بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு! நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி!!அச்சிடுகமின்-அஞ்சல்
05 ஜனவரி 2017 மாலை 04:02

நேற்று ஜனவரி 04 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதற்காக கட்சியின் விதி 18ல் மாற்றம் செய்யப்பட்டது. தி.மு.கவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஸ்டாலினை செயல் தலைவராக முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது.  சூழல்தான் என்னை செயல்தலைவராக ஆக்கியுள்ளது' என ஸ்டாலின் உரையாற்றினார்.  

stalin

மேலும் அவர் பேசுகையில், 'எல்லா பொறுப்புகளுக்கு விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்டேன். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் தலைவர் உடல்நலம் குன்றி இருக்கும் பொழுது இந்த பதவியை ஏற்றுக் கொள்வதில் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த பொறுப்பினை சிறப்பாக ஏற்று செயல்படுவேன்  என்றார் செயல் தலைவர் ஸ்டாலின்.

இதன் தொடர்ச்சியில் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் வரிசையில் காயல்பட்டினம் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com