"புற்றுநோய்" ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தலும், தடுக்கும் முறைகளும்! (பாகம் -1)அச்சிடுக
10 பிப்ரவரி 2012 மாலை 03:44

கேன்சர் என்றால் என்ன ? சிறிய விளக்கம்

புற்று என்பது ஒரு அசாதாரமான செல்களின் தொகுப்பு (abnormal mass of cells ). இந்த கேன்சர் செல்களின் வளர்ச்சியில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும், சீரற்ற நிலையிலும், பொதுவான நார்மல் செல்களில் ஏற்படும் திட்டமிட்ட செல்களின் இறப்பு ( programmed cell death ) இன்றியும், ஒருதான் தோன்றித்தனமாக வளர்ந்து (உதாரணம் ,சாதாரண செல் வளர்ச்சியில், ஒரு செல் இரண்டாக பின் அது நான்கு ,எட்டு, பதினாறு  என்று ஒழுங்காக ஒரே அளவில் செல் பிரிந்து வளரும்.. ஆனால் கான்செர் செல் ஒன்று பத்தாக வேறு வேறு அளவிலும், பத்து பத்தாயிரமாக .ஆக இப்படி கட்டுபாடின்றி செல் பிரிந்து வளரும்.

cancer-cells1

இப்படி கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் கான்செர் செல்கள், உடலில் ஒரு உறுப்பில் அந்த உறுப்பு தாங்கும் திறனையும் தாண்டி( உதாரணம் 100 சாதரான செல் இருக்க வேண்டிய இடத்தில் 10,000 செல் இருப்பதால் செல் இடபற்றாகுறை ஏற்பட்டு), அந்த உறுப்பு அதன் சாதாரண அளவை விட பெரிதாக வீங்குகிறது. இதற்கு தான் tumour என்றோ உறுப்பில் வீக்கத்தை organomegaly என்றோ அழைப்பர்.

colon-cancer-cell-diagram

பின்னர் படிப்படியாக பக்கத்து உடல் உறுப்புகளையும் நேரடியாக ஆக்கிரமித்து , பின்னர் இரத்தம் (blood ), நிணநீர் (lymphatic fluid ) வழியாக உடலின் மற்ற இடங்களுக்குபரவுகிறது. ஒரு நார்மல் செல் கேன்சர் செல்லாக மாறுவதற்கு , ஒரு தூண்டுகோல் (carcinogen) பொதுவாக இருக்கும்.ஆனால் கேன்சராக வளர்ந்தபின், அந்த carcinogen தனது தூண்டுகோளை நிறுத்தினாலும் , ஏற்கனவே ஏற்பட்ட கேன்சர் மாற்றம் , சற்றும் குறையாமல், புதிய வேகத்தில்வளரும். உதாரணமாக புகைப்பதால் , நுரையீரல் புற்று நோய் ஆரம்பித்து விட்டது என்று வைத்து கொள்வோம்..புகைப்பதை நிறுத்திய பிறகும்,அந்த புற்று தனது இயல்பான வேகத்தில் வளருமே ஒழிய, புகைப்பதை விட்டதால் வேகம் குறைவதோ அல்லது நிற்பதோ கிடையாது.

IMPORTANCE OF EARLY DIGNOSIS OF CANCER

ஆரம்ப கட்டத்தில் கேன்சரை கண்டுபிடிபத்தின் முக்கியத்துவம்

எல்லா வகையான கேன்சர் களையும், ஆரம்பகாலத்தில் கண்டுபிடித்து விட்டால், குணப்படுத்துவது மிக எளிது.ஆரம்பகால கேன்சரின் நோய் அறிகுறி, மிக இலகுவான ஆரம்ப கால சோதனை, மூலம் இதை கண்டு பிடிப்பது எளிது என்றாலும், சில ஆரம்பகால கேன்சரின் அறிகுறி, சாதாரண மற்ற நோய்களின் அறிகுறி மாதிரியாக இருப்பதால், சில கேன்சர் அறிகுறி இருந்தால் பயப்பட தேவை இல்லை.

இந்த அறிகுறிகளுடன், கேன்சருக்கான பிரத்தியோக அறிகுறிகளான, எடை குறைந்து போதல், பசி இல்லாமை, இரத்த சோகை, எளிதில் சோர்வு அடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், டாக்டரை அணுகி தனக்கு கேன்சர் இல்லை என்பதை உறுதி ப்படுத்தி கொள்ளுங்கள்.

அநேக கேன்சர் அது அட்வான்ஸ் நிலைக்கு  போவதற்கு காரணம், ஆரம்பகால அறிகுறிகள் தெரிந்தும் அதை உதாசீனபடுத்தி, கண்டு கொள்ளாமல் இருப்பது, பெண்கள் மார்பில் கட்டி தென்பட்ட உடன் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு அது முற்றிய உடன் பரிசோதனை செய்தல், பிறப்பு உறுப்பில் கேன்சருக்கான மாற்றம் தெரிந்தும் அதை மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்காமல், அட்வான்ஸ் ஆன உடன் பரிசோதிப்பது தான் காரணம்.

மற்றொரு காரணம், ஆரம்ப நிலையை கண்டுபிடிக்க, பரிசோதனை செய்தால், நமக்கு ஏதாவது நோய் என்று வந்து விடுமோ என்ற பயம் காரணமாக, ஸ்க்ரீனிங் டெஸ்ட் பண்ணாமல் தவிர்த்தல்..ஆரம்ப காலத்தில் கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டு, முற்றிலும் குணமாகி சராசரி வாழ்க்கை வாழ்பவர்களை அதிகம் நாம் பார்க்கிறோம்

CANCER GENE -ONCOGENE

கேன்சர் மரபணு -ONCOGENE

கேன்சர் குடும்பத்தில் இரத்த சொந்தங்களில் வருமா? என்றால், ஒரு சில கேன்சர் மட்டும் சில குறைவான சதவிகிதத்தில், (மார்பகம்,இரத்தம்,சினைப்பை ) குடும்பத்துக்குள் வரும் வாய்ப்பு உண்டு. எனவே ஏற்கனவே, குடும்பத்தில் கேன்சர் நோயாளி இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், கேன்சர் வரும் முன் கண்டுபிடிக்கும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது..

genes-cancer

கேன்சர்க்கு என்று பிரத்தியோக மரபணு ஜீன் உள்ளது.. அதற்க்கு ஆன்கோஜீன்(ONCOGENE ) என்று பேர். இந்த கேன்சர் மரபணு இருக்கும் எல்லோருக்கும் கேன்சர் வருமா என்றால், அது கிடையாது.இந்த கேன்சர் மரபணு இருந்தும , கூட மற்ற கேன்சர் உண்டு பண்ணும் காரணிகள் என்று அழைக்கப்படும் CARCINOGEN , இந்த மனிதர் மீது ஆதிக்கம் செலுத்தா விட்டால், கேன்சர் வரும் வாய்ப்பு இல்லை.

உதாரனர்த்திற்கு நுரையீரல் புற்று நோய் உண்டு பண்ணு காரணிகளான (CARCINOGEN ), புகை பிடித்தல், மற்றும் சுற்று புற சூழல் மாசு..ஒரு மனிதற்கு நுரையீரல் கேன்சர் வரும் ONCOGENE இருந்தும், அந்த மனிதர் புகை பிடிக்காமல், சுற்று புற மாசுக்கு தன்னை ஆதிக்கம் செலுத்தவிடாமல் இருந்தால், அந்த மனிதர்க்கு நுரையீரல் புற்று நோய் வராது.

அதுபோல் ONCOGENE என்னும் கேன்சர் மரபணு இல்லாமல் இருந்தால், புற்று நோய் அறவே வராது என்றால், அதற்க்கு கண்டிப்பாக வராது என்று அடித்து சொல்ல முடியாது. இந்த மரபணு இல்லாமல் இருந்து, அம்மனிதர் எல்லா CARCINOGEN என்னும் புற்றுவை உண்டு பண்ணும் காரணிகளுக்கு உட்பட்டால்,அவருக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு.

carcinogen

உதாரணமாக,ஒரு மனிதர்க்கு ONCOGENE இல்லாமல், அவருக்கு கூர்மையான பல் இருந்து அவர் தாடை உள்புறத்தை குத்திக்கொண்டு பல ஆண்டுகள் இருந்தால், அதன் உடன் அவர் பாண் , புகையிலை பழக்கம் இருந்து அந்த நச்சு பொருள்களை , அந்த பல் குத்திய இடத்தில் அதிக நேரம் சேர்த்து வைத்து, தொடர்ந்து அந்த புண் பட்ட இடத்தை IRRITATION கொடுத்தால், அவருக்கும் வாய் புற்று நோய் வரும். எனவே புற்று நோய்க்கு சுற்று புற சூழழ் மற்றும் மனிதனின் பழக்க வழக்கங்களும் ஒரு ஊக்குவிப்பு காரணமாக இருக்கிறது.

oncogenes

இந்த ONCOGENE என்னும் புற்று மரபணு ஒரு மனிதர்க்கு இருக்கிறதா என்று அறியும் சோதனை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை (ஆய்வு நிலையில் உள்ளது

தொடரும்..இன்ஷா அல்லாஹ்..

ஆக்கம்: டாக்டர் D.முஹம்மது கிஸார்

குழந்தை நல மருத்துவர்

சென்னை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh