بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை! நகர எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஆகஸ்ட் 2017 மாலை 11:46

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவைச் சார்ந்த மீரா தம்பி (வயது 38) என்பவர் 26/8/2017 அன்று SRM பேருந்தில் பயணம் செய்தபோது தூத்துகுடியில் வைத்து சமூகவிரோதிகளால் நள்ளிரவு சுமார் 11மணியளவில் படு கொலை செய்யபட்டார்...

அநியாயமாக படுகொலைசெய்யபட்ட நபருக்கு நீதி வேண்டியும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் பாரபட்சமின்றி கைது செய்யவேண்டியும், உடனடியாக SRM பேருந்து நிர்வாகம், மற்றும் தமிழக அரசு படுகொலைசெய்யபட்ட நபரின் குடும்பத்தினர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும்,

திங்கட்கிழமை நேற்று காலை  (28.08.2017 திங்கள்கிழமை) சரியாக 10:30 மணியளவில்  காயல்பட்டினம்   புதியபேருந்து நிலையம்  அருகே SDPI கட்சியின் ஒருங்கிணைப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

sdp_copy_copy

இப்போராட்டத்தில் SDPI கட்சி தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷேக் அஷ்ரப் அலி பைஜி, மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ரூமான்அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் உறுதியாக இருந்தனர்.

பின்னர் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் அவர்கள், திருச்செந்தூர் டி.எஸ்.பி மற்றும் தூத்துக்குடி ASP அவர்கள் உடனடியாக வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு, மூன்று நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உத்திரவாதம் அளித்ததன் பெயரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

 இந்த நீதிக்கான  ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜமாஅத் / அரசியல் கட்சியினர் / சமூக ஆர்வலர்கள் / அனைத்து இயக்கங்கள் / மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள்:

தமிழக அரசே... காவல்துறையே...

காயல்பட்டணதைச் சார்ந்த முஸ்லிம் இளைஞரை அநியாயமாக  படுகொலை செய்த  குற்றவாளிகளையும், அதன் பின்னணியில் உள்ளவர்களையும் உடனடியாக கைது செய்... .

படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு  உரிய இழப்பீடு வழங்கு..

போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்ட SRM பேருந்து நிறுவனத்தின் மீது  துறைரீதியாக நடவடிக்கை எடு..

தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் செய்யத்துடிக்கும் மதவாத கும்பல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கு..

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலைகளின் பின்னணியை  விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைத்திடு..  போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

தகவல் :

செய்தி மற்றும் ஊடகத்துறை,

SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com