بسم الله الرحمن الرحيم
Sunday 21st July 2019 | 18 துல்கஃதா 1440AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
கே.ஸி,ஜி.ஸி யின் வெள்ள நிவாரண மறுவாழ்வு திட்ட மூன்றாம் பருவ நிதியளிப்பில் ரூ 5,97,700 பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது!அச்சிடுகமின்-அஞ்சல்
31 ஜனவரி 2016 மாலை 02:49

வெள்ளிக்கிழமை (29-01-16) அன்று KCGC அமைப்பின் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு (Rehabilitation) அளிக்கும் வகையில் சென்னை,கோட்டூரில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹபீப் பள்ளிவாசலில் KCGC FLOOD REHABILITATION FUND DISTRIBUTION நிகழ்வுகள் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிகழ்வில் 71 நபர்களுக்கு ரொக்கப்பணமும், வெள்ள பாதிப்பின் போது தனது காது கேட்கும் திறனை இழந்த இரண்டு மாணவ, மாணவிகளுக்கு காது கேட்கும் கருவிகளும் , மொத்தமாக ரூ.5,97,700 (ரூபாய். ஐந்து லட்சத்தி தொண்ணூற்று ஏழாயிரத்தி எழுநூறு) உதவிகள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

kc1_copy_copy_copy

ஏற்கனவே இவ்வமைப்பின் சார்பாக மூன்று தவனைகளில் சுமார். முப்பது லட்சக்கணக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ் தேவையின் அடிப்படையில் இன்னும் தொடரலாம்.

முன்னதாக கோட்டூர் Unity Public School மாணவர் அல்ஹாபிழ். அஸ்ஸாத் அவர்களின் இறைமறை ஓதுதலோடு இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது,

இந்த நிகழ்விற்கு காயல்பட்டணத்தைச் சார்ந்த கோட்டூர் பள்ளியின் பொருளாளர் ஜனாப். ஆடிட்டர். அப்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள்,

சிறப்பு அழைப்பாளர்களாக அடையார் ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் மவுலானா ஆலிம் சதீதுத்தீன் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு "இஸ்லாத்தில் மனிதாபிமான உதவிகள் " என்ற தலைப்பில் சிறிது நேரம் உரையாற்றினார்கள்,

gc1

இதனை தொடர்ந்து சென்னை பாரீஸ் எல்,கே,எஸ் ஜுவல்லர்ஸ் உரிமையாளரும் ஜன்சேவா காயல்பட்டினம் சென்னை கிளைகளின் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப்.L.K.K. லெப்பை தம்பி அவர்களும், கோட்டூர் பள்ளியின் இமாம் மவுலானா ஆசிக் இலாஹி காசிஃபி அவர்களும் " இஸ்லாம் கூறும் மனிதாபிமானம், தொண்டுகள்" என்ற தலைப்பில் சிறிது நேரம் உரையாற்றினார்கள்,

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு இறுதியாக KCGC அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜனாப்.குளம் முஹம்மது தம்பி அவர்கள் நன்றி உரையாற்ற இந்த நிகழ்வு சிறப்பாக நிறைவுபெற்றது. நிகழ்ச்சியை சகோதரர் எம்.எம்.முஜாஹித் அலீ தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்விற்காக சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ், சகோ. நெட்காம் புகாஹி, சகோ. M.M.அஹமது, சகோ. நஜீம் பாபு, சகோ. பல்லாக் சுலைமான், சகோ. இப்னு சவுது ஆகியோர்களும் கோட்டூர் ஜும்மா பள்ளியின் நிர்வாகிகளும் சேர்ந்து இந்த நிகழ்விற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். எல்லா புகழும் ஏக வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.

தகவல்.

சொளுக்கு முஹம்மது நூஹ்.

KCGC - செயற்குழு உறுப்பினர்.

சென்னை.


Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com