بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயலர், தூத்துக்குடியில் குத்திக் கொலை!அச்சிடுகமின்-அஞ்சல்
27 ஆகஸ்ட் 2017 காலை 09:40

meeranஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயலர், தூத்துக்குடியில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விரிவான விபரம்:- 

காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த ஃபக்ருத்தீன் என்பவரது மகன் மீராத்தம்பி. (வயது 38). சொந்தத் தொழில் செய்து வருகிறார். டாக்டர் அபுல்ஹஸனது சகோதரியின் மகனாவார். 

நேற்று (26.08.2017.) இரவு தனியார் ஆம்னி பேருந்தில் காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். தூத்துக்குடியில் குரூஸ் ஃபர்னாந்து சிலையருகில் பேருந்து நிறுத்தப்பட்டதையடுத்து, சிறுநீர் கழிக்க இவர் இறங்கியபோது, அடையாளம் தெரியாத ஒருவர் அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியதாகவும், இதனால் அவர் உடலிலிருந்து ஏராளமான குருதி வெளியேறி, நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக தூத்துக்குடி – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

இதனிடையே, இக்கொலை நிகழ்வு தொடர்பாக பரமன்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வு காரணமாக, காயல்பட்டினத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தகவல் : எஸ்.கே ஸாலிஹ் 
மற்றும் சுலைமான்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com