எல்.கே.மேனிலைப் பள்ளியின் பயின்றோர் பேரவை சிறப்புக் கூட்டம் இன்று 3ஆம் தேதி மாலை நடைபெறுகிறது! | ![]() | ![]() |
03 செப்டம்பர் 2017 மாலை 12:42 | |||
நடப்பாண்டு 1438 ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியின் பயின்றோர் பேரவை சிறப்புக் கூட்டம், 03.09.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 19.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து – பயின்றோர் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை:- நிறைவான அருளன்பின் இறையேகன் திருப்பெயர் போற்றி... காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியின் பேரன்புமிக்க முன்னாள் மாணவரே! தங்கள் மீது இறையோனின் சாந்தி, சமாதானம் என்றென்றும் நிலவட்டுமாக! வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நம் தாயகமாம் காயல்பட்டினம் வருவதையொட்டி, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 03.09.2018. ஞாயிற்றுக்கிழமையன்று (பெருநாளுக்கு மறுநாள்) இரவு 07.00 மணிக்கு, நம் பள்ளியின் பயின்றோர் பேரவை சங்கம நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெறவுள்ளது. நிகழ்முறை:- >>> இதுநாள் வரையிலான நமது செயல்பாடுகள்... >>> முன்னாள் மாணவர்கள் அனைவரையும் பயின்றோர் பேரவையில் இணைக்க செயல்திட்டம் வடிவமைப்பு... >>> பயின்றோர் பேரவைக்கு தற்காலிகமாக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு... >>> முறையான பொதுக்குழு, நிர்வாகத் தேர்தலுக்கு நாள் நிர்ணயம்... >>> பங்கேற்போர் கருத்துப் பரிமாற்றம்... >>> தீர்மானங்கள் நிறைவேற்றம்... >>> சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி நிறைவு... இதைப் படிக்கும் - எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தங்களுக்குப் பல்வேறு அலுவல்கள் இருக்கும் என்றாலும், இதன் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, இந்த மடலையே - உங்களை நேரில் வந்து அழைத்ததாகக் கருதி, தயவுசெய்து தவறாமல் நேரம் ஒதுக்கி - குறித்த நேரத்தில் கலந்து சிறப்பிக்கவும், தங்கள் மேலான நல்ல பல ஆலோசனைகளை வழங்கவும் அன்புடன் அழைக்கிறோம். அத்துடன், தங்களுக்கு அறிமுகமான – எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் இத்தகவலைப் பகிர்ந்து, அவர்களையும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்கச் செய்யுமாறும் வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வரும் தங்களைக் குறைவின்றி உபசரிக்க வசதியாக, தங்கள் வருகையை +91 94877 75765 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் உறுதி செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... எல்லாம் வல்ல இறைவன் நமது நற்காரியங்களை தனதருளால் ஏற்று, அதற்கான நற்கூலிகளை நம் யாவருக்கும் ஈருலகிலும் நிறைவாக வழங்கியருள்வானாக! தங்கள் இசைவையும், நல்வரவையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்... இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்:
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |