بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு!அச்சிடுகமின்-அஞ்சல்
10 ஆகஸ்ட் 2017 மாலை 12:06

இந்தோனேஷியாவிலுள்ள கடலில் மூழ்கி, காயலர் உயிரிழந்துள்ளார். விரிவான விபரம்:- 

காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த சாளை எஸ்.ஹுமாயூன் கபீர் உடைய மகன் சாளை ஷேக் ஷீத் (வயது 28). சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ‘க்ரஸண்ட் மெடிக்கல்ஸ்’ அன்ஸாரீ உடைய மகள் ஆயிஷா ஹுமைராவுக்கும், இவருக்கும் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01ஆம் நாளன்று திருமணம் நடைபெற்றது. 

சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், அங்கு தன் மனைவியுடன் வசித்து வந்தார். விடுமுறையைப் பயன்படுத்தி, மனைவி ஆயிஷா ஹுமைராவை அழைத்துக்கொண்டு நேற்று இந்தோனேஷியா நாட்டில் பின்தான் தீவிலுள்ள Mutiara Beach Resor உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். 

அங்குள்ள கடலில் இவர் இறங்கியபோது, அலையில் சிக்கி மூழ்கிவிட்டார். அங்கிருந்த காவலர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதனைக்குப் பின் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அவரை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து, ஷேக் ஷீத் உடைய சிறிய தந்தையும் – சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினருமான சாளை எஸ்.நவாஸ் உள்ளிட்ட சிங்கப்பூர் காயல் நல மன்ற அங்கத்தினர் இன்று காலையில் இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவிலுள்ள காயலர்கள் உள்ளிட்ட தமிழர்கள் துணையுடன் நல்லடக்கம் குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

தகவல்களில் உதவி : எஸ்.கே. ஸாலிஹ் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com