بسم الله الرحمن الرحيم
Thursday 18th October 2018 | 07 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்!அச்சிடுகமின்-அஞ்சல்
28 பிப்ரவரி 2017 மாலை 12:11

ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரஜன் மற்றும் கார்பன் ஆகிய மூலக்கூறுகளை உள்ளடக்கியது. ஆக்சிஜன் உதவியுடன் எரியக்கூடிய எரிபொருளுக்கான ஆதாரமாக இருப்பதுதான் இந்த ஹைட்ரோ கார்பனின் முக்கியமான பயன்பாடு. கார்பன் மூலக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இதில் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்டவைகள் வாயுக்களாகக் காணப்படுகின்றன. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, சமையல் எரிவாயு, ஷேல் எரிவாயு போன்றவற்றின் மூல ஆதாரமாக இருப்பவை ஹைட்ரோ கார்பன்கள்.

ongc1-696x463

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட இடங்கள்

ஹைட்ரோ கார்பன்கள் இந்தியாவில் 31 இடங்களில் (இதில் மொத்தம் 46 பகுதிகளில் 28 பகுதிகள் வயல் பரப்பிலும், 16 பகுதிகள் கடலோரப் பரப்பிலும் அடங்கும்) இருப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation -ONGC) கண்டறிந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலும் அடங்கும்.

வருவாயை ஈட்ட தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் வருவாயை ஈட்ட, இந்த 46 பகுதிகளிலிருந்து எரிவாயு எடுப்பதற்கு ஒப்பந்தம் மூலம் எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு தேர்வு செய்தது. கடந்த பிப்.15ஆம் தேதியன்று பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதில் 47 நிறுவனங்களுக்கு (43 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் நான்கு வெளிநாட்டு நிறுவனங்கள்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், வருவாயின் அடிப்படையில் அரசுக்கு பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

hc-1

hc-2

 

இத்திட்டத்தின் மூலம் 15 ஆண்டுகளில் 40 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் 22.0 BCM அளவில் வாயுக்கள் எடுக்க முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 15 ஆண்டுகளில் 46,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட முடியும் என்றும், இதில் மத்திய அரசுக்கு 9,600 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த 9600 கோடி ரூபாயில், திட்டத்தைச் செயல்படுத்தும் மாநில அரசுக்கு ராயல்டி வழங்கப்படுகிறது. அதாவது தமிழக அரசுக்கு 40 கோடி ரூபாய் ராயல்டி வருடத்திற்கு கிடைக்கும் என்றும், 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திட்டம் குறித்த அச்சம்

பூமிக்கடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பனை எடுக்க, 6000 அடிக்கும் மேல் ஆழ்துளையிடப்படுகிறது. இதனால் கடல்நீர் உட்புகும் என்ற அச்சம் விவசாயிகளிடையே உள்ளது. எனவே திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியைச் சுற்றிலும், விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.  அது செயல்படுத்தக் கூடிய இடம் விவசாயம் சார்ந்த நிலம் என்பதே அச்சமாக உள்ளது.

தகவல்: இப்போது 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com