بسم الله الرحمن الرحيم
Friday 14th December 2018 | 05 ரபீஉல் ஆஹிர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
பேருந்து நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு தேவையான காலியிடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை! அச்சிடுகமின்-அஞ்சல்
06 செப்டம்பர் 2017 காலை 09:02

காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. அதன் புதிய அலுவலகத்தை – பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெற்றிடத்தில் 

பேருந்து நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு தேவையான காலியிடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட நடப்பது என்ன? குழுமம் கோரிக்கை! 

60 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த காயல்பட்டினம் தபால் நிலையம், தற்போது புதிய இடம் தேடி வருகிறது. பொருத்தமான புதிய இடம் - காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகம் என முடிவு செய்து - தபால்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக, நகராட்சியிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். 

இருப்பினும் இது சம்பந்தமாக எவ்வித முன்னேற்றம் இல்லாததை தொடர்ந்து, இக்கோரிக்கையை வலியுறுத்தி - நடப்பது என்ன? குழுமம் மூலமாக - நகரின் பொது மக்கள், அனைத்து ஜமாத்துக்கள், கோவில் - தேவாலயங்கள் ஆகியவற்றிடம் இருந்து கையெழுத்து பெற்று, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும், மனு சமர்ப்பிக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் மூலமாகவும் இதனை வலியுறுத்த நடப்பது என்ன? குழுமம் கோரியது. 

தபால்துறை மூலமாக கோரிக்கை முறையாக கிடைக்கபெற்றப்பின் இது சம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தெரிவித்ததை அடுத்து, தபால் துறை மீண்டும் இது சம்பந்தமான கோரிக்கையை - நகராட்சிக்கு வழங்கியுள்ளது. நகல் இணைக்கப்பட்டுள்ளது. 

போதிய இடம் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ளது என்பதை வரைப்படத்துடன் எடுத்துரைத்து, தபால்துறை கோரிக்கை கடிதத்தையும் இணைத்து, பேருந்து நிலைய வளாகத்தை - மாவட்ட ஆட்சியரை நேரில் பார்வையிட கோரி - இன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது. 

இவண், 
நிர்வாகிகள், 
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம். 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com