بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சமையல் எரிவாயு இணைப்புக்கு நவம்பர் 15 வரை சான்று வழங்க மத்திய அரசு உத்தரவு!அச்சிடுகமின்-அஞ்சல்
01 நவம்பர் 2012 மாலை 07:55

சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்களது அடையாள மற்றும் முகவரிகளை உறுதிப்படுத்தும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அக்டோபர் 31 வரை என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் அந்தந்த சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் இதற்கான விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, உரிய சான்றுகளை அளிக்கலாம் என்று பெட்ரோலிய அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

போலியான பெயர்களிலும், ஒரே பெயரில் பல சமையல் எரிவாயு இணைப்புகள் இருப்பதை தடுத்து முறைப்படுத்தும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் கே.ஒய்.சி. (K.Y.C) எனப்படும் சான்றுகளை இன்று (அக்டோபர் 31) வரை பெறுமாறு ஏற்கெனவே எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதற்கான காலக்கெடு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சமையல் எரிவாயு நிறுவன புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு) போன்றைவைகள் தலா ஒன்றாகும்.

இதற்கான விண்ணப்படிவங்கள் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களிடமும் நகரில் உள்ள தனியார் நகல் பிரதி எடுக்கும் கடைகளிலும் கிடைக்கின்றது.

தகவல்: இர்ஷாத்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com