بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி SDPI சார்பில் அக்.12ல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!அச்சிடுகமின்-அஞ்சல்
11 அக்டோபர் 2013 மாலை 11:19

 இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காமன்வெல்த் மாநாடு வரும் நவம்பரில் இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது காமன்வெல்த்தின் அடிப்படைகளுக்கே எதிரானதாகும். சுதந்திரம், ஜனநாயகம் இவற்றை அடிப்படையாக கொண்டுதான் காமன் வெல்த் நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படைகளுக்கு விரோதமாக செயல்பட்ட பல்வேறு நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன

சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் இவற்றிற்கு எதிராக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்குப் பிறகும் தற்போதும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

அண்மையில் இலங்கை சென்று ஆய்வு செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையும் இதை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசும், ராஜபக்சேவும் இனப்படுகொலை குற்றங்களுக்காக சர்வேதேச சமுகத்தால் தண்டிக்கப்படவேண்டிய நிலையில், இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்துவது இலங்கைக்கு உதவி செய்வதாகவும், காப்பாற்றுவதாகவும் மட்டுமின்றி இலங்கையில் இனப்படுகொலைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதாகவே அமையும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் வரும் இரண்டு ஆண்டுகளுக்கு காமவெல்த் அமைப்பிற்கு ராஜபக்சே தான் தலைவராக இருப்பார் என்பதை சிந்தித்தால் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது என்பதின் நியாயம் புரியும்.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா அந்த மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது .கனடாவை விட தமிழர்களின் இப்பாரிய பிரச்சனையில் அதிககடைமையுள்ள இந்தியா மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

இப்பிரச்சாரத்தை பிற நாடுகளிடமும் முன்னெடுத்து செல்லவேண்டும். மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இம்மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1 ம் தேதி முதல் உண்ணா விரதம் மேற்கொள்ளும் தமிழ் தேச பொதுவுடைமை கட்சியின் தோழர் தியாகு அவர்கள் தனது உடல்நிலையையும் உயிரின் மதிப்பையும் கருத்தில் கொண்டு வேறு வகையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைநடத்தக் கூடாது இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடைபெற்றால் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (12.10.2013) எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்.

கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு தமிழின சொந்தங்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com