தேங்கிய மழைநீரில் தத்தளிக்கும் மையவாடிகள்!அச்சிடுக
01 டிசம்பர் 2014 மாலை 07:39

கடந்த சில வாரங்களாக பெய்துவரும் பருவமழையால் நகரே திக்குமுக்காடி வருகிறது. எங்கும் தேங்கிய மழைநீர், சாலைகளின் ஓரத்தில் தேங்கிய மழைநீர் எளிதில் வழிந்தோட வெட்டி விடப்படும் குழிகளின் அவலநிலை, மழைநீர் கடலுக்கு செல்லும் வடிகால்களின்றி சிக்கி தவிக்கும் நிலை.

இதன் விளைவாக நகரின் தாழ்வான பகுதிகளில் சுற்றும் புறமும் மழைநீர் தேக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில் சிரமம். இரவு நேரங்களில் மின்சாரம் இல்லையெனில் சாலைகளின் ஓரத்தில் மேடு பள்ளங்களில் பாதசாரிகள் படும் பாடு,

ja1_copy

இரு மற்றும் நாற்சக்கர வாகனங்களில் செல்வோருக்கு ஏற்படும் துன்பங்கள். இது ஒருபுறம் என்றிருந்தாலும் இப்பருவ மழையின் வீரியத்தால் கடந்த சில வாரங்களாகவே நமதூரின் மையவாடிகளின் நிலை நம்மை நிலைகுலைய வைத்திருக்கிறது.

நகரின் பெரும்பாலான மையவாடிகள் இப்பருவ மழையின் நீர்தேக்கதால் முற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மையங்களை நல்லடக்கம் செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் மூன்று அடியில் நல்லடக்கம் செய்வதற்காக குழி தோண்டினால் தற்போதைய மழை நேரங்களில் ஒரு அடி தோண்டும்போதே ஊற்றுப்போல் நீர் நிலை அதிகரித்து குழி தோண்டுவோருக்கு சவாலாக இருக்கிறது.

ja2_copy

இது மட்டுமின்றி ஓரளவு மணல் திரட்சியான பகுதிகளில் நல்லடக்கம் செய்ய குழி தோண்டி அடக்கிய பின்னர் மீண்டும் மழை தொடர்வதால் அடக்கிய மையங்கள் மழைநீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில் கால்நடைகளின் மூலமும் தொந்தரவுகள் நிகழ்ந்து விடுகிறது.

தேங்கிய மழைநீரை பம்புகளின் மூலம் வெளியேற்றினாலும் மீண்டும் பெய்யும் மழைகளினால் வடிகாலின்றி மழைநீர் தேங்கி மையவாடிகளில் நிற்பதால் சில மையவாடிகளில் வீச்சம் வந்துவிடுகிறது. இதனால் சில மையவாடிகளில் தொடர்ந்து பிளீச்சிங் பவுடர்கள் மற்றும் சுற்றுசூழலை சுத்தமாக வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ja3_copy

இதுபோன்று சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரினால் ஜனாஸாவை தூக்கி சென்று அவரவர் முஹல்லா பள்ளிகளுக்கு செல்லும் நிலையும் மிக அவதியாகி வருகிறது. தேங்கிய மழைநீரும், குண்டும் குழிகளும் ஜனாஸாவை தூக்கி செல்வோருக்கு பெரும் இடர்களை உருவாக்கி விடுகிறது.

ja4

நம் முன்னோர்காளால் பல ஆண்டுகளுக்கு முன்னேரே அழகிய திட்டமிட்டு அமைக்கபட்டிருக்கும் மையவாடிகள், தற்போது முன் எப்போதும் இல்லாத பருவமழையின் வீரியத்தால் ஜனாஸா நல்லடக்கம் செய்யும் விசயத்தில் நம்மை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கிறது.

 இதனை மனதிற்கொண்டு இதுபோன்ற நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு நிச்சயம் நாம் ஓர் திட்டத்தை வகுத்தே ஆக வேண்டும். அதற்கான திட்டத்தை வகுப்பதில் அவ்வப்பகுதிகளில் வாழும் ஜமாஅத்தினர், சுற்றுசூழல் ஆர்வலர்கள், நகர பிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் போன்ற அனைவரும் முயற்சி எடுக்கும் பட்சத்தில் இதற்கொரு நிரந்தர தீர்வு கிட்டும், இறைவன் நாடினால்..

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh