بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினத்தில் அரசு தேர்வு எழுதும் மாணவியர்களுக்கு - மாணவர்கள் அமரும் பரிட்சை அறை ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து நடப்பது என்ன? குழுமம் மனு! மாணவியர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடையேதுமில்லை என தேர்வுத்துறை தகவல்!!அச்சிடுகமின்-அஞ்சல்
28 பிப்ரவரி 2017 மாலை 12:00
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! 
காயல்பட்டினத்தில் அரசு தேர்வு எழுதும் மாணவியர் ஒரு  சிலருக்கு -  சில நேரங்களில், மாணவர்களுடன் தேர்வு எழுதும் அறை (EXAMINATION HALL) ஒதுக்கப்படுவதால், மாணவியர்க்கு அசௌகரியமாக இருப்பதாக பெற்றோர் சிலர் - சில தினங்களுக்கு முன்பு நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்திருந்தனர்.
இன்னும் சில தினங்களில் தேர்வுகள் துவங்கவுள்ள சூழலில், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - இன்று சென்னையில், கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் டாக்டர் வசுந்தரா தேவி ஆகியோரிடம் இது சம்பந்தமாக மனு வழங்கப்பட்டது.
பல வாரங்களுக்கு முன்பே தேர்வு அறைகள் ஒதுக்கும்பணி நிறைவுற்றுவிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், அடுத்த ஆண்டு இது சம்பந்தமாக பரிசீலக்கலாம் என்றும், இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எந்த தடையுமில்லை என்றும், மீண்டும் இது குறித்து தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் உறுதியளித்தனர்.
தேர்வு எழுதும் மாணவியர் - ஹிஜாப் அணிய தடை செய்யக்கூடாது என காயல்பட்டினம் முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், 2015 ம் ஆண்டு, துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு வழங்கியபிறகு, இது சம்பந்தமாக - மாவட்ட தலைமை கல்வி அதிகாரிக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.
தகவல்: நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com