بسم الله الرحمن الرحيم
Monday 24th June 2019 | 20 ஷவ்வால் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 105 வது செயற்குழு கூட்டம் ஜித்தா ஷரஃபியாவிலுள்ள இம்பாலா உணவக கூட்டரங்கில் நடைபெற்றது!அச்சிடுகமின்-அஞ்சல்
30 ஆகஸ்ட் 2017 காலை 12:16

சஊதி அரபிய்யா ஜித்தாவில் இயங்கும் நம் நகர் மக்களின் நல அமைப்பான காயல் நற்பணி மன்றத்தின் அறிக்கை பின்வருமாறு:-

ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 105 வது செயற்குழு கூட்டம் ஜித்தா ஷரஃபியாவிலுள்ள இம்பாலா உணவக கூட்டரங்கில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிறப்பாக நடந்தேறியது.

வரவேற்புரை:

கூட்டத்திற்கு சகோ.பிரபு நூர்தீன் நெய்னா முன்னிலை வகிக்க, சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்றார். சகோ.சட்னி முஹம்மது லெப்பை இறைமறை ஓதினார். சகோ.செய்யிது முஹம்மது சாஹிப் அனைவரையும் வரவேற்றார்.

தலைமை உரை:

நம் மன்றத்தின் 105 வது செயற்குழு முறையே தொடர்ந்து நடைபெறும்  நிலையில் சீசன்கால பணிகளுக்கு மத்தியிலும் தொலைவிலிருந்து வந்து கலந்து கொள்வது மகிழ்விக்கிறது என்றும், உறுப்பினர்களின் இவ்வாறான உத்வேகம் நம் பணிகளை இன்னும் செழுமையாக்கும் என்றும், மேலும்  மன்றப்பணிகளின் அவசியம் குறித்த செய்திகளையும் தலைமை உரையாக தந்தார் மன்றத்தலைவர் சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன்.

 மன்ற செயல்பாடுகள்:

மன்றத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற சகோதரர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அன்போடு வழங்க வேண்டும் என்றும், மேலும், சென்ற செயற்குழுவிற்கு பிறகு நடந்தேறிய மன்றத்தின் செயல்பாடுகளையும் விரிவாக தந்தார் செயலர் சட்னி செய்யிது மீரான்.

நிதி நிலை:

மன்றம் இதுவரை பெற்ற வரவு, செலவு மற்றும் இருப்பு விபரங்களை நிதிநிலையாக சமர்பித்தார் சகோ.ஷெய்கு அப்துல் காதிர். மேலும், இவர் விடுப்பில் தாயகத்தில் இருந்த சமயம் ஷிஃபா மற்றும் இக்ரஃ சிறப்புக்கூட்டங்களில் கலந்து பரிமாறிய செய்திகளையும் விபரமாக சொன்னார்.

jed_105

 கலந்துரையாடல்:

மன்ற செயல்பாடுகள், பணிகள் மற்றும் நகரில் இயங்கும் ஷிஃபா மற்றும் இக்ரஃ குறித்து உறுப்பினர்கள் ஆரோக்கியமான அருமையான கருத்துப்பகிர்வுகள் சிறப்பான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

 உதவிகள்:

உரிமையோடு உதவி கேட்டு வந்த சொந்தங்களின் கல்வி மற்றும் மருத்துவ மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு கல்வி வகைக்காக ஐந்து நபருக்கும், மருத்துவ வகைக்காகமூன்று நபருக்கும் முறையே மன்றத்தின் உதவிகள் அறிவிக்கப்பட்டன.

மன்றத்தின் 106 வது செயற்குழு இன்ஷாஅல்லாஹ் அதே இம்பாலா உணவக கூட்டரங்கில் நடைபெறுமென்றும் அதன் விபரங்கள் பின்னர் அறியதரப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

சகோ.கிஸார் ஸலாஹுத்தீன் அனுசரணையில் இரவு உணவு பரிமாறப்பட்டு, சகோ.சீனா மொகுதூம் நன்றி கூற, சகோ.முஹம்மது நூஹு பிராத்திக்க துஆ கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

தகவல் மற்றும் படங்கள்:                                                                                                                          

காயல் நற்பணி மன்றம்,                                                                                                                    

ஜித்தா - சஊதி அரபிய்யா.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com