بسم الله الرحمن الرحيم
Saturday 18th November 2017 | 28 ஸஃபர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் விற்பனைத் திருவிழா – 2017ம் நிறைவு விழா!அச்சிடுகமின்-அஞ்சல்
02 ஏப்ரல் 2017 காலை 08:06

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 22.03.17 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் விற்பனைத் திருவிழா – 2017ம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி ஜெ. எல்லோரா எம்.காம்., எம்ஃபில்., பி.எச்.டி., கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி எம்.ஏ., பி.எச்.டி., முன்னிலை வகித்தனர்.

wvc_copy_copy_copy_copy_copy

மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி M.M. மைமூன் ஆமீனா கிராத் ஓத விழா தொடங்கியது. வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர் R. ஜெய விக்னேஸ்வரி எம்.காம்., எம்.பி.ஏ., வரவேற்புரை வழங்கியதோடு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். திருநெல்வேலி GR Info Systems நிறுவனத்தின் பொது மேலாளர் திருமதி L. காயத்ரி பி.காம்., எம்.ஏ., எம்ஃபில்., சிறப்பு விருந்தினராக வருகை தந்து புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் பற்றி விரிவாக சிறப்புரை ஆற்றினார்.

வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் ர. தங்கராணி எம்.காம்., எம்ஃபில்., செட்., நன்றியுரை வழங்கினார். மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி S.D. பல்கீஸ் புஷ்ரா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், உதவிப் பேராசிரியைகள், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com