بسم الله الرحمن الرحيم
Sunday 20th May 2012 | 29 ஜமாதுல் ஆஹிர் 1433AH
ஃபஜ்ர் : 4:43 amஉதயம் : 5:57 amலுஹர் : 12:15 pm
அஸர் : 3:38 pmமஃரிப் : 6:31 pmஇஷா : 7:46 pm
news menu leftnews menu right
பதாகை
பதாகை

சமீபத்திய வாசகர் கருத்துக்கள்

பதாகை
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் "தோழர்கள்" புத்தகம் அறிமுக நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது!அச்சிடுகமின்-அஞ்சல்
05 பிப்ரவரி 2012 மாலை 01:48

நமது தாவா சென்டர் சார்பாக அறிவிக்கப்பட்ட நபித் தோழர்களின் உன்னத வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய "தோழர்கள்" புத்தகம் அறிமுக நிகழ்ச்சி இறைவன் அருளால் (03-02-12) இனிதே நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்!

DSC03575

அருமையான மாலைப் பொழுதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக அல் ஜாமியுல் அஜ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் அல் குர்ஆன் மனன பிரிவு மாணவர் சகோதரர் சுவைலிம் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.

DSC03578

அடுத்ததாக, சிறப்புரையாற்ற வந்த ' சகோதரர் எம்.எம். முஜாஹித் அலி அவர்கள் புத்தக வாசிப்பின் அவசியத்தை பற்றி உரையாற்றும் போது, முதலாவதாக அல் குர்ஆனில் இறக்கப்பட்ட முதல் வசனத்தை எடுத்துக்காட்டி படிப்பதின் அவசியத்தைப் உணர்த்தினார். அதைத் தொடர்ந்து நம் சமுகம் படிப்பதில் காட்டும் அலட்சியப்போக்கை அருமையாக எடுத்து சொன்னார். மேலும் நம் சமூகம் புத்தகங்களை வாசிப்பதற்காக சிறிதும் முயற்சி செய்தார் போலில்லை. செவி வாயிலாகவே செய்திகளை அறிந்தால் போதும் என்று இருக்கின்றனர்.

செவி வாயிலாக கிடைக்கும் கல்வித் திறனை விட வாசிப்பதின் மூலம் கிடைக்கும் கல்வித் திறன் அதிகம் என்று சில உதாரணங்களின் மூலம் எடுத்துரைத்தார். இடையிடையே நம் முன்னோர்களின் கல்வித் தேடல்களையும், வரலாற்றில் படைத்த சாதனைகளையும் சுட்டிக்காட்டினார். மேலும் இஸ்லாமிய வரலாற்று சுவடுகளையும், கோப்புகளையும் அழித்த யூதர்களின் சூழ்ச்சிகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.

DSC03583

அதோடு நபிமார்களின் வரலாறுகளையும், இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் வரலாறுகளை நாம் அதிகமாக அறிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கூறியவர். நாம் வரலாறு படைக்க வேண்டுமென்றால் வரலாற்றில் சாதனைப் படைத்த உத்தம தோழர்களின் உன்னத வரலாறுகளை படிக்க வேண்டும். உன்னத தோழர்களின் தியாகம் நிறைந்த வரலாறுகள் நம்மை சுவர்கத்தின்பால் அழைத்து செல்லும் என்பதில் ஐயமில்லை என்றார்.

அதன் பின் சகோ. மவ்லவி எஸ்.எச்.ஷரஃபுதீன் உமரி அவர்கள் நபித்தோழர்களின் தியாக வரலாறுகளை எடுத்துக் கூறும்போது.

DSC03588

அரேபிய தேசத்தில் மனிதனை அடிமைப்படுத்திக் கொண்டு இருந்த மக்கள் ஏகத்துவ செய்தியை கேட்ட மாத்திரத்தில் இறைதிருப்தியை நாடி ஓர் இறைக் கொள்கைக்காக தங்கள் சொந்த பந்தங்களையும்,செல்வங்களையும், உயிர்களையும் இஸ்லாமிய மார்கத்திற்காக அற்பணித்தர்கள். உன்னத தோழர்கள் தங்கள் உயிரை விடவும் அதிகமாக இறைத்த்தூர்(ஸல்) அவர்களை நேசித்தார்கள். அல் குர்ஆன் வசனங்களுக்கேற்ப தங்கள் வாழ்கையை அமைத்து கொண்டார்கள். அல்லாஹுவின் நேசத்தை பெற வேண்டுமென்றால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறுப்படும் திருக்குர்ஆன் (3:31) ஆம் வசனத்தை மேற்கோள் காட்டி சில சஹாபாக்களின் தூய வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துரைத்தார்.

DSC03580_copy

தோழர்கள் புத்தகத்தை பற்றி பேசும் போது, நூலாசிரியர் சகோதரர் நூருத்தீன் அவர்கள் நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு அழகிய தமிழில் அனைவருக்கும் எளிமையாக புரியுமளவிற்கு மிகவும் சிறப்பாக தொகுத்துள்ளார்.

நாம் கேள்விபட்டிருக்காத தமிழ் வார்த்தைகளையும் தோழர்கள் புத்தகத்தில் பார்க்கலாம். சஹாபாக்களைப் பற்றி அரபியில் படித்து உணர்வதை விட நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் படிக்கும் போது உணர்வுபூர்வமாக உள்ளது. தோழர்களின் ஒவ்வொருவரின் வரலாறுகளும் நம் கண்களை கலங்க வைத்து விடும் அந்தளவிற்கு நூலாசிரியர் நபித்தோழர்களின் முழுமையான வரலாறுகளை மிகைப்படுத்தாமல் தொகுத்துள்ளார் என்றார்.

DSC03591

இறுதியாக சகோதரர் ஜக்கரிய்யா அவர்கள் தோழர்கள் புத்தகத்தை படித்த அனுபவத்தை பேசும்போது, தோழர்கள் புத்தகத்தின் முதல் இரண்டு பக்கங்களை படித்த மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் வரத்தொடங்கின.

ஒவ்வொரு தோழர்களின் வரலாறுகளும் நமக்கு படிப்பினைத் தரும் என்பதில் சந்தேகமில்லை மிகவும் சிறப்பாக நூலாசிரயர் தொகுத்துள்ளார். இந்த புத்தகத்தின் விலை குறைவுதான், இதில் இருக்கும் படிப்பினையோ அதிகம்.

நாம் இன்று பயனும் தராத கதை புத்தகங்களையும், சினிமாக்களையும், செய்தியில் காட்டப்படும் அரசியல் சண்டைகளையும், மார்க்கச் சண்டைகளையும் தான் ரசித்துப் பார்க்கின்றோம். அதற்காக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றோம். இஸ்லாமிய வரலாறுகள் தெரிந்து கொள்ள அலட்சியமாகவே உள்ளோம் என்றார்.

பின்னர்  "தோழர்கள்" புத்தகத்தை பொதுமக்களில் சிலர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இறுதியாக மஜ்லிஸ் துஆயே கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றன.

தகவல் :

பி.ஜி.எம் முஜாஹித்

சித்தன் தெரு

காயல்பட்டினம்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை

வெற்றியாளர்கள் யார்?

(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும் நல்லதைக் கொண்டு  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
அல்-குர்ஆன் (3:104)

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com