بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அரசுப் பள்ளிகளில் சூரிய வணக்கத்தைக் கட்டாயப்படுத்தக் கூடாது: முஸ்லிம் சட்ட வாரியம்!அச்சிடுகமின்-அஞ்சல்
08 ஜூன் 2015 மாலை 03:36

அரசுப் பள்ளி மாணவர்களிடம் சூரிய வணக்கத்தைக் கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராஅக் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த உள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

surya_2431925f

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லியில் அகில இந்திய முஸ்லிம் சட்ட அமைப்பு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை கூடி இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளை அலோசித்தனர்.

அதன் பின்னர் 'தி இந்து'-விடம் பேசிய அமைப்பு உறுப்பினர் மவுலானா வாலி ராஹ்மானி, "யோகா மற்றும் சூரிய வணக்கம் செய்வது முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது. அதனால் இவை குழந்தைகள் மத்தியில் திணிக்கப்படுவதை நாங்கள் ஏற்க முடியாது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சூரிய வணக்கம் செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது. முஸ்லிம்கள் அல்லாஹ்வின் முன் மட்டுமே வணங்குவார்கள். சூரியனை வணங்குவது எங்கள் சமூகத்துக்கு எதிரானது" என்றார்.

யோகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அனைவரிடமும் சென்று தெரிவிக்க உள்ளதாக முஸ்லிம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதே போல இதே நிலைப்பாட்டில் உள்ள பல்வேறு சமூகத்தினரையும் ஒன்றிணைத்து எதிர்ப்பை பதிவு செய்ய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தி இந்து

 June 8, 2015

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com