செப்டம்பர் 11 அரஃபா தினம்! செப்டம்பர் 12 ஹஜ் பெருநாள்! அல் ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!அச்சிடுக
11 செப்டம்பர் 2016 காலை 11:44

ஹிஜ்ரீ 1437ஆம் ஆண்டின் அரஃபா தினம் செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை என்றும் அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12ஆம் தேதி திங்கள் அன்று  ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ் பெருநாள் என்றும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் ஹஜ் பெருநாளன்று காலை சரியாக 07.30  மணியளவில், காயல்பட்டினம் கடற்கரை பெருநாள் திடலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெருநாள் தொழுகைக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்கான தொழுகை விரிப்புகளையும் கொண்டு வருமாறும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி அரஃபா தின நோன்பு திறப்பு ஏற்பாடுகளும் வழக்கம்போல் ஐ.ஐ.எம் வளாகத்தில் நடைபெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆ உரையின்போது மஸ்ஜிதின் கத்தீப் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி தெரிவித்தார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh