بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஃபேன்சி தொலைபேசி எண்கள்: பி.எஸ்.என்.எல். முதன் முறையாக அறிமுகம்!அச்சிடுகமின்-அஞ்சல்
14 ஏப்ரல் 2013 காலை 07:44

தொலைபேசிகளுக்கான ஃபேன்சி எண்களை பி.எஸ்.என்.எல். இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்து, அந்த எண்களை ஆன்-லைன் மூலம் ஏலம் விடவும் முடிவு செய்துள்ளது.

இதுவரை, செல்பேசிகளுக்கு மட்டுமே ஃபேன்சி எண்கள் தனியாக அறிமுகம் செய்யப்பட்டு, தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது தொலைபேசிகளுக்கான ஃபேன்சி எண்களை பி.எஸ்.என்.எல். புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். (சென்னை) தரப்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

செல்பேசிகளுக்கான ஃபேன்சி எண்களை விநியோகிப்பதற்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைகளைப் பின்பற்றியே, தொலைபேசிகளுக்கான ஃபேன்சி எண்களும் விநியோகிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 20 ஆயிரம் ஃபேன்சி தொலைபேசி எண்கள் மூன்று நிலைகளாக தரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த எண்களுக்கான அடிப்படை ஏல விலை அதன் தரநிலைகளுக்கு ஏற்ப ரூ. 20,000, ரூ. 10,000 மற்றும் ரூ. 5,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலம் வரும் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடையும்.

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் திரும்ப அளிக்கப்படாத பதிவு கட்டணமான ரூ. 100-ஐ ஆன்-லைன் மூலம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம்.

இப்போது பயன்பாட்டில் உள்ள அல்லது அருகில் உள்ள தொலைபேசி எண்களை ஏலத்தில் பங்கேற்கும் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்றும் அளிக்க வேண்டும்.

செய்தி கலவை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com