بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
"புற்றுநோய்" ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தலும், தடுக்கும் முறைகளும்! (பாகம் -2)அச்சிடுகமின்-அஞ்சல்
17 பிப்ரவரி 2012 மாலை 02:15

இந்த அறிகுறிகள் கேன்சர் இல்லாத மற்ற நோய்களிலும் இருக்கலாம்,

இந்த அறிகுறிகள் இருந்தால் அதிக பட்சம் எச்சரிக்கையோடு அணுகனும். (High degree of suspicion)

09cancer_detection

கேன்சர் என்று  சந்தேகப்பட ஆரம்ப அறிகுறிகள்:-

 இந்த அறிகுறிகள் நமக்கு கேன்சரின் ஆரம்ப நிலையோ என்று சந்தேகிக்க ஒழிய, எல்லா அறிகுறிகளையும் கேன்சர் என்று பயப்பட அல்ல

• Change in bowel or bladder habits. மலம் கழிக்கும் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாறுதல். மலம் சிறுநீரில் இரத்தம் வருதல் அல்லது மலச்சிக்கல் அல்லது மலம்,சிறுநீர் போகாமல் அடைத்து கொள்ளுதல்,தொடர்ச்சியான வயிற்று போக்கு தொடர்ச்சியான வாந்தி (இரத்தத்துடன் அல்லது இரத்தம் இல்லாமல்),இத்துடன் உடல் இளைத்து போதல்

• A sore that does not heal. அதிகநாள் ஆறாத புண் . இந்த கேன்சர் புண், மற்ற புண்ணை விட வித்தியாசமாக , அதன் விளிம்பு ஒழுங்கற்றதாக,(irregular margin ) சற்று ஆழமான சில சமயம் இரத்தம் கசியக்கூடிய புண். சாதாரண மருந்துகளுக்கு கட்டுபட்டு ஆறாது.

• Unusual bleeding or discharge. வழக்கத்திற்கு மாறான,அசாதாரமான இரத்த போக்கு அல்லது திரவம் வடிதல்

(பெண் உறுப்பில் மாதவிடாய் நின்றபிறகு இரத்தம் வருதல் அல்லது திரவம் கசிதல்)

• Thickening or lump in the breast, testicles, or elsewhere.மார்பு , விதை அல்லது வேறு எங்கேயோ தடிப்பம் அல்லது கட்டி

• Indigestion or difficulty swallowing. சாபபிடுவதற்கு சிரம் பட்டு விழுந்குதல்

• Obvious change in the size, color, shape, or thickness of a wart, mole, or mouth sore. ஒரு மச்சம்,கரனைஅல்லது வாய்புண் இதில் நிறம்,தடிப்பம் அல்லதுஅளவு திடீரென பளிச்சென வெளிப்படையான மாற்றம்

• Nagging cough or hoarseness. தொடர்ச்சியான நச்சரிக்கும் கஷ்டமான இருமல்,அதில் இரத்தம் வரலாம் மற்றும்தொடர்ச்சியான கரகரப்பான தொண்டை சப்தம் .இத்துடன் மற்ற அறிகுறிகளும் சேர்ந்து இருக்கும்.

இதுபோக கீழ் கண்டவைகளும், கேன்சரின் ஆரம்ப நிலையா? இருக்கலாம் என்ற சந்தேகத்தை தரும் அறிகுறிகளாகும்

• தொடர்ச்சியான தலைவலி, அநேகமாக விடியற்காலையில் அதிகஅளவு தலைவலி  (இத்துடன் வாந்தி , வலிப்பு, மயக்கம்,

பார்வை மங்குதல்இருக்கலாம் )

• எதிர்பாக்காத அளவுக்கு ,எந்த காரணமும் இன்றி அதிகமான திடீரென எடை குறைவு, பசியின்மை

• எழும்புகளிலோ அல்லது உடலில் வேறு எதாவது பாகத்திலோ , தொடர்ச்சியான பல காலம் வலி எடுத்தல்

(இதற்க்கு மற்ற காரணம்இருக்காது, சாதாரண வலி நிவாரநிகளுக்கு கட்டுபடாது )

• தொடர்ச்சியான பலகாலங்கள் அதிகபடியான குமட்டல், வாந்தி, சோர்வடைதல்(எந்த சாதாரண காரணம் இன்றி )

• பலகாலங்கள் தொடரான லேசான ஜுரம் (விட்டு விட்டோ அல்லது தொடர்ந்தோ )

• திரும்ப திரும்ப காரணம் இன்றி வரும் சீதனம் (நோய் தொற்று )

• குழந்தைகளின் கண்கள் இருட்டில் பூனை கண்போல மின்னுதல், இது retinoblastoma என்னும் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம்.

• கழுத்தில் தொடுவதற்கு சற்று கடினமான கட்டிகள் அல்லது கழலைகள் (தொடர்ந்து)(ஒன்றோ அல்லது பலதோ ) மற்ற காரணங்கள்

இதற்க்கு இல்லை என்றால் அநேகமாக உடலில் வேறு எங்கோ உள்ள புற்று பரவியதின் அறிகுறியாக இருக்கலாம்

• பச்சிளம் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது, வயிற்றில் பக்கவாட்டில் தொடுவதற்கு வயிற்றுக்குள் வீக்கமாக தென்பட்டால். ஸ்கேன்செய்து கொள்வது நல்லது.(வயிறு உப்பசம் , தொந்தி இதற்கும் சம்பந்தம் இல்லை )

• எந்த காரணமும் இன்றி அதிகபடியான இரத்த சோகை மற்றும் தோலில் சின்ன சின்ன இரத்த புள்ளிகள்

• பெண்கள் ஒவ்வொரு மாதவிடாய் பின்னும் , தங்கள் மார்பகங்களை தாங்களாகவே பரிசோதித்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது ஏதாவது வித்தியாசமாக தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இதை பற்றி எப்படி செய்ய வேண்டும் என்று அறியகீழ் கண்ட இணைய தளத்தில் பார்க்கவும்.

http://www.imaginis.com/breast-cancer-resource-center

இருபது வயதுக்கு மேல் எல்லா பெண்களும் மார்பு சுய பரிசோதனை செய்வதும், 35 வயதுக்கு மேல், ஆண்டுக்கு ஒருமுறை mammogram என்ற பரிசோதனை செய்வதும் அவசியம் .இதன் மூலம் மார்பு புற்று நோயை அதன் ஆரம்பகட்டதிலோ அல்லது புற்று நோய்க்கு முந்திய நிலையில் கண்டுபிடித்து விடலாம் .

• அதுபோல 30 வயதை தாண்டிய பெண்கள், ஆண்டுக்கு ஒரு முறை PAPSMEAR என்னும் கருப்பை வாய் புற்று நோயை அந்த உறுப்பு கேன்சராக மாறும் முன்னே கண்டுபிடித்து விடலாம்.

ஒரு ஆய்வுப்படி இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோய்க்கும், ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் இறப்பதாக தெரிகிறது. இந்நிலை தொடர்ந்தால், 2025 ஆம் ஆண்டு , இந்த இறப்பு நிமிட வித்தியாசம் இன்னும் குறையும் அபாயம் உள்ளது.இதை தவிர்க்க ஒரே வழி ,மேலே  சொன்ன மிக சிறிய , வலியற்ற, இலகுவான பரிசோதனைகள்  மூலம் கேன்சர் முந்திய நிலையிலோ அல்லது ஆரம்ப நிலையிலோ கண்டுபிடித்து குணபடுதுவது தான் சிறந்தது.

தொடரும்..இன்ஷா அல்லாஹ்

ஆக்கம்: டாக்டர் D.முஹம்மது கிஸார்

குழந்தை நல மருத்துவர்

சென்னை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக டாக்டர் SM ஹமீது ஹில்மி பணியில் இணைந்தார்! சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் நன்றி!!*
அக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்! “நடப்பது என்ன?” குழுமம் அறிவிப்பு!!
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 05.09.17, 06.09.17, 07.09.17 ஆகிய மூன்று தினங்களும் தொழில் முனைவோர் மையம் மற்றும் நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி சந்தை நடத்தியது!
பப்பரப்பள்ளி பகுதியில் துர்வாடை! மழைக்காலத்திற்கு முன் பராமரிப்புப் பணிகள் செய்வதால் ஏற்பட்டதாக “நடப்பது என்ன?” குழுமத்திடம் நகராட்சி தகவல்!
SDPI கட்சி மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணை!ப்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க தூத்துக்குடியில் போராட்டம்

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com