بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா!அச்சிடுகமின்-அஞ்சல்
06 மார்ச் 2017 மாலை 02:31
காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 8வது பட்டமளிப்புவிழா 22.02.17 புதன்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில் மூன்றாமாண்டு கணினி அறிவியல் மாணவி K.A.L. பீவி பாத்திமா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மாணவியருக்குப் பட்டமளித்துச் சிறப்புரை வழங்கும் சிறப்பு விருந்தினராக திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்வி மையத்தின் இயக்குநரும் தலைவருமான முனைவர் N. மணிமேகலை M.A., B.Ed., Ph.D. வருகை தந்திருந்தார். கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. வரவேற்புரை வழங்கினார். கல்லூரிச் செயலர் ஹாஜி W.M.M. மொகுதஸீம் B.A., (CS) வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் முனைவர் N. மணிமேகலை M.A., B.Ed., Ph.D., பெண் இலக்கு திருமணம் என்ற நிலை மாறி, உயர்கல்விகற்க பெற்றோர்முன் வரவேண்டும் அனைத்து துறையிலும் பெண் ஆணுக்குசமம் என்றிருந்தால் பெண் கொடுமை, வன்முறைமாற்றம் அடையும் என்ற சிறப்புரை வழங்கி மாணவியருக்குப் பட்டமளித்துப் பாராட்டினார்.
DSC_0277_copy
DSC_0635
DSC_0656
 
    பட்டம் பெறத்தகுதி பெற்ற 335 மாணவியருள் 326 மாணவியர் நேரடியாகப் பட்டம் பெற வருகை தந்திருந்தனார். 302 மாணவியர் இளங்கலைப்பட்டமும் 22 மாணவியர் முதுகலைப்பட்டமும் பெற்றனர். பொருளியல் துறை மாணவியர் 23 பேரும், வணிக நிர்வாகவியல் துறையில் 50 மாணவியரும், ஆங்கிய இலக்கியத்துறையில் 53 மாணவியரும், தகவல் தொழில்நுட்பவியலில் 43 மாணவியரும், கணிதவியல் துறையில் 45 மாணவியரும், கணினி அறிவியலில் 42 மாணவியரும், வணிகவியலில் 46 மாணவியரும் இளங்கலைப்பட்டம் பெற்றனர்.
 DSC_0267
    முதுகலைப்பட்டத்தை முதுகலை ஆங்கில இலக்கிய மாணவியர் 10 பேரும், முதுகலை வணிகவியல் மாணவியர் 12 பேரும் பெற்றனர். பட்டம் பெற்றவர்களுள் பல்கலைக்கழகத் தரவரிசையில் பகுதி I அரபிக் மொழிப் பாடத்தில் முதலிடம் பெற்ற கணிதவியல் துறை மாணவி N. கதீஜா நுஸ்ரத் ஃபாஹிமா முதன்மைப்பாடம் முதுகலை வணிகவியலில் முதலிடம் பெற்ற வணிகவியல் துறை மாணவி S. ரம்ஜான் பாத்திமா ஆகிய இருவருக்கும் பட்டச் சான்றிதழும் தங்கப்பதக்கமும் வழங்கிப் பாராட்டினார். 26 மாணவியர் பல்கலைக் கழகத்தரவரிசையில் சிறப்பிடம் பெற்றிருந்தினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D.. வழிகாட்ட, பட்டம் பெற்ற மாணவியர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லூரி துணை செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), நன்றி நவின்றார். விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி. மெர்சி ஹென்றி M.A., Ph.D. மாணவியரின் பெற்றோர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உதவிப்பேராசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவியரை வாழ்த்தினர். நிறைவாக மூன்றாமாண்டு கணினி அறிவியல் மாணவி துஆ ஓத, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com