பிட்டு பழகுவது நல்லது.

ஆக்கம் : உம்மு ரஹீஃபா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல் குப்பை அரசியல்: பாகம் 18 - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கும் இடம் பயோ காஸ் திட்டத்திற்கு பொருத்தமில்லாத இடம் என உணர்த்திய - டெண்டர் விதிமுறைகள்!*
காயல் குப்பை அரசியல் (பாகம் 17): “காயல்பட்டினம் & ஆறுமுகநேரிக்குப் பொதுவான குப்பைக் கிடங்கு அமைய இரு ஊர் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வேண்டுகோள்!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!
காயல் குப்பை அரசியல்: பாகம் 16 - நகராட்சி ஏற்பாட்டில் - ஆற்காடு நகராட்சிக்கு சென்று வந்த நகர்மன்ற உறுப்பினர்கள்!
ஓகி புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குடும்பத்தினர் தீவிர போராட்டம்!
காயல் குப்பை அரசியல்: பாகம் 15 - எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆனாலும் சரி...?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com