بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பேய் போல் பெருகி விட்ட பேரூந்து கட்டணம்! மக்கள் மனதில் இனி குச்.. குச்.. ரயில் தான் ..அச்சிடுகமின்-அஞ்சல்
24 நவம்பர் 2011 காலை 10:13

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பஸ்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயாகவும் இருக்கும். சென்னை நகர் தவிர, இதர நகர் பகுதி பஸ்களில், குறைந்தபட்ச கட்டணமாக மூன்று ரூபாயும், அதிக பட்ச கட்டணமாக, 12 ரூபாயும் வசூலிக்கப்படும்.குறிப்பிட்ட இடங்களில் மட்டும், நின்று செல்லும் பஸ்கள் மற்றும் பி.பி., பஸ்கள் இயக்கப்பட்டால், ஒரு டிக்கெட்டிற்கு, குறிப்பிட்ட கட்டணத்தில் இருந்து, 50 பைசா கூடுதலாக வசூலிக்கப்படும்.

bus

எக்ஸ்பிரஸ் பஸ்களில், சாதாரண கட்டணத்தை விட, ஒன்றரை மடங்கு கூடுதலாகவும், டீலக்ஸ் பஸ்களில், எல்.எஸ்.எஸ்., கட்டணத்தை விட, இரண்டு மடங்கு கூடுதலாகவும், கட்டணம் வசூலிக்கப்படும்.இரவு நேர பஸ்களில், சாதாரண கட்டணத்தை விட, இரு மடங்கு கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படும். வால்வோ பஸ்களில், குறைந்தபட்சமாக 15 ரூபாயும், அதிகபட்சமாக, 75 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். பாஸ் உள்ளவர்கள், இந்த பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.நீண்ட தொலைவு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் செமி டீலக்ஸ் பஸ்களுக்கு, கிலோ மீட்டருக்கு, 56 பைசா வீதமும், சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கு, 60 பைசாவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு, 70 பைசாவும், ஏ.சி., பஸ்களுக்கு, 90 பைசாவும், ஏ.சி., வால்வோ பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு, ஒரு 1.10 ரூபாய் என்ற அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்களின் கட்டண உயர்வு எவ்வளவு உயர்வு என்பதை அரசு மக்களுக்கு தெளிவாக விளக்கவில்லை. ஒரு அரசாணை வந்தது. அது பற்றி மக்கள் படித்துத்தெரிந்து கொள்ளவதற்கு முன்பே கட்டணம் இரவோடு இரவாக உயர்ந்துவிட்டது.

bus_copy_copy

கட்டண உயர்வு பற்றி அரசு பஸ்களின் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் இரவிலேயே வாய்மொழி உத்தரவு போட்டுவிட்டனர். இதனால், பஸ்சில் ஏறி அமர்ந்த பிறகு தான் கட்டணமே தெரிந்தது.

சென்னை-திருச்சி 2 மடங்கு:

சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ. 105 ஆக இருந்த சாதாரண பஸ் கட்டணம் ரூ. 195 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது. இது கிட்டத்தட்ட இரு மடங்காகும். அதே போல சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ. 175 ஆக இருந்த அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை-மதுரை கட்டணம் ரூ. 315:

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 200 ஆக இருந்த எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் இப்போது ரூ. 252 ஆகவும்,

அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 248ல் இருந்து ரூ. 315 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை-ஈரோடு கட்டணம் ரூ. 291:

சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரூ. 131 ஆக இருந்த எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் இப்போது ரூ. 233 ஆகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 215ல் இருந்து ரூ. 291 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சேலத்துக்கு ரூ. 240:

சென்னையில் இருந்து சேலத்துக்கு ரூ. 115 ஆக இருந்த சாதாரண பஸ் கட்டணம் இப்போது ரூ.196 ஆகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் ரூ. 185ல் இருந்து ரூ. 240 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்லை செல்ல 440 ரூபாய்-கோவைக்கு ரூ.395:சென்னையிலிருந்து நெல்லைக்கு அல்ட்ரா டீலக்ஸ் கட்டணம் ரூ.440ஆகவும், கோவைக்கு ரூ.395ம், தஞ்சாவூருக்கு ரூ.280ம் வசூலிக்கப்படுகிறது.

காயல்பட்டினம் -கோழிக்கோடு

காயல்பட்டினத்திலிருந்து (கேரளா) கோழிக்கோட்டிற்கு தி மு க ஆட்சியில் ரூபாய் 280 ஆக உயர்ந்து பின்னர் அதிமுக ஆட்சியில் 360 ஆகி மீண்டும் தற்போது ரூபாய் 405 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிற நகர்களுக்கான கட்டணம்:

சென்னை - கன்னியாகுமரி - ரூ.505 (பழைய கட்டணம் ரூ.380)

சென்னை - நாகப்பட்டினம் - ரூ.240 (பழைய கட்டணம் ரூ.180)

சென்னை - தூத்துக்குடி - ரூ.425 (பழைய கட்டணம் ரூ.315)

சென்னை - கும்பகோணம் - ரூ.225 (பழைய கட்டணம் ரூ.180)

சென்னை - தேனி - ரூ.355 (பழைய கட்டணம் ரூ.270)

சென்னை - செங்கோட்டை - ரூ.445 (பழைய கட்டணம் ரூ.330)

நகர பேருந்துகளில் முதல் ஸ்டாப்புக்கே கட்டணம் ரூ. 3:

அதே போல நகரப் பேருந்துகளில் ஏறும் இடத்திலிருந்து அடுத்த ஸ்டாப்புக்கான கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. இப்போது அது ரூ. 3 ஆகிவிட்டது. இது சாதாரண பஸ்சுக்கான கட்டணம், இதில் பஸ்சின் கலரைக் காட்டியும், எல்எஸ்எஸ் என்றும், பாயிண்ட் டூ பாயிண்ட் என்றும் எதையாவது சொல்லி குறைந்தபட்ச கட்டணமே ரூ. 3.50 ஆகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது சாதாரண பஸ்களை விட கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகம்.

அதிகபட்சமாக 28வது ஸ்டாப்புக்கு சாதாரண பஸ்சில் பழைய கட்டணம் ரூ.12. இப்போது அது ரூ.14.

டீலக்ஸ் பஸ்சில் டபுள் மடங்கு:

டீலக்ஸ் பஸ்களுக்கான கட்டணம் எல்.எஸ்.எஸ். பஸ்ஸை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. எல்.எஸ்.எஸ். பஸ்சில் கட்டணம் ரூ. 5 என்றால் டீலக்ஸ் பஸ்சில் ரூ. 10. வால்வோ பஸ் ஏ.சி காத்துக்கு ரூ. 75:வால்வோ ஏ.சி. பஸ்களை சொல்லவே வேண்டாம். அதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15, அதிகபட்ச கட்டணம் இந்தியாவில் எங்குமே இல்லாத அளவுக்கு ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நைட்ல வெளியே வராதீங்க..

இரவு நேர பஸ்களுக்கான கட்டணம் பகல் நேர கட்டணத்தைவிட இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண பஸ்களுக்கு. அதுவே டீலக்ஸ் பஸ், எல்.எஸ்.எஸ். பஸ்சாக இருந்தால் கட்டணம் மேலும் இரு மடங்கு அதிகமாக ...

'மலையேறவும்' இரண்டு மடங்கு கட்டணம்:

மலைப் பகுதிகளில் ஓடும் டவுன் பஸ்களுக்கான கட்டணம், தரைப் பகுதியில் ஓடும் எல்.எஸ்.எஸ். பஸ்களின் கட்டணத்திற்கு சமமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இனி குச் குச் ரயில் தான் ..

 பேருந்து கட்டணத்தை உயர்த்தியதையடுத்து, ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. 

TRAIN

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் ஒன்று காலை 7 மணிக்கு ரயில் புறப்படுகிறது. செங்கோட்டை மதுரை இடையேயான பேருந்து கட்டணம் 110 ரூபாய் ஆகும். ஆனால் ரயில் கட்டணம் 25 ரூபாய் என்பதால், பயணிகள் அனைவரும் ரயிலை நாடியுள்ளனர். ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு 40 ரூபாய் கட்டணம். ரயிலில் 16 ரூபாய் கட்டணம். 

செங்கோட்டையில் புறப்படும் இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வரியே மதுரை வந்தடைகிறது. செங்கோட்டையைப் போன்று மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த ரயிலுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். 

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி கலவை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com