بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்முக நிகழ்ச்சிகள்!அச்சிடுகமின்-அஞ்சல்
03 செப்டம்பர் 2017 மாலை 12:56

                                                                                                     

                                                                                                    உமறுப்புலவர் முத்தமிழ் மன்றம்

                                                                                                        கலைத்திறனறி நிகழ்ச்சி

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 09.08.2017 அன்று மதியம் 1.30 மணியளவில் தமிழ்த்துறையின் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக கலைத்திறனறி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பானது. மன்றத் துணைச்செயலர் இரண்டாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி சு. மித்ரா வரவேற்புரை வழங்க, மன்ற மாணவச் செயலர் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி ஜா. பாத்திமா நிரோசா மன்ற அறிக்கை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகள் இயல், இசை, நாடகத்தின் வாயிலாக தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

மன்றச் செயலர் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி ஜா. பாத்திமா நிரோசா நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியைகளும் மாணவ மாணவிகளும் ஏற்பாடுகளைத் தமிழ்த்துறையினர் செய்திருந்தனர்.

       கணிதவியல் துறை மன்றக்கூட்டம்

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 09.08.2017 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் கணிதவியல் துறையின் சிறப்பு மன்றக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. தலைமை வகித்தார். மாணவி பா. நபீஸத் ஆமினா வரவேற்புரை வழங்க, கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி M.A., Ph.D. அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கணிதவியல் துறை உதவிப் பேராசிரியை செல்வி க. கலைவாணி M.Sc., M.Phil., அறிமுக உரையாற்றினார்.  

மேலப்பாளையம் அன்னை ஹாஜீரா கல்லூரியின் கணிதவியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் S. அனந்தலெட்சுமி M.Sc., M.Phil., Ph.D. கலந்து கொண்டு கணிதமுறையில் தீர்வு (Mathematical Optimization) பற்றி விரிவாக உரையாற்றினார். 

இரண்டாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி B. நிகிதாபன் நன்றி உரை வழங்க மன்றக்கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

                                                                                       ஆங்கிலத்துறை மன்ற கூடுகை 

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஆங்கிலத்துறை மன்றக் கூடுகை 03.08.17 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் திருமதி S. கிருஷ்ணவேணி M.A., M.Phil., வரவேற்புரை வழங்கினார்.

 

சவுதி அரேபியா, ஜூஸான் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் தமிமுல் அன்சாரி M.A., M.A (Ling)., M.Phil., L.L.B., Ph.D. 'Effective Oral Presentation' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். 

இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கிய மாணவி S. சோனியா நன்றியுரை வழங்கினார். இக்கூடுகையில் கல்லூரி முதல்வர் முனைவர்  திருமதி J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. ஆங்கிலத்துறை பேராசிரியர்கள், முதுகலை ஆங்கில இலக்கிய மாணவிகள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். 

ஆங்கிலத்துறை மன்றத் துணைத் தலைவர் செல்வி D. ப்ரவினா ப்ளஸ்சி ஃப்ளோரிடா M.A., M.Phil., இக்கூடுகையை ஏற்பாடு செய்தார்.

 வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

                                                                                         ஒரு நாள் திறன் பயிற்சி முகாம் 

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் வணிக செயலாட்சியல் துறையின் சார்பாக ஒரு நாள் திறன் பயிற்சி முகாமில் வாணிப தகவல் தொடர்பு மேலாண்மை (Skill Training for Youth on Business Communication Management) என்ற தலைப்பில் 03.08.2017 வியாழன் அன்று 10.00 மணியளவில் கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையில் துணைத்தலைவர் ஹாஜி வாவு S.A.R. சாகுல் ஹமீது B.E MS (USA) மற்றும் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt) முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைமறை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

       வணிக செயலாட்சியல் துறைத்தலைவர் பேராசிரியர் திருமதி செ.அ. ரஹ்மத் ஆமினா பேகம் MBA., M.Phil., MBA(HR) வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. அவர்கள் தொடக்க உரை வழங்கினார். ஹாஜி வாவு S.A.R. சாகுல் ஹமீது ஷாஜஹான் B.E MS(USA) அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசினை வழங்கினார். சிறப்பு விருந்தினர் Dr. S. மனோவ ராஜா M.A., M.Ed., MHRM., DD (University of Jeruselam)அவர்கள் வாணிப தகவல் தொடர்பு மேலாண்மை குறித்து மாணவிகளுக்கு பயிற்சிகளை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.

      இந்நிகழ்ச்சியில் 11 கல்லூரிகளிலிருந்து 101 மாணவிகளும் 6 பேராசியர்களும் கலந்து கொண்டனர். துணைச்செயலர்  ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் அவர்கள் நிறைவுரை வழங்கினர். அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் பங்கு பெற்ற அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் பேராசிரியருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். வணிக செயலாற்றியல் துறை பேராசிரியர் செல்வி த. சாந்தாதேவி MBA அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி துஆ ஓத, தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது. ஒரு நாள் திறன் பயிற்சி முகாமின் அனைத்து ஏற்பாடுகளையும் வணிக செயலாட்சியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகளும் செவ்வனே செய்திருந்தனர்.

                                                                    

                                                                                                    உமறுப்புலவர் முத்தமிழ் மன்றம்

                                                                                                          12ஆவது தொடக்கவிழா 

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20.07.2017 அன்று மதியம் 1.30 மணி அளவில் தமிழ் துறையின் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தின் 12ஆவது தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. மன்ற மாணவச் செயலர் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி ஜா. பாத்திமா நிரோசா வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் .இரா. அருணாஜோதி M.A., M.Phil., Ph.D. தலைமையுரையாற்ற, மன்ற மாணவச் செயலர் மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி ஜா. பாத்திமா நிரோசா மன்ற அறிக்கை வாசித்தார்.

விழாவில் ‘சத்தியத்தின் திருமகன் காமராஜ்’ என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் நடுவர்களாக தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர்களான திருமதி S. ஏஞ்சல் லதா M.A., M.Phil., முனைவர் S. சத்தியபாமா M.A., M.Phil., Ph.D. கலந்துகொண்டனர். இப்போட்டியில் முதல் இடத்தினை முதலாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் மாணவி C. மேரிஜெஸித்தாவும், இரண்டாம் இடத்தினை வணிகவியல் மாணவி T. ஹிபாவும் மூன்றாம் இடத்தினை முதலாமாண்டு பொருளியல் மாணவி P. வனமதியும் பெற்றனர்.

அதைத் தொடர்ந்து “சிவப்பதிகாரம் வழக்குரைக்காதை” என்னும் தலைப்பில் பகுதி தமிழ் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவியருக்கான நாடகப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் நடுவர்களாக கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி M.A., Ph.D. இருந்தனர். இப்போட்டியில் முதல் இடத்தினை இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவியர் குழுவும், இரண்டாம் இடத்தினை இரண்டாமாண்டு தமிழ் இலக்கிய மாணவியர் குழுவும், மூன்றாம் இடத்தினை இரண்டாமாண்டு இயற்பியல் மாணவியர் குழுவும் பெற்றனர்.

மன்ற மாணவத் துணைச்செயலர் இரண்டாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி சு. மித்ரா நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியைகளும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறையினர் செய்திருந்தனர்.

                                                                                               ஆங்கிலத்துறை மன்ற கூடுகை

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் ஆங்கிலத்துறை மன்ற கூடுகை 14.07.2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் திருமதி S. கிருஷ்ணவேணி M.A., M.Phil., வரவேற்புரை வழங்கினார்.

திருச்செந்தூர், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் திருT. சேவியர் ப்பெஸ்கி ஆரோக்கியராஜ் M.A., M.Phil., T.S. Eliot's "Hamlet and His Problems" and Simon De Beauvoir's "Women as other" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இக்கூடுகையில் அனைத்து ஆங்கிலத்துறை பேராசிரியர்களும், இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவிகளும், முதுகலை இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவிகளும் கலந்துக் கொண்டார்கள்.

கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் செல்வி D. ப்ரவினா ப்ளஸ்சி ப்ளோரிடா M.A., M.Phil., அவர்கள் நன்றியுரை வழங்க இக்கூடுகை இனிதே நிறைவு பெற்றது.  

                                                                                             இயற்பியல் துறை மன்றக் கூட்டம் 

காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.17 வியாழக்கிழமை மதியம் 1.45 மணியளவில் இயற்பியல் துறையின் சிறப்பு மன்றக் கூட்டம் நடைபெற்றது. இவ்விழா கிராத் ஓத தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் J. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. தலைமை வகித்தார். இயற்பியல் துறை மன்ற செயலாளர் முத்து பாப்பா வரவேற்புரை வழங்கினார்.

சுவரொட்டி போட்டிகளுக்கு நடுவர்களாக கல்லூரி இயக்குநர் முனைவர் திருமதி மெர்சி ஹென்றி M.A., Ph.D. கணிதவியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வி S. சுதா M.Sc., M.Phil., தகவல் தொழில் நுட்பவியல் பேராசிரியர் செல்வி J. அனுசியா MCA., ஆகிய மூவரும் தலைமை வகித்தனர்.

ஒவ்வொரு மாணவரும் தனது  திறமைகளை வெளிபடுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்தனர். முதலாமாண்டு இயற்பியல் துறை மாணவி M. சீதா லெட்சுமி நன்றியுரை கூறினார். விழாவின் முடிவாக துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் மன்ற கூட்டம் இனிதே நிறைவுப் பெற்றது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com