மைக்ரோகாயல், ஷிஃபா இணைந்து நடத்திய இலவச அக்யூ பங்சர் மருத்துவ முகாம் 110பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர்!! | ![]() | ![]() |
23 அக்டோபர் 2013 மாலை 10:33 |
மைக்ரோ காயல் அறக்கட்டளை , ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் இணைந்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான இலவச அக்யூபங்சர் மருத்துவ முகாம் அக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:- மைக்ரோ காயல் அறக்கட்டளை , ஷிஃபா ஹெல்த் &வெல்ஃபேர் அசோஷியேஷன் , நாகர் கோவில் அட்டாமா மருத்துவக்குழுவினர் இணைந்து நடத்திய அக்யூ பங்சர் இலவச மருத்துவ முகாம் கடந்த 20/10/2013 ஞாயிறன்று நமதூர் எல்.கே.. லெப்பைத்தம்பி சாலையில் உள்ள எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் காலை 09:30 மணி முதல் மாலை ஐந்து மணிவரை நடைபெற்றது. மைக்ரோ காயல் அறக்கட்டளையின் செயலாளரும், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் செயற்குழு உறுப்பினருமாகிய சாளை முஹம்மத் முஹியித்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மைக்ரோகாயல் அறங்காவலர் குழு உறுப்பினர் ஹாஃபிழ். மு.மு. முஜாஹித் அலி இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மைக்ரோகாயல் அறங்காவலர் குழு உறுப்பினரும், ஷிஃபா துணைத்தலைவருமான செய்யத் ஹசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மைக்ரோ காயல் அறக்கட்டளையின் தலைவர் டி.ஏ.எஸ். அபூபக்கர் தலைமுறையாற்றினார். அவர் தனது தொடக்க உரையில் மாற்று முறை மருத்துவத்திற்கான தேவையைப்பற்றியும் அதற்கான இந்த மருத்துவ முகாமை முறையாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பற்றியும் குறிப்பிட்டார். அடுத்ததாக இந்த முகாமை இணைந்து நடத்தும் மூன்று அமைப்புக்களை பற்றி சாளை முஹம்மத் முஹியித்தீன் அறிமுகவுரையாற்றினார். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 'மைக்ரோகாயல் அறக்கட்டளை', நாற்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பதினாலு இலட்சம் (14,00,000) மேற்ப்பட்ட மருத்துவ உதவிகளையும் அத்துடன் முதற்கட்ட 50 பயனாளிகளுக்கு 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' என்ற மருத்துவ அட்டை வினியோகித்து சேவைகள் புரிந்து வருவதாக அவர் தெரிவித்தார். கல்விக்கென்று இக்ராஃ கல்விச் சங்கம் துவக்கப்பட்டு செயலாற்றி வருவதைப் போல், மருத்துவத்திற்கு ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அனைத்து மருத்துவ உதவிகளையும் ஒருங்கிணைத்து மிக சிறப்பாக செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். ATAMA அக்யூ பங்சர் மருத்துவக் குழுவை அறிமுக படுத்தி பேசினார். அடுத்து பேசிய நாகர் கோவில் ஸஃபா அக்யூ பங்சர் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர் மு. சாதிக் HHA., RNMP.,ND., DT., LEM., MD(Acu), Ph.D(Acu) மாற்று முறை மருத்துவம் பற்றி விரிவாக உரையாற்றினார். அவர் தனது உரையில் , இஸ்லாம் விதித்துள்ள வணக்க முறைகளிலும் வாழ்க்கை முறைகளிலும் உள்ள மருத்துவ அம்சங்களை குறிப்பிட்டார். அத்துடன் நமது அன்றாட உணவுப்பழக்கங்கள் , தூங்கும் நேரம் உள்ளிட்ட வாழ்க்கைப்போக்கில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் நோய்களையும் , அவற்றை சரியாக பின்பற்றுவதினால் கிட்டும் நலன்களையும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த உரைக்குப்பிறகு மருத்துவ முகாமிற்கு முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் வில்லைகள் வழங்கப்பட்டதோடு சிகிச்சை தொடங்கியது. நாகர்கோவில் அட்டாமா மருத்துவக்குழுவைச் சார்ந்த 07 அக்யூ பங்சர் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். திரை மறைவில் அமைக்கப்பட்ட பகுதிகளில் பெண்களுக்கு பெண் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு அவர்களின் உடல் பிரச்சினை குறித்து விரிவான ஆலோசனையும் , துணை உணவுப் பரிந்துரையும், ஊசி சிகிச்சையும் , அக்யூ பங்சர் குறித்த வெளியீடுகளும் வழங்கப்பட்டது. அக்யூ பங்சர் குறித்த நூல்களும், துணை உணவுகளும் முகாமில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கிச் சென்றனர். முகாமில் முன்பதிவு செய்து தாமதமாக வந்தவர்களும், முன் பதிவு செய்யாமல் வந்தவர்களும் சிகிச்சை பெற முடியாமல் திரும்பச்சென்றனர். மாலை 05:00 மணி வரை நடந்த இந்த முகாமில் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமின் இறுதியில் மருத்துவர்களுக்கும் , தன்னார்வ தொண்டர்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது. ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் செயற்குழு உறுப்பினர் சாளை ஷேக் ஸலீம் நன்றி உரை நவில கஃப்பாரா துஆவுடன் முகாம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஹாஃபிழ். மொஹுதூம் அலீ ஸாஹிப், வாஹித் ஸைஃபுத்தீன் , சாளை பஷீர் , ஸ்டார் ரெடிமேட்ஸ் முத்து இஸ்மாயீல் , சாளை முஹம்மத் முஹியித்தீன் , ஹாஃபிழ். மு.மு. முஜாஹித் அலீ , 48 முஹம்மத் இப்றாஹீம் , ஹாஃபிழ் ஹச்.ஏ.. இஸ்மாயீல் ஆகியோர் செய்திருந்தனர். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |