بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
"வெளிச்சத்தை நோக்கி" சகோதர சமுதாயத்தினருக்கான ஓன்று கூடல்! மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்!!அச்சிடுகமின்-அஞ்சல்
22 நவம்பர் 2011 மாலை 11:55
 இருட்டில் மூழ்கி கிடந்து,  "மக்கள்" என்று கூட கூற முடியாமல் இருந்த மாக்களை மானிடர் போற்றும் மகான்களாக மாற்றிய ஒரு மார்க்கம் என்றால் அது 1400 வருடங்களுக்கு முன்னாலயே என்றால் அந்த பெருமை இஸ்லாத்தை மட்டுமே சேரும்.

ஆனால், இன்றைய யுகம் வெறும் யுகத்தையே உண்மை என எண்ணி (உ.ம்: இன்றைய முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிப்பது) மனிதனை புனிதனாக்கும் அந்த தூய நெறியினை அறிய விடாது சின்னபின்னமாக்குகிறது.

DSC05800
DSC05811
Photo010
ஆயினும் இந்த தூயோன் நெறியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை என்று உணர்ந்த இறை அடியார்கள்,
நம் நகரின் தலைநகராகிய தூத்துக்குடியில் உள்ள  கலைஞர் அரங்கத்தில், "வெளிச்சத்தை நோக்கி" என்கின்ற தலைப்பில் ஓர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை 20/11/2011  அன்று சகோதர சமூகத்துடன் நடத்தியது.
 DSC05805
DSC05814
காலை 10 மணிக்கு திருமறையின் இனிய கிராஅதில் சூரா அந்நிஷாவின் முதல் வசனத்துடன் (4:1) ஆரம்பமானது.
 Photo023
பின்னர் சத்திய மார்கத்தை தன் வாழ்வியலில் நெறியாக ஏற்று கொண்ட 3 சகோதர்கள் இஸ்லாம் பற்றி சிற்றுரை ஆற்றினார்கள்  .
இந்த செய்தியினை நாம் ஏற்கனவே அறிவித்து இருந்தோம் .
 DSC05830
முதலில் சகோ.அப்துல்லாஹ், இஸ்லாம் எந்த அளவுக்கு இயற்கையாக வாழ வலியுறுத்துகிறது என்பதை பற்றி உரையாற்றினார்கள்.
பின்னர் சகோ.அமீருதீன், அவர்கள் தனது வாழ்கையில் தான் நடிகனாக இருந்து வேதங்களை ஆய்வு செய்து பின், எவ்வாறு இஸ்லாத்தை தழுவினேன் என்பதை கூறி வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
அதன் பின், சகோ.உமர் பாரூக், அவர்கள் அவருக்கே உரிய பாணியில் (முன்னால் பாஸ்டர் அல்லவா!) சிலுவை பழியையும் ,பரிசுத்த ஆவி என்பதையும் முழுக்க முழுக்க ஏமாற்று வார்த்தைகள் என்பதை பைபிள் வசனங்களில் இருந்தும், தனது சொந்த வாழ்வின் மூலமாகவும் நிரூபித்து காட்டினர்.
  
பின்னர், சகோதர சமுதாயத்தை சார்ந்த ஆண்களும் பெண்களும் தங்கள் சந்தேகங்களை கேள்விகளாக வினவினர். கார சாரமாக சென்று கொண்டிருந்த அந்த நிகழ்வுக்கு சகோ.அப்துல்லாஹ் பிர்தவ்ஸி பதில் அளித்தார்கள்.
 Photo027_copy_copy
Photo025
Photo024
Photo028
மதிய வேளை நெருங்கவே மதிய உணவு இன்முகத்துடன் பரிமாறப்பட்டது.
 Photo032
நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக வந்திருந்த சகோதர சமூகத்திற்கு இறை மறையாம் அல் குர்ஆன் (இலவசமாக) வழங்கப்பட்டது. அத்துடன் குறுந்தகடு (CD) ,சிற்றேடுகள் என பல புத்தகங்கள் வழங்கப்பட்டது.
DSC05810
DSC05803
இதில், ஒரு விசேடமான ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தனர், அது தான் 'TABLE TALK ' என்று கூறப்படும் ஒரு நிகழ்வு.
DSC05823
DSC05826
இதில் சகோதர சமூகத்தினர் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை, வந்திருந்த தாயிகளிடம் தனிப்பட்ட முறையில் குழு குழுவாக அமர்ந்து இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டனர் . மாஷா அல்லாஹ்.
DSC05827_copy
DSC05829_copy
இந்நிகழ்ச்சி அவ்வளவு கண் குளிர்ச்சியாக இருந்தது!!!!!!!
 
நான் கலந்து கொள்ளவில்லை என்று கவலைப்படுகின்றீர்களா?! அதான் நமக்கு வழக்கமாகி போச்சே........
இருந்தாலும் நீங்க ஒரு காரியம் செய்யலாம் ..............அது என்ன என்று கேட்க்கின்றீங்களா?????
 hand
அதாங்க, கத்தியை விட கூர்மையானது, அதான் அல்லாஹ்விடம் கை ஏந்தி துவா கேளுங்க……….
>>நிகழ்ச்சியை ஏற்பாட்டு குழுவுக்கு (இஸ்லாமிய பிரச்சார பேரவை),
>>தொண்டூழியர்களாக (volunteers) இருந்தவர்களுக்கு,
>>இதற்காக பொருள் உதவி கொடுத்தவர்களுக்கு,
>>முக்கியம் கலந்து கொண்ட அனைத்து சகோதர, சகோதரிகளும் இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று.....
இப்படி எவ்வளவோ கேட்கலாமே! 
Photo001_1
தகவல்: எஸ்.ஏ.கே. சாமு.
படங்கள்: தமீம் அன்சாரி, அப்துல் காதர்.

காயல்பட்டினம்.Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com