بسم الله الرحمن الرحيم
Wednesday 24th October 2018 | 13 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மழையும் துளியும்..!!அச்சிடுகமின்-அஞ்சல்
27 நவம்பர் 2014 மாலை 04:26

மழையை விரும்பாதோர், ரசிக்காதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால், தற்போது நகரில் மேடு பள்ளமான சாலையில் வாகனம் ஓட்டுவதே சிரமம் என்ற நிலையில், கூடுதல் அசவுகரியங்களும், விபத்து அபாயமும் சேர்ந்து கொள்கின்றன.

நாளொரு மேனியும் பொழுதொறு வண்ணமும் கட்டிடங்கள் கட்டுவது நிர்பந்தமாகி வரும் வேலையில் நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் மணல் கற்களை இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக பல தெருக்களின் ஓரங்களில் கழிவறை மற்றும் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அதிகம் உள்ளன. கட்டிட உரிமையாளர்கள் இதனை மனதிற்கொண்டு லாரி மற்றும் கனரக ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல் அவசியமாகிறது. ஏனென்றால் நமதூரில் கிணற்று உறைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் மழை நீர் தொட்டிகளில் கனரக வாகனங்கள் சரிந்து விபத்தும் மரணமும் நடந்துள்ளதை எண்ணி விழிப்புணர்வு செய்வது அவசியம்.

wt1

மழை பெய்ய தொடங்கும், முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையில் சிந்தி, படிந்திருக்கும். அதனுடன், மழை நீரும் சேரும்போது, சாலை மிகவும் வழுக்கலாகி விடும். தொடர்ந்து மழை பெய்யும்போது, இந்த வழுக்கல் நீங்கிவிடும் என்றாலும், ஆரம்பத்தில், கவனமாக இருப்பது அவசியம்.

wt2

ஈரமான சாலையில், சறுக்கி விழுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், மிதமான, சீரான வேகத்தில் செல்வதுடன், சாதாரண நாட்களைப் போல், மழை நேரத்தில், "பிரேக்' சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.

சற்று முன்பாகவும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும், "பிரேக்'கை அழுத்துவது நல்லது. அது, உங்களுக்கும், உங்களுக்கு முன் உள்ள வாகனத்துக்கும் தூரத்தை அதிகரிப்பதோடு, உங்களுக்குப் பின் வரும் வாகன ஓட்டிக்கு, நீங்கள், வண்டியை நிறுத்தப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கையை தரும்.

முன் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும், 20-30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக்கமாகச் சென்றால், அடுத்த வாகனத்தில் இருந்து அடிக்கும் தண்ணீர், உங்கள் பார்வையை மறைக்கக் கூடும்.

தண்ணீர் தேங்கிய சாலையில், போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டால், வாகனத்தை அணைக்காதீர்கள். என்ஜின் ஓடிக் கொண்டே இருக்கட்டும். தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு தெரியாத நிலையில், சீராக, மெதுவாக வாகனத்தை ஓட்டுங்கள்.

wt3

இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினால். 'எக்சாஸ்ட் குழாய்'க்குள் தண்ணீர் புகுந்து விடும். வளைவில் திரும்பும்போதும், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் 'இன்டிகேட்டர்களை' ஒளிர விடுவ துடன், வழக்கமான வேகத்தை விட, மெதுவாகத் திரும்புங்கள். தற்போது நகரில் பெரும்பாலான இடங்களில் வெட்டி விடப்பட்டிருக்கும் கால்வாய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, சாலையின் மத்தியில் செல்லுங்கள். உங்களுக்கு முன் செல்லும் வாகனத்தை, பின்பற்றிச் செல்வது சிறந்தது. வாகனம் நின்றுவிட்டால் பயந்துவிடாதீர்கள்.

wt4

நான்கு சக்கர வாகனம் என்றால், அடுத்தவர்களின் உதவியைப் பெற்று, சாலையின் ஓரமாக ஒதுக்கி, கொள்ளலாம். இரண்டு சக்கர வாகனம் என்றால், வண்டியில் எப்போதும், 'டூல் கிட்' வைத்திருப்பது அவசியம். கடைசியாக, பாதசாரிகள் மீது, தண்ணீரைச் சிதறடித்துச் செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com