தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில்,ஹஜ் பெருநாள் தொழுகை காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது! | ![]() | ![]() |
03 செப்டம்பர் 2017 மாலை 12:33 | |||
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், 02.09.2017. சனிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இன்று 07.30 மணிக்கு பெருநாள் தொழுகை காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்டது. அபூ ஸலாம் தொழுகையை வழிநடத்த, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட பேச்சாளர் அஸார் குத்பா உரையாற்றினார். பெண்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டிருந்த இத்தொழுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகிகளும் - அங்கத்தினருமான ஷம்சுத்தீன், சாளை முஹம்மத் அப்துல் காதிர், ‘ஜப்பான்’ சுலைமான், லக்கி மக்கீ, தேக் முஜீப், நகரப் பிரமுகர்களான டாக்டர் எம்.ஏ.அபுல்ஹஸன், எஸ்.இ.மரைக்கார் ஆலிம், வி.பி.ஷம்சுத்தீன், கோஸ் முஹம்மத், மவ்லவீ எம்.எம்.அஹ்மத் ஸாஹிப், ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் உட்பட நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவுற்றதும், ஆண்கள் பகுதியிலிருந்து 39 ஆயிரத்து 60 ரூபாயும், பெண்கள் பகுதியிலிருந்து 39 ஆயிரத்து 965 ரூபாயும் என மொத்தம் 79 ஆயிரத்து 25 ரூபாய் தொகையும், 4 கிராம் தங்க நாணயம் ஒன்றும் ஏழைகள் நல நிதிக்கான நன்கொடையாக சேகரிக்கப்பட்டது. தகவல் & படங்கள்: எஸ்.கே ஸாலிஹ்
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |