بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இமாலய கொள்ளையில் மிதக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள்! (பாகம்-1)அச்சிடுகமின்-அஞ்சல்
02 ஜனவரி 2013 காலை 12:27

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி, மருத்துவகல்லூரிகளின் ரேங்க் லிஸ்ட் வெளியாகி வரும் ஒவ்வொரு வருடமும் நாம் எதிர் பார்த்தது போல் , MBBS கட் ஆப் மார்க் தாறு மாறாக எகிறிவிடும் போல் உள்ளது.பொது பிரிவு மாணவர்கள் 199 க்கு மேல் எடுத்தாலும் , சீட் கிடைக்க கூடிய நிலை இல்லை. இதை போல முஸ்லிம் BC மாணவர்கள் 197 க்கு மேல் எடுத்தால் தான் MBBS சீட் அரசு கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லுரிகளிலும் சீட் கிடைக்க வாய்ப்பு. இப்படி தாறுமாறாக கட் ஆப் மார்க் எகிறியதால் அதிகம் மார்க் எடுத்தும் மருத்துவ சீட் கிடைக்க முடியாத சந்தர்பத்தை பயன்படுத்தி தனியார் மருத்துவ கல்லூரிகள் , மிக பெரிய CAPITATION FEE என்னும் கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்து விட்டன.

ஒரு தினசரி ஆங்கில பத்திரிகை ,(டைம்ஸ் ஆப் இந்தியா ) இந்த கொள்ளையை இப்படி விவரித்தது "தனியார் மருத்துவ மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் கட்டண கொள்ளை, 2G SCAM கொள்ளைக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல" என்று. மொத்தம் தனியார் மருத்துவ கல்லூரிகள் ( DR MGR MEDICAL UNIVERSITY கீழ் வரும்) மொத்தம் பதிமூன்று அல்லது அதற்கு மேல்.

இதில் வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி தவிர மற்ற எல்லா கல்லூரிகளிலும், capitation fee என்னும் கொள்ளை இருக்க தான் செய்கிறது. அரசு ஒதுக்கீடுக்கு ஒற்றை சாரள முறைக்கு சீட் ஒதுக்கியது போக அந்த அந்த கல்லூரிகளின் சீட்களின் மொத்த அளவை பொறுத்து, 35 முதல 55 சீட் வரை MANAGEMENT QUOTA கீழ் வருகிறது.

இதில் ஒவ்வொரு கல்லூரியும் தங்கள் தரத்திற்கு ஏற்ப 35 லட்சம் முதல் 55 லட்சம் வரை unofficial capitation fee ஆக வசூல் கொள்ளையை கூட்டி பார்த்தால் கிட்டத்தட்ட இருநூறு முதல் இருநூற்று ஐம்பது கோடி வரை கொள்ளை. இது போக official வருட பீஸ் ஆக நன்கு முதல் ஏழரை லட்சம்.ஐந்து வருடதிர்க்கு இது ஒரு மாணவர்க்கு இருபது முதல் முப்பத்தி ஐந்து லட்சம் ஆகிறது. இது போக விடுதி கட்டணம், அது இது என்று வேறு கொள்ளைகள் இதில் அடங்காது...

இது போக  7 or 9 நிகர் நிலை பல்கலை கழகம்கள் கீழ் வரும் மருத்துவ கல்லூரிகள் , ஒரு சீட் கூட அரசு ஒதுக்கீடு ஒற்றை சாரள முறைக்கு ஒதுக்காமல், மொத்த இடத்தையும், management quota எனும் ஒதுக்கீட்டில் (இக்கல்லோரிகளில் MBBS சீட் எண்ணிக்கை நூறு முதல் நூற்று ஐம்பது) கல்லூரியின் தரர்த்திர்க்கு ஏற்ப நாற்பது முதல் அறுபது லட்சம் வரை . இதை சேர்த்த, இந்த கல்லூரிகளின் கொள்ளை கிட்டதட்ட மொத்தம் இருநூற்று ஐம்பது கோடியை தாண்டுகிறது.

இது போக வருட பீஸ் தனி.. இது போன்ற மருத்துவ கல்லூரிகள் ,புதிய மருத்துவ கல்லூரி திறக்க அனுமதி பெரும் போதே, கவனிப்பவர்களை கவனித்து நிகர் நிலை பல்கலை கழகம் அந்தஸ்து பெறுவதன் மூலம், ஒட்டு மொத்த சீட்களையும் management quota மூலம் பெரும் கொள்ளை அடிக்க முடிவு செய்து செயல்படுகிறது.

2010 ஆம் ஆண்டு ஒரு மருத்துவ கல்லூரி, நிகர் நிலை பல்கலைகழக அந்தஸ்துக்கு விண்ணபித்து விட்டு, அங்கீகாரம் கிடைக்க தாமதம் ஆனது. இதனால்,.தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், நிகர் நிலை அந்தஸ்து கிடைக்கு முன்னே , தமிழக அரசிடம், ஒற்றை சாரள முறைக்கு சீட் ஒதுக்க மறுத்து விட்டது..மற்றொரு DD மருத்துவ கல்லூரி , நிகர் நிலை பல்கலை கழக அந்து பெறாமலே அரசு ஒதுக்கீட்டுக்கு சீட் ஒதுக்க மறுத்து மொத்த சீட்டையும் தானே நிரப்பி கொள்ளை அடித்தது.

2011ஆம் வருடம், இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் , கல்லூரி அங்கீகரதிர்க்கு ஆய்வுக்கு வந்த போது, DD மருத்துவ கல்லூரி, தாகூர் மருத்துவ கல்லூரி, மற்றும் மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆகியவை தங்கள் கல்லூரிகளில். வேலை செய்வதாக டாக்டர்களின் பெயர் லிஸ்ட் கொடுத்ததில், சில டாக்டர் பெயர் ஒன்றுக்கு மேற் பட்ட மருத்துவ கல்லூரிகளில் வேலை செய்வதாக ஆவணம் தென் பட்டதால், மருத்துவ கவுன்சில் மேற் கண்ட மூன்று கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு சம்பந்த பட்ட டாக்டர் களுக்கும் , நோட்டீஸ் அனுப்பியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சில டாக்டர்கள், தாங்கள் சில கல்லூரிக்கு, வேலைக்கு விண்ணபித்த போது சமர்பித்த சர்டுபிகட்டுகளை முறைகேடாக மருத்துவ கவுன்சிலிடம் சமர்பித்த உண்மை வெளிவந்து உள்ளது.இதில் அதிக டாக்டர்களின் குற்றச்சாட்டு DD மருத்துவ கல்லூரி மீது தான்.

அநேக தனியார் மருத்துவ கல்லூரிகளில், இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நாளைக்கு மட்டும், தனியாக கிளினிக் வைத்து இருக்கும் டாக்டர்களை அன்று மட்டும் அழைத்து வந்து நன்றாக கவனித்து, தனது மருத்துவ கல்லூரியில் வருட முழுவதும வேலை செய்வது போல் ஏமாற்றி அங்கீகாரம் பெற்று விடு கிறார்கள். இன்னும் அநேக மருத்துவ கல்லூரிகள் சில டாக்டர்களை அந்த கல்லூரியில் வேலை செய்வது போல் ஆவணம் மட்டும் தயாரித்து விட்டு (அந்த டாக்டர்கள் கல்லூரி பக்கமே வருவது இல்லை) மாத மாதம் அந்த டாக்டர்களுக்கு பணம் கொடுத்து சமாளித்து அங்கீகாரத்தை தக்க வைத்து வருகிறது.

என்னை 2010 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி துவக்க இருந்த ஒரு மருத்துவமனையில் இருந்து போனில் அழைத்து, தாங்கள் மருத்துவ மனையில் வேலை செய்ய அழைத்தார்கள். நான் என் இயலாமையை விளக்கி, வரமுடியாது என்று மறுத்தவுடன் , என்னிடம் "உங்கள் படிப்பு சர்டிபிகேட் மட்டும் கொடுத்து, இங்கு வேலை செய்வதுபோல் பதவு செய்யுங்கள். நீங்கள் வேலைக்கு வரவேண்டாம். மாதமாதம் வந்து கையெழுத்து போட்டு, சம்பளம் மட்டும் பெற்று கொள்ளுங்கள்" என்று அழைப்பு வந்தது. நான் அந்த offer யை மறுத்துவிட்டேன்..

பிறகு ஆனால் அந்த மருத்துமனை நிர்வாகமும் அந்த ஆண்டே MCI இடம் இருந்து, மருத்துவ கல்லூரி திறக்க அனுமதி பெற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவ மாணவர்களை சேர்த்து வருகிறது.. அந்த கல்லூரியில் முடித்து வரும் மருத்துவர்களின் தரம் எப்படி இருக்கும்? என யூகித்து கொள்ளுங்கள் .இது எப்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மருத்துவ கவுன்சில் இடம் அனுமதி பெறுகிறது என்பதற்கு உதாரணம்.

தொடரும்..

ஆக்கம்: டாக்டர் டி.முஹம்மது கிஸார்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்!
நெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மனு!
பொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!
காட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன?” அறிவிப்பு!
அரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள்! மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன?” குழுமத்திடம் தகவல்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com