بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
துளிரில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிட அடிக்கல்நாட்டு விழா!அச்சிடுகமின்-அஞ்சல்
04 ஜூன் 2017 மாலை 05:25

துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் 13.05.2017 சனிக்கிழமை மாலையில் கூடுதல் பயிற்சி மற்றும் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முகைதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிறுவனரும்இ காயல்பட்டினம் வரலாற்று ஆசிரியறுமான எம்.ஏ. அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார். சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி ஃபஜல் இஸ்மாயில் இறைமறை வசனங்களை ஒதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். துளிர் ஆர்வலர் கொமந்தார் இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார்.


f_1   

துளிரின் நிறுவனர் வக்கீல் அஹமத் துளிருக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கியதோடு இந்த வகுப்பறை கட்டிடங்களை ஹங்காங் காயல் மாணவர் நல அமைப்பும்இ சிங்கப்பூர் காயல் நல மன்றமும் இணைந்து கட்டித்தர பொருளுதவி வழங்கி இருப்பதை நன்றியோடு தெரியப்படுத்தினார். மேலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் சிறப்புடன் சேவையாற்றி வரும் காயல் நல மன்றங்களும்இ காயல்பட்டினத்தின் இளைஞர்களும்இ தனவந்தர்களும் துளிருக்கு பொருளுதவிகள் வழங்கி ஆதரவு அளிப்பதன் மூலம் துளிர் தொடர்ந்து இவ்வட்டாரத்திலுள்ள அனைத்து இயலாநிலை குழந்தைகளுக்கு சாதிஇ மத பேதங்களை கடந்து மறுவாழ்வு பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய சமூக ஆர்வலர் கவிஞர் அமானுல்லா பேசும் போது துளிர் ஆற்றுகின்ற சேவை இயலாநிலை குழந்தைகளுக்கு மிகவும் பயனள்ளது என்றும் அதன் அன்றாட பணிகள் மிகவும் கடினமானது என்றும் அதை சவாலாக தொடர்ந்து எடுத்துச் செல்லும் துளிர் பணியாளர்களும்இ நிர்வாகிகளும் பாராட்டுக்குறியவர்கள் என்றும் குறிப்பிட்டார். காயல் நல மன்றங்கள் இது போன்று பல்வேறு சேவைகளை தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிவருகின்றார்கள் என்றும் அதன் ஒவ்வொரு உறுப்பினர்களும் தருகின்ற பொருளுதவியும்இ ஒத்துழைப்புமே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
சமூக ஆர்வலர் நிஜார் தனது வாழ்த்துரையில் பேசும் போது இவ்வட்டாரத்தில் சாதாரண குழந்தைகளுக்கு பல்வேறு பள்ளிகள் நடத்தப்படும்பொழுது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென்று சிறப்பு பள்ளி இல்லாத குறை முன்பு இருந்தது ஆனால்; சிறப்பு குழந்தைகளுக்கென்று துளிர் பள்ளியை துவக்கிய பின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும்இ சாதாரண குழந்தைகளைப் போல் ஆர்வமுடன் பள்ளி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டார்.

iq_found
துவாக்களுடன் கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா நடைபெற்றது. ஹங்காங் நாட்டின் மூத்த பிரதிநிதிகள்

அப்துல் வதூத்இ கம்பல் பக்ஸ் பாக்கர் சாஹிப்இ வி. எம். எஸ். அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

f9
துளிரின் பெற்றோர் மன்ற தலைவர் வி.எஸ்.ஏ. ஆயிஷா சாஹிப் தம்பி நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துளிரின் திட்டஒருங்கிணைப்பாளர் சித்திரம்ஜான் மற்றும் பணியாளர்கள் சிறப்புற செய்திருந்தனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com