بسم الله الرحمن الرحيم
Saturday 15th December 2018 | 06 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ரியாத் கா.ந. மன்றத்தின் 61-வது செயற்குழு கூட்டம் நிகழ்வுகள்!அச்சிடுகமின்-அஞ்சல்
30 ஆகஸ்ட் 2017 காலை 12:26

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 61-வது செயற்குழு கூட்டம் கடந்த 11.08.2017 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் ரியாத்-மலஸ்சில் அமைந்துள்ள எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் சகோதரர் இப்ராஹீம் இர்ஷாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, பின்னர் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் S.B. முஹைதீன் வாசித்த பின் சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, அதனை தொடர்ந்து எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் சகோதரர் M.E.L. நுஸ்கி அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு: 

ஷிபா/இக்ரா அமைப்புகள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் என 20 விண்ணப்பங்களை வாசித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும்  குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது, இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் கடந்த ஐந்து வருடங்களாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு (2017) ரமலான் மாதத்தில் எமது மன்றத்தின் சார்பில் 226 குடும்பங்களுக்கு ரமலான் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் பெருநாளை முன்னிட்டு இந்த அனைத்து குடும்பத்தினருக்கும் ஒரு உரித்த நாட்டுக் கோழி வழங்கப்பட்டது.

ryd17

இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட ரியாத் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மது, மற்றும்  இத்திட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்த எமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சகோதரர் இஸ்மத் மற்றும் சகோதரர் சூஃபி ஆகியோருக்கும், இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கிட பொருளுதவி செய்த ரியாத் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில்; பணிகளில் ஈடுபட்ட அனைவர்களுக்கும் ரியாத் காயல் நல மன்ற நிர்வாகம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது.

 திருமண வாழ்த்து:

நடைபெற்று முடிந்த எம்மன்ற துணைப்பொருளாளர் சகோதரர் வாவு கிதுரு முஹம்மது மற்றும் பொதுக்குழு உறுப்பினர் செய்யத் முஹம்மத் புஹாரி ஆகியோரின் இல்ல திருமண வைபவத்திற்கும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 தேதி அன்று நடைபெறவுள்ள துபாய் காயல் நல  மன்றத்தின் துணை தலைவர் சகோதரர் சாளை ஷேக் சலீம் அவர்களது இல்ல திருமண வைபவத்திற்கும் எம்மன்றம் சார்பாக வாழ்த்து தெரிவித்ததுடன் மணமக்களின் இல்லற வாழ்வு சிறக்க பிராத்தனை செய்யப்பட்டது. 

 பார்வையாளர்கள் கருத்து: 

இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் ஆஷிக் ரஹ்மான், சகோதரர் சித்தீக் மற்றும் சகோதரர் சாகுல் ஹமீத் ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

குறிப்பாக, சமீபத்தில் ரியாத் நகரில் பணியில் சேர்ந்த சகோதரர் சாகுல் ஹமீத் அவர்கள் கூறுகையில் ரியாத் காயல் நலமன்றம் (RKWA)-வின் சீரிய செயல் பாடுகள் மற்றும் உதவி செய்யும் மனப்பான்மையுடைய உறப்பினர்களை கொண்ட இம்மன்றத்தின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாககும், நமதூருக்கு தேவையான காரியங்களை செய்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும்காலங்களில் தம்மால் இயன்ற பங்களிப்பினை செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்த நற்செயலுக்கான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் வழங்குவனாக என்ற பிரார்த்தனையோடு அமர்ந்தார்.

சகோதரர் M.E.L. நுஸ்கி, சகோதரர் கூஸ் அபூபக்கர், சகோதரர் இர்ஷாத் மற்றும் சகோதரர் நயீமுல்லாஹ் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.

இறுதியாக சகோதரர் K.S.M. அப்துல் காதர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

 தகவல்: 

தைக்கா சாஹிப்  

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com