بسم الله الرحمن الرحيم
Wednesday 24th April 2019 | 18 ஷஃபான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
அமெரிக்காவில் ஓர் குர்ஆன் ஹாஃபிழா ! காயல் மாணவி சாதனை ! அச்சிடுகமின்-அஞ்சல்
16 ஜூன் 2015 காலை 06:47

ஹாஜி எல்.எஸ். இபுராஹீம் அவர்களின் பேத்தியின் மகளும், ஹாஜி பாளையம் எஸ்.ஏ. அஹமது முஸ்தஃபா, ஹாஜி எம். டி. முத்து மொஹுதூம் அவர்களின் பேத்தியுமாகிய அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் வசிக்கும், தவ்ஃபீக் முஃப்லிஹா தம்பதியரின் அன்பு புதல்வி ஷுரஃபா சாதிகா (12 வயது) அவர்கள் முழு குர்ஆனையும் மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஹாபிழ் எம்.எம். முஜாஹித் அலி அவர்களின் மருமகளாவார்.

நியு ஜெர்சி, பிஸ்காட்டவே (PISCATAWAY) என்ற நகரத்தில் இயங்கி வரும் இஸ்லாமியப்பள்ளிக்கூடம் அன்னூர் - தாருல் ஹுதா அகாடெமியில் கே.ஜி வகுப்பிலிருந்தே படித்து வரும் இம்மாணவி ஆறாம் வகுப்பு இந்த ஆண்டு படித்து முடித்துள்ளார்.

இப்பள்ளியில் வாரத்தில் ஐந்து நாட்களும் நடைபெற்று வரும் முழு நேர அகடமிக் படிப்பு, அரபிக், இஸ்லாமிய பாடங்கள் மற்றும் குர்ஆன் ஹிப்ழ் படிப்பு முழு நேரமாக மாணவ / மாணவியர்களுக்கு தனி தனி பிரிவாக நடைபெற்று வருகிறது. இந்தப்பள்ளியில் ஹிப்ழ் பிரிவு ஆரம்பித்து இதுவரை 43 ஹாபிழ்கள் உருவாகி உள்ளனர்.

மாணவி ஷுரஃபா சாதிகா முழு நேர படிப்பு மற்றும் குர்ஆன் மனனம் இரண்டையும் சற்றும் தரம் குறையாமல் நல்ல மதிப்பெண்களுடன், முழு முயற்சியுடனும், பெற்றோர் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்புடனும் படித்து இப்போது ஹாபிழாவாக தேர்ச்சி பெற்று அவர்களின் குடும்பத்திற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், நமது ஊருக்கும் அளவில்லா பெருமை சேர்த்துள்ளார். மாஷா அல்லாஹ்!

tahfeez-shield

மூன்றாம் வகுப்பில் இருந்து ஆரம்பித்த இம்மாணவியின் ஹிஃப்ழ் பயணம் நான்கு ஆண்டுகள் கழித்து வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்..

இம்மாணவியோடு சேர்த்து இன்னும் இரண்டு மாணவிகளும், ஐந்து மாணவர்களும் இவ்வாண்டு ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ளனர். பள்ளி நிர்வாகத்தினர் அவர்களை கவுரவப்படுத்தி நினைவு கேடயத்தை பரிசாக ஜூன் 13 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அளித்துள்ளார்கள். அல்லாஹு அக்பர் !

இம்மாணவி இப்பள்ளியில் வருடா வருடம் நடைபெறும் கிராத் போட்டிகள் அனைத்திலும் தனது இனிமையான குரலோடும் தஜ்வீதோடும் ஓதி தொடர்சசியாக வெற்றிகள் பல பெற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

tahfeez-shield

2012-ம் ஆண்டு கன்னட்டிகட் (CONNETICUT) மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து அமெரிக்க முஸ்லிமகள் மாநாட்டில் வயது வாரியாக நடைபெற்ற குர்ஆன் கிராத் போட்டியில் முதலிடம் பெற்ற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஷா அல்லாஹ் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பயின்று வரும் ஹாபிழாவின் தங்கை ரஹீஃபா ராபியா வரும் கல்வியாண்டில் குர்ஆன் ஹிப்ழ் பிரிவில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாபிழா ஷுரஃபா சாதிகா அவரது பட்டமளிப்பு விழாவின் போது ஓதிய குர்ஆன் வசனங்களின் ஒலிப்பதிவை கீழே கேட்கலாம்.

https://youtu.be/W2wSapyPasE

குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக! ஆமீன்!!

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com