بسم الله الرحمن الرحيم
Sunday 21st July 2019 | 18 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
குழந்தைகளுக்கான இருதய நோய்க்கு இலவச இருதய அறுவை சிகிச்சை விரைவில்..HEART FOR HEART அமைப்பு முயற்சி!! அச்சிடுகமின்-அஞ்சல்
08 ஜனவரி 2012 மாலை 03:11

தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் குழந்தைகள் , பிறக்கும் போதே இருதய நோயுடன் பிறக்கிறார்கள். இதில் அநேக குழந்தைகளுக்கு, முதல் வருடத்திலே அறுவை சிகிச்சைதேவை படுகிறது.

kid_heart

அநேகமான இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை ஆகிறது. டாக்டர் பீஸ் கூட கழித்து விட்டால், அறுவை அரங்கு கட்டணம், அறுவை சிகிச்சை disposable உபகரனங்கள் கட்டணம் , மருந்துகள், உள்ளிட்டவை மட்டுமே ஒரு லட்சம் வரை வருகிறது. இந்த செலவை தாங்க முடியாத ஏழைகள், மற்றும் நடுத்தர வர்கத்தினர் , அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர்.

ஆனால் அரசு மருத்துவமனை , அறுவை செய்யும் வசதியை விட, நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், பல நோயுற்ற குழந்தைகள்,waiting list என்னும் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகிறார்கள்.

இந்த காத்திருப்போர் பட்டியல் பல மாதம் முதல் ஆண்டு வரை நீளுகிறது..நோயின் அவசர தன்மை, மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் , அறுவை சிகிச்சை செய்யபடுகிறது.இதனால், காத்திருக்கும் போதே அநேக குழந்தைகள் இறந்து விடுகிறது.

சென்னையில் புகழ் பெற்ற எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவ மனையான ICH & HC இல் மட்டும் ஒரு சமயத்தில் முன்னூறு குழந்தைகள், இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்,இவர்கள் காத்திருக்கும் காலம் ஆண்டுகள் வரை நீளுகிறது.

இந்த நிலையை  போக்க மூன்று இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், எந்த டாக்டர் பீஸ் இல்லாமலும் அறுவை சிகிச்சை செய்ய முன்வந்து உள்ளார்கள்.

மருத்துவமனை மற்றும் மருந்து உபகரண கட்டணத்திற்கு , capital என்னும் பணம் ரெடி பண்ண , ஒரு பொது நல அமைப்பான HEART 4 HEART ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ள பட்டுவருகிறது.

இந்த அமைப்பு சென்னை KJ மருத்துவமனை மற்றும் பாரதிராஜா மருத்துவமனையுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி , அந்த மருத்துவமனைகள் குறைந்த மருத்துவமனை செலவை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளத தெரிகிறது.

இந்த மருத்துவர்கள் , வேறு TRUST மூலம் இதுவரை 159 இலவச இருதய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர்..இன்னும் 600 குழந்தைகளுக்கு, இருதய அறுவை சிகிச்சை தேவை படுகிறது.. ஆனால், இதற்கு மேல் TRUST னால், இலவசத்தை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது..

இந்த சேவை பெற ஆண்டு வருமானம் 72000  ரூபாய் மற்றும் அதற்கு  கீழ் உள்ளவர்கள் , இலவசமாகவும், ஆண்டு வருமானம் 72000 ரூபாய் முதல் இரண்டு லட்சம் வரை உள்ளவர்களுக்கு, குறைந்த கட்ட னத்திலும்,சிகிச்சை கிடைக்கும்

இந்த trust தனி நபர்கள், அரசு மற்றும் CORPORATE இடம் மிருந்து நிதிவுதவியை எதிர்நோக்கி இருக்கிறது.பொதுமக்கள் ரூபாய் நூறு முதல் கொண்டு நன்கொடை அளிக்கலாம் என்று டாக்டர் ஸ்ரீமதி , முன்னால் துறை தலைவர் , குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை பிரிவு, ICH & HC , சென்னை மருத்துவ கல்லூரி , தெரிவித்து உள்ளார்..இது பற்றி மேலும் விவரம், வெளிவரும்போது அறிய தரப்படும்..

குறிப்பு:  நோயுற்ற குழந்தைகளுக்கென,, இந்திய பிரதமர் RELIEF FUND என்று உள்ளது..

செய்திகள் : TIMES OF INDIA DATE 7 டிசம்பர் 2012 பக்கம் 6

தகவல் :

டாக்டர் த முஹம்மது கிஸார், MBBS. DCH,

சென்னை,

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com