بسم الله الرحمن الرحيم
Monday 23rd July 2018 | 10 துல்கஃதா 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
நகரில் முதியோர் காப்பகம் என்ற பெயரில் போலி ஆசாமிகள் வசூல் வேட்டை! பொதுமக்களே உஷார்!!அச்சிடுகமின்-அஞ்சல்
22 ஜூலை 2015 மாலை 12:06

இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எனப் பதிவுபெற்ற சேவை நிறுவனங்கள் 33 லட்சம் இருப்பதாக அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்ட ஓர் ஆங்கிலப் பத்திரிகை,

இதன்படி 400 இந்தியருக்கு ஒரு சேவை அமைப்பு இருப்பதாகக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது. இந்தச் சேவை அமைப்புகள் உண்மையாகவே தொண்டு செய்திருக்குமானால், இந்தியாவில் இப்போது நிலவும் அறியாமை, வறுமை, கல்லாமை எதுவுமே இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியேதும் நடந்துவிடவில்லை.

இதற்குக் காரணம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நமது அரசின் நடைமுறைகளும்தான். இவை யாவுமே இந்தியாவில் மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாக இருக்கின்றன; மிக எளிதாக, வியர்வை சிந்தாமல் உண்டு கொழுப்பதற்கான தொழிலாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மலிந்து வருவதுடன் பெரும்பாலும் போலியாக ரசிதுகளை வைத்து வசீகர வசூலும் செய்து வருகின்றனர்.

மிக எளிதாக, வியர்வை சிந்தாமல் உண்டு கொழுப்பதற்கான தொழிலாகத் போலி ஆசாமிகள் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் உலா வருகின்றனர்.

Fake_Bill

இதன் வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காயல்பட்டினத்தில் வீடு, வீடாக அன்னை தெரேசா கருணை இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் என்ற அடிப்படயில் கிருஸ்த்துவ போர்வையில் சிலர் வசூல் செய்து வந்திருக்கின்றனர்.

அவர்களது வசீகர வசூல் வேட்டையின் காரணமாக சிலர் அவர்களுக்கு உதவியும் செய்தும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 18ஆம் தேதி சனிக்கிழமை நோன்பு பெருநாள் தினத்தன்று மாலை காயல்பட்டினம் கடற்கரயில் அதே பெண்கள் முஸ்லிம்கள் போர்வையில் ஃபர்தா அணிந்துகொண்டு திருமணம் ஆகாத குமருக்கு உதவி செய்யுமாறு தங்களது வசூல் வேட்டையை தொடரவே  பொதுமக்களுக்கு வலுத்த சந்தேகம் வந்து விசாரணையை தொடர்ந்தனர்.

பின்னர் சிலர் காப்பகத்திற்கு முன்னதாக வழங்கிய நன்கொடை ரசீதில் குறிப்பிட்ட தொடர்பு எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுகையில் எங்களது காப்பகத்தில் வசூலுக்காக இதுபோன்று யாரையும் நியமிக்கவில்லை என்றும், ஒரு சிலர் எங்களது முதியோர் காப்பகத்தின் பெயரில் போலி ரசீது அடித்து இருக்கலாம், இனி இதுபோன்றோர் வசூல் செய்தால் எங்களை தொடர்பு கொள்ளவும் எனவும் கூறியிருக்கின்றனர்.

தகவல்களில் உதவி : எம்.எஸ்.அப்துல் ஹமீத்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com