بسم الله الرحمن الرحيم
Monday 16th September 2019 | 16 முஹர்ரம் 1441AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
மாற்றுமுறை மருத்துவம்! மைக்ரோ காயல் வழங்கும் மருத்துவ விழிப்புணர்வு தொடர்! (பாகம் 1)அச்சிடுகமின்-அஞ்சல்
03 ஏப்ரல் 2013 காலை 12:17

அன்பார்ந்த காயல் வாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் !

மைக்ரோ காயல் அமைப்பானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நமதூரைச்சார்ந்த நலிவுற்ற மக்களுக்கு பொருளாதார ரீதியாக மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்கி வருவதை அனைவரும் அறிவீர்கள்.

மைக்ரோ காயல் பணிகளை விரிவாக்கம் செய்ய அதன் நிர்வாகம் நாடுகிறது. அதன் ஒரு பகுதியாக பொருத்தமான - செலவு குறைந்த மருத்துவ முறைகளைப்பற்றி நமதூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. அதன் முதல் படியாகவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு இது தொடர்பாக கட்டுரைகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

weekly

அரிந்த வெங்காயமும் சிறிது சீனியும் கலந்து ஒரு கிண்ணத்தில் இருக்கும். பயண அலுப்புடனும் புகை வண்டியின் கரி படிந்த உடைகளுடனும் குதிரை வண்டியில் வந்து இறங்கும் வாப்பாவிற்கு அந்த கலவை கிண்ணத்தை கொடுப்பார்கள். அதை உண்ட பிறகுதான் அவர் வீட்டிலிருந்து தண்ணீரையே குடிப்பார்.

50 ஆண்டுகளுக்கு முந்திய நமதூரின் காட்சி இது. ஊருக்கு ஊர் செல்லும் பயணத்தில் நீர் , காற்று , வானிலை மாறும்போது பயணியின் உடலில் தொற்று ஏற்படும். அதை நீக்க தரப்படும் சிறு மருந்து உணவுதான் அந்த வெங்காய சீனிக்கலவை.

பயணம் முதல் ஊர் வரை. குழந்தை முதல் முதியவர் வரை உணவே மருந்தாக மருந்தே உணவாக வாழ்க்கையை கழித்து வந்தோம். இஞ்சியும் தேனும் கலந்த சாறு , ஓமத்திரவம் , விஷக்குடினி எனப்படும் கஷாயம் ,மிளகுத்தண்ணி , வரப்பொடி , சுக்குப்பற்று . காயம் என நீண்டு செல்லும் உணவு மருந்து பட்டியல்.

அன்று ஒவ்வொரு வீட்டிலும் அஞ்சறை பெட்டி என்றழைக்கப்படும் கை மருந்து கலம் இருந்தது. வட்ட வடிவமான அந்த கலத்தில் ஏழு அறைகள் உடைய கொண்ட அடுக்குகள் இருக்கும். அதில் நல்ல மிளகு, சுக்கு ,திப்பிலி , முழு மஞ்சள் , நறுக்கு மூலம், நாட்டுப்பூண்டு , வசம்பு ,கருஞ்சீரகம், ஓமம், வாவலங்காய், கடுக்காய், அக்கரா போன்ற எளிய கைமருந்துகள் இருந்தன. சிறிய , நடுத்தர உடல் நலிவுகளுக்கு அந்த அஞ்சறைப்பெட்டியை பயன்படுத்தியே குணம் பெற்று வந்தோம்.

anjarai

நாம் ஆக்கும் பிரியாணி என்ற புலவுச்சோறும் ஒரு வகையான உணவு மருந்துதான். கேட்கவே வியப்பாக இருக்கிறதா? . வயிற்றோட்டக்காரர்கள் துணிவாக உண்ணலாம். வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடிய மருந்துப்பொருட்கள் அதில் கலந்திருப்பதுதான் காரணம். இவைகளுக்கு மறைந்த பழங்காயல் உணவு மருத்துவ முறைகள் என பெயரே வைக்கலாம்.

இது போக பிடிப்பு தட்டுபவர்கள் , விஷக்கடி நீக்குபவர்கள் , வர்மம் தட்டுபவர்கள் , லேகியம் கிண்டுபவர்கள் , கைக்குழந்தைகளுக்கு குடல் ஏற்றம் நீக்குபவர்கள் என ஒரு தலைமுறையே மருத்துவத்தை அன்றாட விஷயமாக இயல்பாக கடைப்பிடித்து வந்தார்கள். பெரிய நோய்களுக்கு மட்டுமே நமதூர் & பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அரசு மருத்துவ மனை , நாசரேத் மருத்துவமனைகளில் பரிகாரம் பெற்று வந்தோம்.

இந்த எளிய கை மருத்துவமும் , நாட்டு மருந்தும் நம் ஊரின் அன்றாட வாழ்க்கையிலிருந்து மெல்ல விலகி சென்று விட்டது. இன்று அவற்றில் ஒன்றிரண்டு வேண்டுமென்றால் மிஞ்சியிருக்கலாம்.

காலச் சக்கரத்தின் மிக வேகமான சுழற்சியில் அந்த தலைமுறையினர் நம்மை விட்டு கடந்து போய் விட்டனர். அந்த வெற்றிடத்தை மெல்ல மெல்ல நவீன ஆங்கில மருத்துவம் பிடித்துக்கொண்டது.

உடலில் சிறிய அசௌகரியம் ஏற்பட்டாலே ஆங்கில மருத்துவத்தைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆங்கில மருத்துவத்தின் சேவையானது சாலை விபத்து , அறுவை வைத்தியம் போன்ற அவசர நிலைமைகளில் உன்னதமானது. அதே நேரத்தில் ஆங்கில மருத்துவத்தில் பெரும்பாலான நோய்களை கண்டு பிடிப்பதற்கே தொகை பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. அத்துடன் மருந்துகளின் விலையும் வீரியமும் அதிகம். பக்க விளைவுகளும் உண்டு.

ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு வழியில்லை. அதுதான் நம்பகமானது. மற்ற வைத்திய முறைகளை பெரிதாக நம்பி போக முடியாது என்ற எண்ணம் நமது பொது புத்தியில் அழுத்தமாக பதிந்திருக்கின்றது. இந்த எண்ணப்போக்கு தவறானது.

ஆங்கில வைத்தியமானாலும் சரி அல்லது மற்ற மாற்று முறை மருத்துவமானாலும் சரி நாம் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு கொண்டாடத் தேவை இல்லை. அவற்றில் உள்ள சாதக பாதக அம்சங்களை அறிந்து பின்பற்றுவதுதான் உகந்தது.

ஆங்கில மருத்துவம் நன்கு வளர்ந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகள் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து மெல்ல மறைந்து வருகின்றன. எனினும் நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. காரணம் அவை இன்று முறையாக அறிவியல் ரீதியாக வளர்த்தெடுக்கப்பட்டு பல்வேறு துறைகளாக பரிணமித்து நிற்கின்றன.

இந்த பட்டியலில் இயற்கை வைத்தியம், சித்த வைத்தியம், யூனானி ,ஆயூர் வேதம் ,அக்யூ பிரஷர், அக்யூ பங்சர், வர்மம், ஹோமியோபதி, யோகாசனம், மாணிக்க கல் மருத்துவம் என பல உள்ளன.

ஆங்கில மருத்துவத்தை படிக்க பல வழிகளில் எண்ணற்ற லட்சங்கள் ஏன் சில சமயம் கோடி ரூபாய்கள் வரை கூட செலவழிக்க வேண்டியுள்ளது. ஆங்கில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பல கோடிகள் முதலீட்டில் மருந்துகளையும் மருத்துவ கருவிகளையும் உற்பத்தி பண்ணிக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் நாம் அந்த வைத்தியத்தைப்பெற பல சமயங்களில் நம் வாழ் நாள் சேமிப்பு , வீடு , மனை, நகை ஆகியவற்றை இழக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு பொருளாதாரத்தை இழந்த பிறகும் நோய் முழுமையாக நிரந்தரமாக குணமடைவதற்கான உத்திரவாதம் எதுவும் இல்லை.. ஆனால் மாற்று மருத்துவ முறைகளில் இந்த சிக்கல்கள் எதுவும் இல்லை. உரிய மதிப்பெண் எடுக்கும் எந்த மாணவரும் நியாயமான செலவில் இந்த படிப்புகளை படித்து மருத்துவராக ஒளிர முடியும். இதில் செலவு மிக்க நோய் அறியும் கருவிகள் , விலை உயர்ந்த வீரிய மிக்க மருந்துகள் என்ற அச்சுறுத்தல் இல்லை.

ஆகவே இந்த முறைகளில் மருத்துவக்கட்டணம் , மருந்துகளின் செலவு என்பது மிக மிக குறைவு. இந்த மாற்று மருத்துவ முறைகளில் ஹோமியோபதி , சித்த வைத்தியம் , ஆயூர் வேதம், யூனானி போன்றவைகளில் உள் மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரைக்கின்றனர். அவற்றின் விலையும் தாங்கக்கூடிய அளவில்தான் இருக்கும். இந்த மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் ஏறத்தாழ இல்லை என்றே சொல்லலாம்.

மாணிக்க கல் வைத்தியம் , யோகாசனம் , அக்யூ பங்சர் , அக்யூ பிரஷர் போன்றவைகளில் அறவே மருந்துகளுக்கு தேவை இல்லை. இவைகள் பரிந்துரைக்கும் வைத்திய முறைகள் மிகவும் எளிமையானவை. நமது உடலில் உள்ள நரம்பு மண்டலம் , தூண்டல் புள்ளிகள் ஆகியவற்றை தட்டி எழுப்பி செயல் பட வைக்கின்றனர். உடலின் காவலாளிகள் விழித்தவுடன் திருடனைப்போல் நோய் பயந்து ஓடி விடுகின்றது.

இயற்கை மருத்துவத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவு , புழங்கும் மண் , நீர் , நீராவி ,கதிரொளி ஆகியவற்றிலிருந்தே நமது நோய்க்கான வைத்தியத்தை செய்கின்றனர். இது போக இளைப்பு , நீரிழிவு , பக்க வாதம், தீப்புண் தழும்பு , பாம்புக்கடி போன்ற நோய்களுக்கும் தனிப்பட்ட வைத்தியர்கள் குடும்ப பாரம்பரியமாக வைத்தியம் செய்து வருகின்றனர். இவர்களின் வைத்தியத்தில் உடனேயே நோய்கள் வியக்கத்தக்க வகையில் முழுமையாக குணமாகின்றன.

மாற்று முறை வைத்திய முறைகளுடன் ஆங்கில மருத்துவத்தின் நல்ல அம்சங்களை மட்டும் கலந்து வைத்தியம் செய்யும் கூட்டு வைத்திய முறையும் நடை முறையில் இருக்கின்றது. இதுவும் மக்களுக்கு நல்ல பயனளித்து வருகின்றது மனித வாழ்வில் நோயை தவிர்க்க முடியாது. ஆனால் நோயை தரும் இறைவன் அதற்கான பரிகாரத்தையும் சேர்த்தேதான் இறக்குகின்றான் என்பது நபி மொழி.

தற்கால , முற்கால மருத்துவ முறைகள் அனைத்துமே இறைவன் மனித மனதில் உதிக்க வைத்தவைதான். அது இறைவனின் அருட்கொடையும் கூட. இறைவன் அருளும் நோய்ப்பரிகாரம் என்பது எல்லா மக்களுக்கும் எட்டக்கூடிய விதத்தில் எளிதாக இருப்பதுதான் இயற்கையானதும் நீதியானதும் ஆகும்.

எந்த மருத்துவமானாலும் சரி அது மக்களின் நலனை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படவேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த மருத்துவ முறையானாலும் அவற்றை நாம் மக்களுக்கு அடையாளங்காட்ட வேண்டும். நோயை விட கொடுமையான மருத்துவ முறைகளிலிருந்து விடுதலை பெறும் வழிமுறையை நமதூர் மக்களுக்கு வழி காட்ட வேண்டும்.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்....)

குறிப்பு : இந்தக்கட்டுரையை வாசிக்கும் சகோதர சகோதரிகள் தங்களின் மேலான ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் மைக்ரோகாயல் அமைப்பின் ஈமெயில் மூலம் வழங்கலாம். வருடாந்திர புதிய உறுப்பினர்கள் இணையும் வாரத்தில் (ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 11 வரை) மைக்ரோகாயலின் புதிய உறுப்பினர்களாக இணைந்து உயிர் காக்கும் அவசர மருத்துவ உதவிகளை தேவையுள்ளவர்களுக்கு இணைந்து வழங்கிட மைக்ரோகாயல் உங்களை அன்புடன் அழைக்கிறது.

தகவல்:

சாளை முஹம்மத் முஹிய்யதீன்,

சர்வதேச ஒருங்கிணைப்பாளர், மைக்ரோகாயல்.

http://www.microkayal.com/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com