بسم الله الرحمن الرحيم
Thursday 20th September 2018 | 09 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
கொள்ளை போகும் நமதூரின் கடல் வளம்!அச்சிடுகமின்-அஞ்சல்
30 ஏப்ரல் 2015 காலை 09:14

இந்திய கடல் பகுதியில் காணக்கிடைக்காத கடல் வளங்கள் , அடர்ந்து படர்ந்துள்ள நீரடி அற்புதங்கள் மன்னார்வளைகுடாவில் உள்ளன. தமிழக மீன் விளைச்சலில் 35சதவீதம் மன்னார் வளைகுடா கடலில் இருந்தே அறுவடை செய்யப்படுகின்றது . தமிழகத்தில் தென்கிழக்கு கடல்பகுதியான மன்னார் வளைகுடாவானது ராமேஸ்வரத்தில் துவங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடல்பரப்பினை உள்ளடக்கியது.

கடந்த சில வருடங்களாக தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட (காயல்பட்டினம் உட்பட) கடலில் கடல் சங்கு கொள்ளை போகும் நிகழ்வுகள் அவ்வபோது அரங்கேறி வருகிறது.

கடலில் முங்கி சங்கு எடுக்கும் தொழில் ஈடுபடுபவர்கள் பெரும்பான்மையானோர் முறையாக பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துவதில்லை. சங்கு தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடம் தகுந்த அனுமதி சான்றிதழ்களும் கிடையாது.

கடந்த வருடங்களில் தூத்துக்குடி மாவட்ட கடலோரத்தில் முத்துக்குளிக்கும் மீனவர்களில் பலர் மூச்சு திணறலில் இறந்தும் இருக்கின்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் மீனவர்கள் கடலில் சங்கு எடுத்து வருகின்றனர். அனுமதி மறுக்கப்பட்டதும் தற்போது காயல்பட்டினம் கடற்கரை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர்.

sangu1

இன்று ஏப்ரல் 30ஆம் தேதி அதிகாலை 5.45 மணி முதல் 6.30 மணிக்குள் இரு வாகனத்தில் சுமார் 20மீனவர்கள் தளவாட சாமான்களுடன் தடல்புடலாக வந்திறங்கினர். இவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் , இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து கும்பலாக வருகின்றனர். இங்குள்ள படகு உரிமையாளர்களிடம் படகை வாடகைக்கு பேசி சங்குகளை காயல்பட்டினம் கடலிலிருந்து சட்ட விரோதமாக எடுத்து செல்கின்றனர். அதிகாலை வேளையில் கடலுக்குள் கிட்டதட்ட 15 கி.மீ தொலைவிற்கு படகில் செல்லும் இவர்கள் மாலை 4.00 மணி அளவில் திரும்பி வருகின்றனர்.

sangu4

கூடவே கால் துடுப்புகள் , ஜி.பி.எஸ்.கருவிகள் , குடி நீர் உருளைகள் , சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்கின்றனர். இவர்கள் யாரிடமும் ஆக்ஸிஜன் உருளைகள் கிடையாது. நமதூர் கடலில் சட்டவிரோதமாக அள்ளப்படும் சங்கு வகைகளை தனியார் நிறுவனங்களுக்கு ரூ.200/= க்கு விற்கின்றனர். இந்த சங்குகள் அந்த தனியார் நிறுவனங்களால் வெளிசந்தையிலும் வெளி நாட்டினருக்கும் ரூ 1000/= க்கும் மேல் விற்கப்படுகின்றன. இவர்களுக்கு பின்னணியில் பெரும் வணிக வலைப்பின்னல் மறைமுகமாக இயங்குகின்றது.

sangu2

வெறும் 200 ரூபாய்க்கும் விற்கப்படும் பெரும் சங்குகள் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட அரிய உயிரினங்கள். இதை விற்பதோ, வைத்திருப்பதோ சட்டப்படி குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு அதிகபட்சமாக 7ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். மேலும் பல வகை சங்கு-சிப்பிகள் 1972 ஆம் ஆண்டின் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டவை. என்பதும் குறிப்பிடத்தக்கது,

ஆனால் அரசு பொறிமுறையோ கடலை சுரண்டுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

.. சங்கு சிப்பிகளை அதில் வாழும் சிறிய உயிரினமே தனது பாதுகாப்புக்காக உருவாக்குகிறது. நமக்கு எலும்புக்கூடு போல, அவற்றுக்கு இந்தக் கூடு பாதுகாப்பு அளிக்கிறது. கால்சியம் கார்பனேட் என்றழைக்கப்படும் சுண்ணாம்பைக் கொண்டு ஒவ்வொரு உயிரினமும் தனது இனத்துக்கு ஏற்ற வகையில் சங்கு-சிப்பிகளை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

sangu3

கொள்ளை போகும் கடல் வளத்தை பாதுகாக்கும் வண்ணம் இதுபோன்ற காட்டுயிர் பாதுகாப்புச் சட்ட விதிமீறல்களை சம்பந்தபட்ட துறையினர் அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கள உதவி

பஷீர் ஆரிஃப்

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com