بسم الله الرحمن الرحيم
Sunday 22nd September 2019 | 22 முஹர்ரம் 1441AH
பதாகை
news menu left
news menu right
 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
ஏழைகளுக்கு தொண்டாற்றுவதன் மூலம் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை முன்னுதாரணமாக திகழ்கிறது வெள்ளி விழாவில் சென்னை நீதிபதி பி.ராமலிங்கம் புகழாரம்அச்சிடுகமின்-அஞ்சல்
17 செப்டம்பர் 2016 மாலை 01:15

                                               

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் பிரபலமானது கே.எம்.டி.மருத்துவமனை. காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை சார்பில் பொதுநல நோக்குடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன.

     இந்நிலையில் கே.எம்.டி. மருத்துவமனையின் வெள்ளிவிழா அறக்கட்டளை தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எம்.சதக்கத்துல்லா, அறங்காவலர்கள் பாஸி ஹாஜி, டி.ஏ.எஸ்.அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயலாளர் ஏ.கே.செய்யது அப்துல்காதர் வரவேற்றுப் பேசினார். செயலாளர் வாவு எம்.என்.மொகுதஸீம் அறிக்கை வாசித்தார். காயல் எஸ்.இ.அமானுல்லா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

IMG-20160917-WA0078

IMG-20160917-WA0083

      பிரபல மருத்துவர்களான நெல்லை எம்.ஏ.முகம்மது தம்பி, திருச்செந்தூர் ஏ.ராமமூர்த்தி, தூத்துக்குடி ஏ.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.கே.முரளிதரன் வெள்ளிவிழா மலரை வெளியிட, அதனை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.சித்தி அதிய்யா முனவ்வரா பெற்றுக் கொண்டார். அடுத்த 2 பிரதிகளை எஸ்.எம்.மிஸ்கீன் சாகிப், வாவு மகளிர் கல்லூரி நிறுவனர் எஸ்.செய்யது அப்துல் ரஹ்மான் ஆகியோர் பெற்றனர்.

      விழாவில் சென்னை தெற்கு மாவட்ட நீதிபதி பி.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

      இஸ்லாமிய பெரியவர்களால் திறம்பட நடத்தப்பட்டு வரும் இந்த மருத்துவமனை சாதி, மத பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருவது கண்டு மகிழ்கிறேன். மனித சமுதாயத்திற்கு அடிப்படையான அவசியம் என்றால் கல்வியும், ஆரோக்கியமும் தான். இந்த இரண்டையும் காயல்பட்டினத்தில் நிறைவேற்றி வருகிறீர்கள். இவற்றில் கல்விப்பணி ஓரளவு எளிதானது என்றே கருதுகிறேன்.

       ஆனால் மருத்துவப்பணி மிகவும் கடினமானது. அதுவும் கிராமப் பகுதியான இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை 25 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருவது அபூர்வமான சாதனை. இங்கு 50 சதவீத கட்டணம் என்றும், அதுவும் ஏழைகள் என்றால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் தமிழ்நாட்டிற்கே ஒரு முன்னுதாரணம் ஆகும்.

       -இவ்வாறு அவர் பேசினார்.

      முன்னதாக தொடக்க கால அறங்காவலர் பி.எஸ்.முகம்மது அபூபக்கர் வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்தார். மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை பொருளாளர் டபிள்யூ.எஸ்.அப்துல் கப்பார், காயல்பட்டினம் பிரமுகர்கள் எஸ்.எம்.உஸர், எஸ்.ஓ.அபுல்ஹசன் கலாமி, எல்.கே.கே.லெப்பைதம்பி,      

 நகராட்சி கவுன்சிலர்கள் எம்.ஜஹாங்கிர், ஏ.கே.முகம்மது மெய்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாது உள்பட திரளானோர் விழாவில் கலந்து கொண்டனர். நிறைவில் மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீப் நன்றி கூறினார். 

தகவல்களில் உதவி :

ச.பார்த்திபன் 

பத்திரிக்கையாளர் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com