بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நவம்பர் 14ம் தேதி: சம்பிரதாயங்களாக மாறிவிட்ட குழந்தைகள் தினம்?அச்சிடுகமின்-அஞ்சல்
14 நவம்பர் 2011 மாலை 11:29

“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

எதிர்கால உலகை ஆளப்போகிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்களால் சுட்டப்படும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேசமயம், சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

Baby

கடந்த 1954ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டது. கடந்த 1925ம் ஆண்டே, ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது.

இந்தியாவின் முதல் பிரதமராகவும், சக்திவாய்ந்த அரசியல் தலைவராகவும் இருந்த நேரு, குழந்தைகளிடம் அளப்பரிய அன்பும், பிரியமும் கொண்டவர். அவரது சிறந்த புகைப்படங்களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.

nehru_copy

உலகிலேயே, அதிகளவிலான குழந்தை மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்காக குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் "குழந்தை தொழிலாளர்களாக" உள்ளனர்.

அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காமலும், முறையான தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் துன்பங்களுக்கு சரியான பதில் சொல்வதாக அமையுமா, வருடா வருடம் நடக்கும் குழந்தைகள் தின கொண்டாட்டங்கள்?

ஆள்வோர்களும், அதிகாரிகளும் குழந்தைகளின் நல்வாழ்வு தொடர்பாக விடைகாண வேண்டிய கேள்விகள் எவ்வளவோ உள்ளன! உலகளாவிய அமைப்பான ஐ.நா. சபை, குழந்தைகள் உரிமை மற்றும் நல்வாழ்வு தொடர்பாக பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. உலகின் ஏராளமான நாடுகள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் காகித அளவிலேயே, பேச்சளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

உலகிலேயே எந்தவிதமான வன்முறைக்கும் எளிதாக இலக்காகிறவர்கள் குழந்தைகள்தான். ஆப்ரிக்க நாடுகளின் (சோமாலியா) குழந்தைகள் உட்பட, மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார்கள். அந்த நாடுகளில் வருங்கால தலைமுறைகளே அழிந்து வருகின்றன. குழந்தைகள் சமூகத்தின் மீது செலுத்தப்படும் எந்தவொரு அநீதியும், எதிர்கால உலகின் மீது செலுத்தப்படும் அநீதியே ஆகும். எதிர்கால உலகை அது நிச்சயம் சீரழிக்கும்.

சோமாலியா மிகக் கொடூரமான பஞ்சத்தை அனுபவித்து வருகிறது. உரிய சிகிச்சை கிடைக்காமல் சோமாலியாவில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பசியால் இறக்கும் துயரம் நிகழத்தொடங்கியுள்ளது.

சோமாலியாவில் வேலைவாப்பின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர் இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பிழைப்புக்காக வேலை தேடி வெளி நாடுகளுக்கு செல்கின்றனர். அவற்றால் குழந்தைகளின் நிலை பரிதாபமாகியுள்ளது.

somali_2

ஐ.நா. தகவல்களின்படி இந்நாட்டில் சுமார் 750,000 பேர் விரைவிலேயே பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே இங்கு ஐந்து வயதுக்குக் குறைந்த 29,000 குழந்தைகள் மடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

somaliya

குழந்தைகள் தின கொண்டாட்டங்களில், குழந்தைகளுக்கு விதவிதமாக வேஷமிடுவதும், பல்வேறுவிதமான போட்டிகளை நடத்துவது மட்டுமே நமக்கு திருப்தியை தந்துவிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மேம்படுத்துவதன் பொருட்டே, சிறப்பு விழாக்களும், நிகழ்ச்சிகளும் அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், நமது சமூகத்தில் அவை சம்பிரதாயங்களாக மாறிவிட்டன. அதுபோலத்தான் குழந்தைகள் தினமும் மாறிவிட்டது.

நமது நாட்டின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இந்த உலகின் குழந்தைகளுக்கே, என்று விமோச்சனமும், நல்வாழ்வும் கிடைக்கிறதோ, அன்றுதான் உலகெங்கிலும் உண்மையான குழந்தைகள் தினம் கொண்டாடப்படும்.

செய்தி கலவை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com