بسم الله الرحمن الرحيم
Sunday 22nd September 2019 | 22 முஹர்ரம் 1441AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
கருவுறுதல் முதல் குழந்தை பிரசவிக்கும் வரை...(பாகம் - 1)அச்சிடுகமின்-அஞ்சல்
21 ஏப்ரல் 2012 மாலை 11:26

மனித இனம் ஆரம்பத்தில் படைக்கப்பட்டது முதல், இன்றுவரை, ஏன் இன்னும் உலக முடியும் வரை பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வருவதற்காண முக்கியமான ஒரு நிகழ்வு தான் இனபெருக்கும். இனபெருக்கதிற்க்குமிக அவசியம், ஆணின் விந்தும் , பெண்ணின் சினை முட்டையும் ஒன்றாக இணையும் fertilization என்ற நிகழ்வு தான்.

இந்த கருவுறுதல் பற்றி அறியும் முன், ஆண் மற்றும் பெண்ணின் இனபெருக்க உறுப்புகள், அதன் செயல்பாடுகள், மாதவிடாய் சுழற்சி போன்றவைகளை பற்றி தெரிவது அவசியம்.

இந்த தொடரில் ஆணின் விந்தில் தொடங்கி முழு குழந்தையாகும் வரையுள்ள நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்க இருக்கிறோம்,

இந்த இனபெருக்கவியல் மற்றும் கருவியல் தொடர், தமிழில் விளக்குவதற்கு கொஞ்சம் கஷ்டமான பாடம் என்றாலும், என்னால் முடிந்த அளவுக்கு விளக்குகிறேன். வரிக்கு வரி கவனமாக வாசித்தால் புரிவது சுலபம். இந்த கட்டுரை, நிச்சயம் மருத்துவம் சார்ந்த துறை, மற்றும் கல்லூரி உயிரியல் துறை மாணவ மாணவியர்களுக்கும்,மற்றும் பெண்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்..

இந்த தொடர் கட்டுரையில், நாம் இது வரை கேள்விபட்டிறாத, ஆனால் கருவறையில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஆச்சிரியமான நிகழ்வுகளும் வர உள்ளன. அதனுள் ஆழமாக செல்லுமுன் ,முதலில் பெண்ணின இனப்பெருக்க உறுப்புகள் பற்றி சற்று விவரமாக பார்ப்போம்.

மாதவிடாய் சுழற்சி (MENSTRUAL CYCLE )- உடல் கூறுயியல் விளக்கம்:-

மாதவிடாய் சுழற்சிக்கும், பெண் கருவுருவதற்கும், முக்கியமான பெண் உறுப்பு uterus என்னும் கர்ப்பை, fallopian tube என்ற கருக்குழாய்,மற்றும் ovary என்னும் சினைப்பை மட்டும்தான் என்று எல்லோரும் அறிந்துள்ளோம்..இதை எல்லாம் மீறி, இந்த உறுப்புகளையும் சேர்த்து மாஸ்டர் கண்ட்ரோல் பண்ணும் இன்னும் இரண்டு உறுப்புகள் உள்ளன. அதில் ஒன்று HYPOTHALAMUS , மற்றொன்று PITUITARY GLAND.

pituitary_1

Hypothalamus

இது மூளையில் உள்ள வரையறுக்கபடாத ஒரு சிறு பகுதி. ஆனால் இது பெரிய பெரிய செயல்களை செய்கிறது. மனித வாழ்வில் எல்லா நிலைகளிலும் இந்த hypothalamus முக்கிய பங்கு வகிக்கிறது.. இதில் இருந்து தான், பெண் இனவிருத்தி, மற்றும் மாதவிடாய்க்கு தேவையான GnRH என்னும் ஹோர்மோன் உற்பத்தியாகிறது. இந்த GnRH ஹோர்மோன் நேராக PITUITARY Gland என்னும் நாளமில்லா சுரப்பியில் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.

இரத்தத்தில் உள்ள பெண்ணின ஹோர்மோன்களான ஈஸ்ட்ரோஜென் (estrogen ) மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) அளவை பொறுத்து, மிக துல்லியமாக கூடியோ குறைந்தோ , இரத்தத்தில் இந்த ஹோர்மோன் களின் அளவை கட்டுக்குள் வைத்து, பெண்மை தடை இன்றி காப்பாற்றப்பட உதவுகிறது.

Pituitary GLAND

இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நாளமில்லா சுரப்பியின் முன் பகுதியான Anterior Pituitary மீது, hypothalamus சுரந்த GnRH ஹோர்மோன் , செயல்புரிந்து, அதை தூண்டி , அதிலிருந்து FSH மற்றும் LH என்னும் இரு ஹோர்மோன்கள் சுரக்கிறது.இந்த இரு ஹோர்மோன்களும்,பெண்ணின ஹோர்மோன் களான ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) அளவை பொறுத்து, மிக துல்லியமாக கூடியோ குறைந்தோ , இரத்தத்தில் இந்த ஹோர்மோன் களின் அளவை கட்டுக்குள் வைத்து, பெண்மை தடை இன்றி காப்பாற்றப்பட உதவுகிறது. இது பெண்ணின ஹோர்மொன்களை கட்டுபடுததினாலும், இது GnRH ஹோர்மொனின் கட்டுபாட்டுக்குள் தான் உள்ளது. இந்த FSH , LH ஹோர்மோன்கள் இரத்தம் மூலம் சென்று , சினைப்பையான ovary மீது தனது படையெடுப்பை செய்கிறது.

image001

சினைப்பை என்னும் Ovary

பெண்ணின் இடுப்பு பகுதியில் , கர்ப்பைக்கு இருபுறமும் சிறிய உருண்டை வடிவில் இந்த உறுப்பு இருக்கிறது. FSH , LH ஹோர்மோன் களின் உந்துதலால்,பெண்ணின ஹோர்மோன் களான ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) ஆகியவற்றை இந்த Ovary சுரக்கிறது.

இந்த சினைப்பையில், லட்சகணக்கான முதிர்வடையாத (Immature follicle ) உள்ளது. ஒரு கணக்கின்படி , கருவில் இருக்கும் பெண் சிசுவின் சினைப்பையில் சுமார் 60 முதல் 70 லட்சம் immature follicle உள்ளது. பச்சிளம் குழந்தையின் சினைப்பையில் , இந்த immature follicle 6 லட்சமாக குறைந்து,.சிறுமியாக வளர்ந்து வயதிற்கு வரும் போது வெறும் 2 லட்சமாக குறைகிறது.மாதவிடாய் நிற்கும் போது இந்த immature follicle எண்ணிக்கை வெறும் 10000 திற்கும் குறைவாகி, இறுதியில் சுருங்கி விடுகிறது.

ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போது, இந்த லட்சகணக்கான immature follicle களில், ஒன்றே ஒன்று மட்டும் தான் முதிர்வு (mature ) அடைந்து mature follicle ஆகிறது. எத்தனை மில்லியன் immature follicle இருந்தாலும்,அதில் குறைந்தது ஒரு follicle க்கு கூட முதிர்வடையும் (mature ) ஆகும் தன்மை இல்லாவிட்டால், கருவடைதல் நடக்கவே நடக்காது. ஆனால் ஒரே ஒரு follicle மட்டும் முதிர்ச்சி அடையும் தன்மை இருந்தால் போதும், கருவடையும் தன்மை வந்து விடும் (மற்ற காரணிகளும் சரிவர இருந்தால் ).

பெண்ணின ஹார்மோன்கள்

பெண்ணின ஹோர்மோன் களான ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ), ஒரு பெண்ணின்கருப்பை வளர்ச்சியடைய வைத்து, பெண்ணை தாய்மை அடையும் நிலைக்கு கொண்டு வரக்கூடியதும்,பெண்ணிற்கு பெண்மைக்கான அங்க அவயங்கள் வளர வைக்ககூடியதும், பெண்ணை திருமண வாழ்க்கைக்கு தயார் பண்ண கூடியதாக இருக்கிறது. இந்த ஹோர்மோன் நேராக கருப்பை மீது தனது படையெடுப்பை செலுத்தினாலும்,மற்ற உறுப்புகளிலும் தனது ஆளுமையை செலுத்துகிறது.

பெண்ணின ஹோர்மோன் களான ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) அளவு இரத்தத்தில் அதிகரிக்கும் போது, அதை GnRH ஹோர்மோன், மிகத்துல்லியமாக கணக்கிட்டு , தனது ஆற்றலால் FSH , LH சுரப்பை குறைத்து , அதனால் ஓவரி தூண்டபடுவது குறைந்து , இந்த ஹோர்மோன் களின் சுரப்பு குறைந்து, நார்மல் நிலைக்கு வருகிறது. அதைப்போல் ஈஸ்ட்ரோஜென் (estrogen )மற்றும் புரஜெஷ்டரோன்(progesterone ) அளவு இரத்தத்தில் குறையும்போது போது, அதை GnRH ஹோர்மோன், மிகத்துல்லியமாக கணக்கிட்டு , பின் FSH , LH சுரப்பை அதிகரித்து , அதனால் ஓவரி தூண்டபடுவது அதிகமாகி , இந்த ஹோர்மோன் களின் சுரப்பு அதிகரித்து , நார்மல் நிலைக்கு வருகிறது.

fallopian tube என்னும் கருக்குழாய்

பெண் இனப்பெருக்கத்திற்கு, மேலே சொன்ன உறுப்புகள் போக, fallopian tube என்ற கருகுழாய் போன்ற அமைப்பு கொண்ட உறுப்பு , இரு Ovary அருகில் இருபுறமும் துவங்கி, கருப்பை என்னும் uterus இன் உட்புறத்தில் முடிகிறது. சினைப்பையில் இருந்து வெளியான சினை முட்டையை இந்த tube வெளிப்புறம் இருக்கும் கை போன்ற fimbriae எடுத்து, fallopian tube உட்புறம் அனுப்பும். இந்த fallopian tube உட்புறத்தில் தான், இந்த சினைமுட்டை, ஆணின் விந்துவுடன் இணைந்து கருவுறுகிறது. fallopian tube உட்புறம் , சிறிய cilia போன்ற முடி போன்ற அமைப்பு உள்ளதால், இந்த cilia வின் உதவியால் தான், கருவுற்ற முட்டை கருப்பை நோக்கி தள்ளப்பட்டு, கருப்பையில் தஞ்சம் அடைகிறது.

கருப்பை என்னும் Uterus

கருப்பை என்ற உறுப்பு இரண்டு பாகங்களை கொண்டது.ஒன்று கருப்பையின் உடல் (body of uterus ) மற்றொன்று கருப்பையின் கழுத்து ,cervix என்று பெயர்.இதன் வெளிபகுதிக்க்கு கருப்பை வாய் என்றும் பெயர். கருப்பையில் , பல அடுக்கு சுவர்கள் இருந்தாலும், முக்கியமான, மாதவிடாயில் அதிக பங்கு வைப்பது, endometrium எனப்படும் உட்சுவர் ஆகும். கருவுற்ற சினை முட்டையை, கருப்பை , fallopian tube இல் இருந்து தன்னுள் வாங்கி, இந்த endometrium சுவற்றில் தான் பதித்து கொள்கிறது.

மேற்கூறிய எல்லா உறுப்புகளும் மாதவிடாய் மற்றும் கற்பத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், cervix எனப்படும் கருப்பைவாய் , பிரசவத்தின் போது, பெரிய பங்கு கொள்கிறது,uterus உடன் சேர்ந்து.

மாதாவிடாய் எப்படி நடக்கிறது என்பதை பின்னர் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்....

ஆக்கம் : டாக்டர். டி முஹம்மது கிஸார்,

குழந்தை நல மருத்துவர்,

சென்னை.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com