செய்திகள்
| ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான 47-வது அகில இந்திய கால்பந்து போட்டி! நேற்றைய ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணியினர் வெற்றி! |
| மும்பையில் காயல் நல மன்றம் துவக்க முன்முயற்சி! ஜூன் 10இல் கலந்தாலோசனைக் கூட்டம்!! |
| கிழக்கு கடற்க்கரை சாலை குறித்த ஆலோசனைக் கூட்டம்! குழு அமைத்து செயல்பட முடிவு!! |
| வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து பாளையங்கோட்டையில் பயிற்சி வகுப்பு! ஏராளமான பெண்கள் உட்பட 18 காயலர்கள் பங்கேற்பு!! |
| ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 64 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்!!! |
சமீபத்திய வாசகர் கருத்துக்கள்
- கிரிக்கெட் : அந்த காலம் முதல் ஐ.பி.எல் வரை...
கிரிக்கட் குறித்து விமர்சனம் செய்த அதே பெர்னாட்ஷா தான் இதையும் சொன்னார் "We don't stop playing becau...
By M. Sajith - வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து பாளையங்கோட்டையில் பயிற்சி வகுப்பு! ஏராளமான பெண்கள் உட்பட 18 காயலர...
அன்புள்ளவர்களே....பயிற்சி பெற்ற விபரங்கள், மற்றும், தகவல்கள்.... தோட்டம் அமைப்பது போன்ற விவரங்கள் இந...
By ஹபீப் முஹம்மது நிசார்.
அனுபவம் புதுமை
| எட்டிப்பார்த்தேன் நடுங்கியது ஈமான்.. |
| 06 அக்டோபர் 2011 மாலை 10:20 | |||
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு. நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (2:208) இன்று காலை பொழுதில் தாரை தப்பட்டையுடன் அந்த பகுதியே அதிரும் அளவிற்க்கு சப்தம் மக்கள் கூட்டம் என்ன தான் நடைபெறுகின்றன என்று அருகில் சென்று பார்த்தால் தசராவிற்காக மாற்றாரின் நடனம் நிகழ்ச்சி அரைகுறை ஆடையுடன் இளம் பெண் நடனமாடும் காட்சி அதை ரசித்து பார்க்கும் நம் இஸ்லாமிய சமூகம். கிடைத்தது அதிர்ச்சி, நடுங்கியது உள்ளம், விழித்தது ஈமான். தன்னையும் அறியாமல் தம் ஈமானை பாழ்படுத்தும் காரியங்களை கண்டுகளிக்கும் நமது இஸ்லாமிய சமூகம்..நம் ஊர் மக்கள் எங்கே செல்கின்றன நமது சமூகம்.??
எல்.கே லெப்பை தம்பி சாலையில் தசரா கரகாட்டம் இன்றைய காட்சிகள் ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் எவ்வாறு இதை பார்த்து ரசித்துக் கொண்டிருகின்றோம்?
தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் இடத்தில நாம் இரண்டற கலந்து நிற்பதே அத்தீமையை செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றோம் என்பதை நாம் ஏன் இன்னும் விளங்க வில்லை.
அல்லாஹ் கூறுவதை கேளுங்கள். அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். (4.140. ) பொதுவாக அல்லாஹுவின் வசனங்கள் கேலி செய்யும் வகையிலும், அதை மறுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்களுடன் நாம் சேர்ந்து அமரக்கூடாது என்று அல்லாஹ் தன திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவ்வாறான காரியங்கள் நடைபெறும் இடத்தில அமரக்கூடாது என்றும் மற்றவர்கள் செய்தால் அந்த இடத்தில அமரலாம் என்றும் இறைவன் கூறவில்லை, மாறாக மார்க்கத்திற்கு புறம்பான காரியத்தை யார் செய்தாலும் அந்த சபையில் இருக்ககூட்டாது என்று பொதுவாகவே அல்லாஹ் கூறுகின்றான். மேலும் ஒரு முஸ்லிம் தீமையான காரியங்கள் நடந்தேறும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இறைதூதர்(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்... "உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்); அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் என்று என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்" என்றார். அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). (முஸ்லிம் 70) மார்க்கத்திற்கு புறம்பான ஒன்றை வெறுப்பதென்றால் அதில் நாம் பங்கெடுக்காமல் இருப்பதாகும். இது தான் ஈமானின் இறுதி நிலையாகும். ஆனால் அந்த காரியங்கள் நடந்தேறும் இடத்தில இருந்து அவைகளுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு நான் மனதால் வெறுத்து விட்டேன் என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் விஷயம் என்று நாம் விளங்கி கொள்ள வேண்டும். நம்மிடம் எவ்வளவு ஈமான் இருக்கிறது என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ளலாம். குறைந்த பட்சம் தீமையை மனதால் வெறுத்து ஒதுக்கும் கடைசி நிலையையாவது நாம் கை கொள்ள வேண்டும். ''இப்போது சிந்தியுங்கள் நாம் நமது ஈமானை பாழ்படுத்தும் இடங்களில் வேடிக்கை பார்த்து நிற்கலாமா..?''. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். (25.72) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். ( 109 : 6) வீணானதைச் செவியுற்றால் அதைப் புறக்கணித்து விடுபவர்களாக விசுவாசிகள் இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றானே அந்த உன்னத விசுவாசிகளின் பட்டியலில் நாமும் நிலைத்திட வேண்டாமா..? உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்று கூறி நமது விசுவாசத்தை பறைசாற்றி சென்றிருக்க வேண்டாமா..? இஸ்லாம் எச்சரிக்கும் இணைவைப்பு காரியங்கள் நடைபெறும் இடங்களில் அதை நாம் அங்கிகரிப்பதைப் போன்று தீமை நடக்கும் இடத்திலிருந்து நாம் செல்லாமல் இரண்டற கலந்து இருப்பதன் மூலம் நாம் எந்தளவிற்கு இஸ்லாமை பின்பற்றிக் கொண்டிருகின்றோம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் இதைப் போன்று ஓரிறைக் கொள்கைக்கு எதிரான காரியங்கள் நடைபெறும் இடங்களில் நம்மை ஈடுப்படுதிக் கொள்ளாமல் இருக்க, வல்ல அல்லாஹ் நம் ஈமானை பாதுகாப்பானாக. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். (3.8) நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (5:2) ஆக்கம் : நகர் வல நிருபர்
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
ஏகத்துவம்
| அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
| "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |
"இந்த வாரம் காயல்"
சொல்லாதே யாரும் கேட்டால்
காயலரே விழிமின்! எழுமின்!!
தஃவா களம்
வெற்றியாளர்கள் யார்?
அல்-குர்ஆன் (3:104)




