بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஆம் ஆத்மி தேசிய செயற்குழுவில் இருந்து யாதவ், பூஷண் நீக்கம்!அச்சிடுகமின்-அஞ்சல்
29 மார்ச் 2015 காலை 09:59

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரும் நீக்கப்பட்டனர். தில்லியில் சனிக்கிழமை கூடிய அக்கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, ஆஷுதோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

protest

இக்கூட்டத்தில் கேஜரிவால் சில நிமிடங்களே உரை நிகழ்த்திவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அப்போது, தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சருமான கோபால் ராய் தலைமையில் இக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதன்பிறகு, யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரை தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் எழுத்துப்பூர்வ தீர்மானத்தை மணீஷ் சிசோடியா முன்மொழிந்தார். பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

யாதவ், பூஷண் புகார்: இக்கூட்டத்தில் தங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த, தேசிய செயற் குழு உறுப்பினர்களை அடியாள்களைக் கொண்டு அடித்தும், மிரட்டியும் தீர்மானத்தை நிறைவேற்றியதாக யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில், "இக்கூட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெற்றுள்ளது. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகவும் விளங்குகிறது. அரவிந்த் கேஜரிவாலின் சர்வாதிகார செயல் ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்' என்றார்.

தர்னா: முன்னதாக தேசிய குழுக் கூட்டத்தில் பங்கேற்க யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்காததைக் கண்டித்து, கூட்டம் நடைபெற்ற கட்டடத்துக்கு வெளியே யோகேந்திர யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20 நிமிடங்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

"தவறான கருத்துகளை பரப்புகின்றனர்': இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசுதோஷ் கூறுகையில், "யோகேந்திர யாதவ் கூறுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. அனுதாபம் பெறுவதற்காக இதுபோல தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார். இத்தீர்மானத்துக்கு ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக சிலர் வெளிநடப்பும் செய்தனர்' என்றார்.

தினமணி

 

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com