بسم الله الرحمن الرحيم
Friday 21st September 2018 | 10 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
துபையில் மார்ச் 31 அன்று ''காயலர் தினம் 2017''! ஸஃபா பார்க்கில் காலை 10 மணி முதல் தொடங்கும்!!அச்சிடுகமின்-அஞ்சல்
30 மார்ச் 2017 காலை 09:51

 திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் மார்ச் 31 வெள்ளிக்கிழமை “காயலர் தினம் 2017” கொண்டாடப்படும்.

துபை ஸத்வாவில் அமைந்துள்ள ஸஃபா பார்க்கில் காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்கும். காலை 10 முதல் 11 மணி வரை உறுப்பினர்களின் வருகைப் பதிவும், பரஸ்பரம் முகமன் கூறலும் நடைபெறும்.
காலை 11 முதல் பகல் 12 மணி வரை குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி நடைபெறும். பின்னர் ஜும்ஆ தொழுகைக்காக அருகிலுள்ள மஸ்ஜிதுக்கு ஆண்கள் சென்று வர, அதன் பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பிக்கும்.
பொதுக்குழு உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெறும். துபை காயல் நல மன்ற செயல்பாடுகள் குறித்தும், நமதூர் பிரச்சினைகள் குறித்தும் அலசப்பட்டு, அவற்றிற்கு பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து கருத்துகளும், ஆலோசனைகளும் பெறப்படும்.
பிற்பகல் 2.15 மணிக்கு மதிய உணவு பரிமாறப்படும். மாலை 3.00 மணிக்கு பெரியவர்களுக்கும், குழந்தைக
ளுக்குமான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகும். ஆண்களுக்கு வேடிக்கை விளையாட்டுகளும், வினாடி வினா போட்டியும் நடைபெறும்.
மாலை 4.15 மணிக்கு அஸ்ர் தொழுகை இடைவேளையைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் தொடரும்.
மாலை 5.15 மணிக்கு பரிசுக் குலுக்கல் நடைபெற்று, குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தங்க நாணயங்களும், கண்கவர் பரிசுகளும் வழங்கப்படும்.
மாலை 6 மணிக்கு நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்.
காயலர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து சிறப்பித்துத் தரவேண்டும் என்று துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

 செய்தி : M.S. அப்துல் ஹமீத்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com