بسم الله الرحمن الرحيم
Saturday 22nd September 2018 | 11 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நாட்டின் 67-வது குடியரசு தினவிழா : டெல்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்! அச்சிடுகமின்-அஞ்சல்
26 ஜனவரி 2016 மாலை 02:38

நாட்டின் 67-வது குடியரசு தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

நாட்டின் ராணுவ வலிமையையும் பல்வேறு கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதலில் அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னமான 'அமர் ஜவான் ஜோதி'யில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

france_2711321g_1

அதன்பின், குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை அவர் சந்தித்தார். ராஜபாதையில் வரவேற்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே, பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜாபாதையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி வரவேற்றார்.

பிறகு, 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து முப்படை களின் அணிவகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், 76 உறுப்பினர்கள் கொண்ட பிரான்ஸ் ராணுவத்தினர், 48 பேரின் இசை முழங்க, குடியரசுத் தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நாட்டின் ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் போர் விமானம், ஏவுகணைகள், எதிரி நாட்டு ஆயுதங்களைக் கண்டறியும் ராடார் ஆகியவை அணிவகுக்கத் தொடங்கின. அதிநவீன ராணுவ டாங்கிகள், பீரங்கிகள் உள்ளிட்டவையும் பேரணியில் அணிவகுத்தன.

இந்தியப் படையினரின் சாகசங்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து மாநில பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம் ஆகியவை நடந்தன. கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கும் வகையில் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் சார்பிலும் வண்ணமயமான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றன.

குடியரசு தின விழாவையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தி இந்து

 January 26, 2016

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com